|
23/10/17
| |||
வால்பாறை, ஜன.27-போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான வால்பாறை
தியாகிகளின் நினைவு தினம் சிஐடியு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1957ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்றுவால்பாறை தேயிலை தோட்டத்தில்
பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதியஒப்பந்தத்தை
அமல்படுத்தக்கோரி செங்கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இந்ததொழிலாளர்கள் மீது காவல்துறையினர் கடுமையான அடக்குமுறைகளை
கட்டவிழ்த்து விட்டது. மேலும், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்
சூட்டில் தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் அப்பாறு, முத்துமுடி எஸ்டேட்
தொழிலாளி பழனி,ஹைபாரஸ்ட் எஸ்டேட் தொழிலாளி குருசாமி மற்றும் சிறுகுன்றா
எஸ்டேட் தொழிலாளி ஞானமுத்து ஆகியோர் குண்டடி பட்டு உயிரிழந்தனர்.
இத்தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சிஐடியு சார்பில்
நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி, சிஐடியு மற்றும் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்
இவ்வாண்டுக்கானநினைவு தின நிகழ்ச்சி ஞாயிறன்று வால்பாறை ஸ்டேன்மோர்
எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராஜூ தலைமை
வகித்தார்.சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன்,நீலகிரி மாவட்டச்
செயலாளர் எல்.தியாகராஜன் ஆகியோர் தியாகிகள் நினைவு தின உரையாற்றினார்.
மேலும், தியாகிகளின் குடும்பத்தாருக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நகரசுத்தி தொழிலாளர்
சங்க மாவட்டச் செயலாளர்ரத்தினகுமார், கோவை மாவட்ட தோட்ட தொழிலாளர்
பொதுச்செயலாளர் கே.டி.கே.தனபாண்டியன் மற்றும் ராஜா, பழனிச்சாமி,
மணிகண்டன், செந்தில்குமார், சார்லஸ், மதிவாணன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

படுகொலை அரச வன்முறை பயங்கரவாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக