சனி, 10 பிப்ரவரி, 2018

சேகர் ரெட்டி பணமுதலை சிபிஐ விசாரணை ஆர்பிஐ கைவிரிப்பு பணத்தாள் தங்கம் பதுக்கல்

aathi tamil aathi1956@gmail.com

26/10/17
பெறுநர்: எனக்கு
தமிழும் தமிழனும்
சேகர் ரெட்டியிடம் இருந்த 2000 தாள் எந்த இடத்தில் இருந்து
வினியோகிக்கப்பட்டது என்பது கூடத்தெரியாதாம் ரிசர்வ் வங்கிக்கு... இதை
நாம நம்பித்தான் ஆகனும்... இந்தியா என்ற வல்லாதிக்க முகத்தை வைத்து
இந்திய அரசு, ரிசர்வ் வங்கி என்ற இலுமினாட்டி கட்டமைப்பு நடத்தும்
தனியார்/பன்னாட்டு நிறுவன வளர்ப்பும், மண்ணின் மக்கள் அடிமைகாக
இருப்பதையும் புரிந்து கொள்ளாமல் "நான் இந்தியன்" எனும் முட்டாப்பயலுகளத
்தான் என்ன செய்யனு தெரியல...
இப்ப 2000 தாளை பதுக்கிய சேகர் ரெட்டி நல்லவனாயிட்டான். கால்கடுக்க
நின்று பணம் மாற்றியவன் கெட்டவனாகிவிட்டான். இதுதான் இந்திய அரசு காலம்
காலமாக நடத்தும் மக்கள் விரோத ஆட்சி!
ஆனால் இதுகூட பரவாயில்லடா... 2000 தாளில் சிப் இருக்கு, இனி யாரும்
தப்பமுடியாதுனு எஸ்வி.சேகர் போன்ற ஆட்கள் பேசியதைத்தான்டா இன்னும் மறக்க
முடியல!

https://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-faces-big-set-back-sekar-reddy-case-299529.html

ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்.... ரூ2,000 நோட்டு விவகாரத்தில்
அந்தர் பல்டி அடித்த ஆர்பிஐ!
Published:October 25 2017, 15:33 [IST]
ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்-வீடியோ
சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணப் பதுக்கல் வழக்கு
ஊற்றி மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து
பறிமுதல் செய்யப்பட்ட ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள் குறித்து
தங்களிடம் எந்த விவரமுமே இல்லை என அந்தர் பல்டி அடித்துவிட்டது ஆர்பிஐ.
தமிழக அரசின் பிரதான ஒப்பந்ததாரராக இருந்தவர் சேகர் ரெட்டி. முதல்வர்
எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும்
மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி.
குவியல் குவியலாக தங்கம்
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நாடு
முழுவதும் புதிய ரூ2,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக
சோதனை நடத்தப்பட்டன. சென்னையில் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில்
ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள், தங்க கட்டிகள் பெருமளவு
பறிமுதல் செய்யப்பட்டன.
விவரம் கேட்ட சிபிஐ
இவ்வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார். சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ2,000 நோட்டுகள் எந்த
வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை
ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.
விவரமே இல்லையே
ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு
அப்படியே வங்கிகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு
மாதம் கழித்தே நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், ரூபாய் நோட்டுகளின்
சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி
வைத்தோம் என்கிற பணி தொடங்கியது. சிபிஐ குறிப்பிட்டுள்ள ரூ2,000
நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை
என கைவிரித்துவிட்டது.
சிபிஐக்கு கடும் பின்னடைவு
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் இனி மேல் நடவடிக்கை எதுவும் செய்ய
முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது. அனேகமாக சேகர் ரெட்டி மீதான
வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிமுக வந்தேறி ஆதிக்கம் கறுப்பு பணம் 500 100 நோட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக