புதன், 7 பிப்ரவரி, 2018

முதலியார் வெட்டிய மூன்று பொதுக்கிணறு பள்ளர் பறையர் தெரு 1910

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
திருச்சி திருவானைக்காவில் 4 கிலோமீட்டரில் கல்லணை சாலையில் உள்ள ஊர்
திருவளர்ச்சோலை.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த சிற்றூரில் பிச்சை எடுத்துக்கொண்டு
வாழ்ந்த முத்து என்பவர் தான் பிச்சை எடுத்து சிறுகச் சிறுகச் சேர்த்த 400
ரூபாயினைக் கொண்டு மூன்று கிணறுகளை உண்டாக்கினார். அதுவும் இரு கிணறுகள்
ஹரிஜன மக்கள் வாழும் பள்ளத்தெரு , பறத்தெருவில் மூன்றாவது கிணறு ஜாதி
ஹிந்துக்கள் வாழும் இடம்.
முதலியார் ஜாதியை சேர்ந்த முத்து அக்ஷய வருடம் மார்கழி மாதம் 18
(2/1/1927) அமரரானார்.
இவர் வெட்டிய கிணறு தனக்கு என ஒருவர் உரிமை கொண்டாட இந்த வழக்கு விஜாராணை
ஸ்ரீரங்கம் பதிவாளர் அலுவலகத்தில்...
1942 கல்வெட்டு ஒன்றின் ஆய்வு, மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று இனி
பிரச்சனை ஏற்படாதிருக்க வேண்டும் என்பதால் முத்துவின் கொடை கல்வெட்டாய்
நிறுவப்பட்டது .
மன்னர்கள், செல்வந்தர்கள் முதலியோரின் தானதர்மங்களை பறைசாற்றும்
கல்வெட்டுகள் பல்லாயிரம், ஆனால் ஒரு நல்ல உள்ளம் பிச்சை எடுத்து
சமுதாயத்துக்கு உதவிய தர்ம சிந்தையை காட்டும் தர்மவான் முத்து
முதலியாரினைப் பற்றிய கல்வெட்டு ஆச்சர்யம்.
பழங்காசு இதழின் கோஷம் இதுதான் .. “மக்களுடைய வரலாறு”, மக்களுக்காகவே வரலாறு,”

சாதியொழிப்பு சாதிஒழிப்பு கொடை வள்ளல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக