|
25/10/17
| |||
Mathi Vanan
வட தமிழ்நாடு எனும் சிந்தனை கோளாறு..
1) வட தமிழ்நாடு என்பது வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலத்திற்கு
ஒரு மாநிலம் எனும் திட்டம். ஆனால் அங்கு வன்னியர்கள் 35 சதம் பேரே..
வன்னியர்களுக்கு ஒரு மாநிலம் என்பதற்கு மீதமுள்ள 65 சத பிறசாதி மக்கள்
தன் தென் தமிழ்நாட்டு உறவுகளை பிரிய சொல்லும் திட்டமே வட தமிழ்நாடு
மாநிலம்.
2) பறையர் உள்ளிட்ட பிறசாதிகள் தமிழ்நாடு முழுதும் பரவியிருக்க அவர்கள்
தம் உறவுகளை அறுத்தெரிய சொல்லும் வட தமிழ்நாடு மாநிலம் என்பது ஒரு மானுட
அநீதி.
3) தமிழ்நாட்டு மக்கள் 7 கோடி, 40 எம்.பி என இந்தியத்துடன் போராடி உரிமை
பெறவேண்டிய காலத்தில், 20 எம்.பி களாக சுருங்கி தமிழ்நாட்டை இரண்டு
மூன்றாக பிரிப்பதால் தமிழினத்தின் உரிமைகள் என்றும் இந்திய
பாராளுமன்றத்தில் நிறைவேறாது. இருக்கும் உரிமைகளும் பறிபோகும்..
4) வட தமிழ்நாடு வந்தால் வன்னியர்கள் வாழ்வு வாழ்வாங்கு ஆகும் என்பது
அடிப்படையற்ற சிந்தனை. வட தமிழ்நாடு வந்தால் நெய்வேலியை விட்டுவிட்டு
இந்தியா ஓடிவிடுமா? அரியலூர் சிமெண்ட் ஆலைகளை வன்னியர்களிடம்
ஒப்படைத்துவிட்டு பிர்லா பிராமணர் ஓடிவிடுவாரா?
5) வட தமிழ்நாடு வந்தால் சென்னை தெலுங்கர் மார்வாடியிடமிருந்து
வன்னியர்கள் கைக்கு வருமா? லட்சகணக்கில் குடியேறும் வட இந்திய
தொழிலாளிகள் மீண்டும் வட இந்தியாவுக்கே ஓடிவிடுவாரா?
6) வட தமிழ்நாடு வந்தால் மீத்தேன், நிலக்கரி, ஹைட்ரோகார்பன்,
பெட்ரோகெமிக்கல் அழிவு திட்டங்கள் வராமல் நின்றுவிடுமா?
7) வட தமிழ்நாடு வந்தால் வன்னியர் ஆட்சி அமையுமா? அப்போதும் திராவிட
கட்சிகளும் பிறசாதிகளும் இருக்கத்தான் செய்வார்கள். இன்று வட
தமிழ்நாட்டில் 5 சத ஓட்டு வாங்கும் பாமக அப்போது மட்டும் எப்படி புதிதாக
ஓட்டு வாங்கும்?
வட தமிழ்நாடு வந்தால் எந்த மாற்றமும் வராது. இன்னும் தீவிரமாக இந்திய
திட்டங்கள் புகும். வடநாட்டு தொழிலாளி புகுவர். அதே தெலுங்கு மார்வாடி
அம்பானி அதானி நிறுவனங்கள் நுழையும்.
இன்றைய தமிழின தமிழ்நாட்டு
பிரச்சனைகள் புரியாத சில வன்னிய அமைப்புகளின் சிந்தனை கோளாறே வட
தமிழ்நாடு கோரிக்கை..
வட தமிழ்நாட்டில் மக்களுக்கு வாய்ப்புகள் குறைவதாக கருதினால், அது ஈசல்
போல நுழையும் இந்திய திட்டங்களும் சட்டங்களுமே அடிப்படை என
புரியவேண்டும்.
அந்தந்த மாவட்ட மக்களுக்கே முன்னுரிமை எனும் 371 சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்.
தமிழ்நாட்டு உரிமை, தமிழின உரிமை, அந்தந்த மாவட்ட உரிமை என போராடும்
அறிவை இந்த வட தமிழ்நாடு அமைப்புகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
அதை தமிழ்த்தேசிய விதை தூவிய தமிழரசன் உதித்த வன்னிய குல இளைஞர்களே
முன்னின்று செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக