சனி, 10 பிப்ரவரி, 2018

பாண்டியர் வடுகர் போர் மறவர் தளபதிகள் வன்னியர் பட்டம் ஐவர் ராசாக்கள்

Saturday, 12 December 2015

திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்

திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்


நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.




பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் விஜயநகர தளபதி விட்டலராயன்(வெங்கலராஜன்) படையே எதிர்த்து போரிட்டு மடிந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர்களின் கல்வெட்டு செய்திகள் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது. அது அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது.

திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான் பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி விட்டலராயனுக்கும் வெங்கல ராஜனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் 'இளவேலங்கால் கல்வெட்டு' குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.


போரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்டியன் நடுகள் எடுத்துள்ளான்.
இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.


இந்த  கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு:
300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன்
வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்"
301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்"
302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்"
303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் "
304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்
இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்"

305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்"
306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்"
307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்"
308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"பெயர் தெரியவில்லை"
309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் வெங்கலாராஜ வடுக போரில் பட்டான்"



இவை அனைத்தும் அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது. தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது

4 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  3. வில்லவ வன்னியர் மற்றும் வாணாதிராயர் வன்னியர்

    வில்லவ வன்னியர்

    வன்னியர் பட்டம் முதலில் திராவிட வில்லவர் மற்றும் பாண குலங்களால் பயன்படுத்தப்பட்டது. வில்லவரின் வானவர் துணைக்குழு காட்டில் வசிப்பவர்கள். வானவர் பழங்காலத்தில் மர முத்திரையுடன் கூடிய கொடியையும் , புலி முத்திரையையும் பயன்படுத்தியுள்ளார் . மரம் மற்றும் புலி சின்னங்கள் காட்டுடன் தொடர்புடையவை. சோழ வம்சம் வானவர் வம்சமாகும். வானவர் குலத்தினர் சேர, சோழ, பாண்டிய வம்சங்களை பாதுகாத்தனர். சேர வம்சத்தைக் காத்த வானவர் சேர வன்னியர், பாண்டிய வம்சத்தைக் காத்த வானவர் பாண்டிய வன்னியர், சோழ வம்சத்தைக் காத்த வானவர் சோழ வன்னியர்.
    இந்த குலங்கள் அனைத்தும் திராவிட வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவை.

    வாணாதிராயர்-வன்னியர்

    விஜயநகர நாயக்கர்கள் தங்களுடைய பாண வாணாதிராயர் தளபதிகளுடன் 1400 களில் 18 பாண்டிய வன்னியர்களை தோற்கடித்து அவர்களைக் கொன்றனர். அனைத்து 18 பாண்டிய வன்னியர் பாண்டிய அரசையும் தோற்கடித்த பின்னரே நாயக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தினர் வில்லவர் வம்சங்களின் வடக்கு உறவினர்கள் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின். பாணர்களூம் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். பாணர்கள் வில்லவரின் பரம எதிரிகள் மற்றும் உறவினர்கள். விஜயநகர நாயக்கர்கள் கிஷ்கிந்தா-அனேகுண்டியைச் சேர்ந்த பலிஜா நாயக்கர்கள்.

    பலிஜா நாயக்கர்களின் முன்னோர்கள் வானரர்கள். பாண தலைவர்கள் குலசேகரன், நாடவா, நாடவரு, நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர், வாணாதிராயர், வன்னியர் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் அழிவுக்குப் பிறகு மதுரை பாண குலத்தாரால் ஆளப்பட்டது. வில்லவர் மற்றும் பாணர்கள் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். மதுரையை ஆண்ட பாணர்கள் தங்களை மகாபலி வானதிராயர் அல்லது மகாவிலி வாணாதிராயர் என்றும் அழைத்தனர்.

    நாகர்

    மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் வடக்கிலிருந்து குடியேறிய நாகர்கள் மற்றும் இன ரீதியாக வில்லவர் அல்லது பாண-வாணாதிரயர் குலங்களுடன் தொடர்பில்லாதவர்கள். நாகர்கள் திராவிட வில்லவர்-மீனவர் குலத்தின் எதிரிகள்.

    நாக குலங்களுடன் கலக்கும் வாணாதிராயர்

    பாண்டியன் மற்றும் சோழர்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு வானவர்-வன்னியர்களுக்குப் பதிலாக வாணாதிராயர்கள் பாளையக்காரராக நியமிக்கப்பட்டனர். இந்த தெலுங்கு வாணாதிராயர்கள் தங்களை பாண்டியர்கள் என்றும் நாயக்கர்கள் என்றும் வன்னியர்கள் அல்லது வாணவராயர் என்றும் அழைத்தனர். இந்த வாணாதிராயர்-வன்னியர் கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலத் தலைவர்களாக ஆனார்கள். பிற்காலத்தில் வாணாதிராயர் - வன்னியர் உள்ளூர் தமிழ் நாக குலங்களுடன் திருமணம் செய்து கொண்டு தங்களை மறவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். வாணாதிராயர்கள் கவுண்டர்களின் தலைவர்களாகவும் ஆனார்கள்.

    பாளையக்காரர்

    விஜயநகரப் பேரரசு தமிழர்களை பாளையக்காரராக நியமித்ததில்லை. அனைத்து பாளையக்காரர்களும் வாணாதிராயர் அல்லது வன்னியர் அல்லது கன்னட லிங்காயத் குலங்கள் என்றும் அழைக்கப்படும் தெலுங்கு பாணர்கள். மறவர் பாளையக்காரர்களில் பெரும்பாலோர் முதலில் வாணாதிராயர்-வன்னியர்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் கவுண்டர்கள், கள்ளர்கள் மற்றும் மறவர் மத்தியில் பிரபுக்களாக மாறினர். திருநெல்வேலியைச் சேர்ந்த தெற்கு வன்னியர் முன்னாள் ஜமீன்தார்களில் சிலர் தாங்கள் க்ஷத்திரியர்கள் என்றும் மறவர் அல்ல என்றும் இன்னும் கூறுகின்றனர். வன்னியர், வானவராயர், வாணடியார் என்பன கி.பி.1377க்குப் பிறகு தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கு பாண வம்சத்தின் பட்டப்பெயர்கள்.

    பதிலளிநீக்கு
  4. வில்லவ வன்னியர் மற்றும் வாணாதிராயர் வன்னியர்

    இலங்கை

    இலங்கையில் இந்த வன்னியர்கள் 1377 க்குப் பிறகு வெள்ளாளர்களிடையே திருமணம் செய்து கொண்டனர். முற்குஹர் வழிவந்த மறவர்கள், முக்குவர் போன்ற நாக குலத்தவர்களுக்கு வன்னியர் பட்டம் வழங்கப்பட்டு மட்டக்களப்பு மண்டல நிர்வாகிகள் ஆக்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த பண்டார வன்னியன் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் தமிழ் வில்லவர் உயர்குடி இனத்துடன் தொடர்புடையவர் அல்ல.


    கரைப்பிட்டி வன்னியன்

    1500களில் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை கரைப்பட்டி வன்னியனைக் குறிப்பிடுகிறது. கரைப்பிட்டி வன்னியன் தனது கள்ளர் மெய்க்காவலர்களான கத்திக்கார நம்பிகளுடன் வந்தான். கரைப்பிட்டி வன்னியன் தனது மெய்ப்பாதுகாவலரின் மகள் ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்தபோது கத்திகார நம்பிகள் அவரைக் கொன்றனர். இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லப் பயந்து கத்திகார நம்பிகள் சாணார்களின் வேலையாட்களாக இருந்த நளவர்களுடன் சேர்ந்தார்கள். அதன் பிறகு சில நளவர்கள் நம்பிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.(யாழ்பாண வைபவ மாலை).


    பல்லவ வன்னியர்கள்

    பல்லவ வன்னியர்கள் திரௌபதியின் பாஞ்சால நாட்டிலிருந்து குடியேறியவர்கள். பல்லவ வன்னியர் அவர்களின் வடக்கு பாண வம்சாவளியின் காரணமாக வட பலிஜா, திர்கலா அல்லது திகலா என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் பாண்டிய வன்னியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.


    இவ்வாறு வன்னியர் பட்டங்கள் பல்வேறு இன மக்களால் பயன்படுத்தப்பட்டன.

    பதிலளிநீக்கு