சனி, 10 பிப்ரவரி, 2018

சாதி மதம் வட்டாரம் பற்றி பிரபாகரன் எழுதிய கவிதை

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan
"நாம் செல்லும் இடமெல்லாம்…
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன…
எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!"
1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்
எழுதிய "நாம் அணிவகுத்துள்ளோம்" என்ற கவிதையில் வரும் வரிகள் இவை..
ஈழத்தில் பிரபாகரனின் தலைமையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியத்தின்
அடிப்படையே சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு தான். தமிழர்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும் பிரதேசம் சாதி மதம் போன்றவற்றுக்கு எதிராக தான்
தமிழ் தேசியம் அணிவகுத்தது.
"விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப்
பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்தார்கள்.
1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக
நெறிகளையும் உருவாக்கும் போது . சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது
ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ்
கொண்டு வந்தார்கள்"
இனத்தின் ஒற்றுமை மற்றும் விடுதலைக்கு முன் சாதி மதங்களை எல்லாம் அவர்கள்
ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.
பிரபாகரன் என்றொரு இளைஞன், தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடும் முன்
தனது கொள்கைகளை முதலில் வகுத்து கொண்டான்.
"சாதி, மதம் பிரதேசம் போன்ற பிரிவுகள் தான் தமிழினத்தின் சாபக்கேடு
என்பதை உணர்ந்து, தனது கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அத்தகைய பிரிவுகளை
சமூகத்தில் இருந்து நீக்க முயற்சி எடுத்தான்."
தான் கொண்ட லட்சியத்திலும், கொள்கையிலும் ஒரு சமரசமும் செய்யாமல்
போரிட்டான், அரசியல் செய்தான்.
அடிமை விலங்கை உடைக்க ராணுவம் கட்டி போராடிய அவர் சாதித்ததை ஏன் எந்த ஒரு
இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சிக்கு வந்த திராவிடத்தால் சாதிக்க முடியவில்லை?

Aathimoola Perumal Prakash
சாதி ஓடிவிட்டது என்றால் சாதிவாதம் என்று பொருள்.
பிரதேசம் ஓடிவிட்டது என்பது பிரதேசவாதம்.
புலிகள் சாதி அடையாளத்தையோ மத அடையாளத்தையோ கைவிட கூறியதே இல்லை.

தேசியத்தலைவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக