|
26/10/17
| |||
தெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்
மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்!
Posted by vasuki
தமிழ்வாணன் எழுதியுள்ள நூல், ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’.
தமிழ்வாணன் எழுதிய ‘(வீரபாண்டிய) கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்!’ என்ற
அந்த நூலில் உள்ள பல செய்திகள் நமக்கு ஆச்சியமாக இருக்கிறது. தெலுங்கு
மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர் கெட்டிபொம்முலு
வம்சத்தில் வந்த கட்டபொம்முலு-வை, பந்தலு என்ற தெலுங்கன் எடுத்த
திரைப்படத்தில் வைக்கப்பட்ட போலி பட்டபெயர்தாம் வீரபாண்டியன்
கட்டபொம்மன். கட்டபொம்முலு-வின் முன்னோர்கள் ஆந்திர மாநிலம்,
பெல்லாரி-யிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு
குடிபெயர்ந்து வந்தவர்கள். பந்தலு என்ற தெலுங்கன் எடுத்த திரைப்படத்தில்
காட்டப்பட்ட கதைக்கும் உண்மையான கட்டபொம்முலு-வைப் பற்றி நாம் எண்ணிக்
கொண்டிருப்பதற்கும் பல முரண்பாடுகள் இருப்பதை பார்க்க இயலும்.

புத்தகத்தை படித்து விட்டு ஒரு சாதாரண தமிழன் என்ன விமர்சனம்
செய்துள்ளார் என தெரிந்து கொள்வோம் :
முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு
என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப்
பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக்
கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும்
தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆக மொத்தத்தில்
கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் முதலில் தெளிவு கொள்வோம். இனி
கட்டபொம்மனின் உண்மையான பெயரான “கட்டபொம்முலு” என அழைப்போம்.
கட்டபொம்முலு- வின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான். இவன் மகன்
கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்முலு என்பவனே முதல்
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736). இவரே கட்டபொம்முலு
கொள்ளுப் பாட்டனும் ஆவார்.
கட்டபொம்முலு – வுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட
ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன்
கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே
குறிப்பிட விரும்புகிறேன்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி கட்டபொம்முலு –
வுக்கும் கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முலு – வோ தவணை மேல்
தவணை சொல்லித் தட்டிக் கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட
ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து
பார்த்து விளக்கம் தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம்
பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்முலு குறிப்பிட்ட நாளில்
ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார்.
கட்டபொம்முலு தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன்
குற்றாலத்திற்குக் கிளம்பி விடுகிறார். கட்டபொம்முலு ஜாக்சனை
சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார்.
அங்கும் கட்டபொம்முலு பார்க்க ஜாக்சன் மறுத்து விடுகிறார். இப்படியே
ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி,
சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி
இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்முலு ஜாக்சன்
சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும்
கட்டபொம்முலு-வை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்முலு இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம்
கொடுத்தான். வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய
பணத்தையும் கையோடு கொண்டு வந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு
கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான்
செய்யவில்லை என்று கட்டபொம்முலு மறுத்துக் கூறுகிறார். இறுதியாக,
“நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன்
அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்க வேண்டும்” என்று ஜாக்சன்
கூறியதும் கட்டபொம்முலு அங்கிருக்க அஞ்சி, தப்பிவிடுகிறார். அவர் தப்பும்
போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளைக்கார கொலை செய்யப்படுகிறான்.
கட்டபொம்முலு அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளையும் கைது
செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்முலு வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு
அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும்
ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார், தமிழ் வாணன். அப்படி என்றால்
கட்டபொம்முலு வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும்.
அதாவது கட்டபொம்முலு-வை தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும்
நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்முலு, தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பாளையத்தை விடுத்து மற்றைய
பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று
கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார், தங்கள் பாளையத்தில்
கட்டபொம்முலு கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப்
பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்முலு தலையிட்டு குழப்பம்
ஏற்படுத்தியது, மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப்
பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன்
ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது என கொள்ளை விரிகிறது. இது போன்ற
புகார்களை அடுத்து கட்டபொம்முலு-வை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து
விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்முலு ஜாக்சனை சந்திக்க முதலில் ஐந்து
நாட்களைக் கடத்துகிறான். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென்
பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே
கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில்
தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்முலு தப்பித்ததே
திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்
கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்முலு-வை பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்தில் உள்ள,
நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு
கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்முலு புதுக்கோட்டைப்
பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன்
கட்டபொம்முலு-வைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத்
தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்முலு-வைப் பிடித்து
பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களை சுட்டிக்
காட்டியே தூக்கில் கட்டபொம்முலு-வை போடுகிறார்கள்.
நமது வருத்தங்கள் எவையென்றால் :
– ஒரு தெலுங்கன் கட்டபொம்முலு- என்பவனை மறைத்து தமிழன் என்று பரப்புரை செய்வது…
– வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவனை முழுக்க முழுக்க
வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.
– எட்டப்பன் என்ற ஒருவர் பற்றிய செய்தியை, தமிழ்வாணன் அவர்கள்
புத்தகத்தில் எங்குமே குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக்
கொடுத்தான் என்று எட்டப்பன் என்று ஒரு தமிழன் மீது பலி போடப்பட்டுள்ளது.
– ஆக, கட்டபொம்முலு என்று எடுக்கப்பட்ட திரைப்படம் வரலாற்றுப் பிழையாகவே
இருக்கிறது. அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும்
கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனங்களை எப்படி அவன் தமிழில் பேசியிருப்பான்.
திரைப்படத்திற்காக இவையெல்லாம் புகுத்தப்பட்டிருக்கிறது என்பதை இனியாவது
நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஊடகங்களும் தெலுங்கு
கட்டபொம்முலு-வைப் பற்றி உண்மை செய்திகளை மட்டும் இனி வாசிக்க வேண்டும்.
தமிழர் வரலாற்றை மறைக்கலாகாது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக