|
23/10/17
| |||
October 22, 2017
பெருமாள் தேவன் at 5:31 AM காமராஜர் தோல்வியுற்றது ஏன்?
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஒரு
பெருந்தலைவராக, மைல் கல்லாக
கருதப்பட்டு வருகிறார். அவர்
நல்லாட்சியை வழங்கினார் என்று
அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்
கொள்ளப்படுகிறது. அவரது ஆட்சியை
மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் பல
தரப்பினராலும் பேசப்படுகிறது.
காமராஜரின் பணிகள் அளப்பரியவை. அவர்
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய
பணியும் அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமும் ஈடிணையில்லாதது.
அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும்
அவரது ஆட்சி சிறப்பை பறை
சாற்றுகின்றன.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் ஒரு 18
வயது இளைஞனால் தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பின் அவர் சார்ந்த கட்சியும்
தமிழகத்தில் வீழ்ச்சி பெற்று இன்று வரை
ஒரு பெயரளவுக் கட்சியாக இருந்து
வருகிறது. காமராஜரின் ஆட்சி
மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின்
ஆட்சி காலமுமே நடுநிலையுடன்
ஆய்வு செய்யப்படவில்லை, அதேபோல
காமராஜரின் தோல்விக்கான காரணமும்
நடுநிலையுடன் ஆய்வு
செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்.
எப்படி ராஜாஜியின் வீழ்ச்சிக்குப் பிறகு
காமராஜர் அதிகாரத்திற்கு வருகிறாரோ
அதேபோல தமிழகத்தில் காங்கிரஸ்
கட்சியின் வீழ்ச்சிக்கு காந்தி, நேரு,
ராஜாஜி, காமராஜர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் நடத்தைகள் காரணமாக
அமைந்தன. காமராஜரின் தோல்வி என்பது
காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆகும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ்
கட்சியின் பணி அளப்பரியது.
அதேவேளையில் முதல் உலகப்போர்
நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கும் இரண்டாம் உலகப்போர்
நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கும் பெருத்த வேறுபாடு
இருந்தது.
அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த காந்தி
அந்தக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் பல நேரங்களில் ஆங்கிலேயருடன்
இணக்கமாக பயணிக்க வேண்டியதாயிற்று. அது காங்கிரஸ் கட்சிக்கு பல
பின்னடைவுகளை ஏற்படுத்தியது. பல ஜனநாயக மரபுகளை கொலை செய்தது. பிராந்திய
உணர்வுகளை அலட்சியப்படுத்தியது.
இவற்றையெல்லாம் அமைதியாக கவனித்து வந்த மக்கள் இறுதியில் வாக்கு மூலமாகவே
காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்டினர். குறிப்பாக அகிம்சை பற்றி பேசி
வந்த காங்கிரஸ் சுதந்திரம் அடைந்த பிறகு துப்பாக்கியை கையிலேந்தி
தாண்டவமாடியது. இது மக்கள் மனதில் தீரா வெறுப்பை ஏற்படுத்தியது. அதுவே
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியது. காமராஜர்
காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதினார்.
காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு காமராஜரின் ஆட்சி பற்றி மட்டும்
சிலாகித்துப் பேசுவோர் காமராஜரின் தோல்வி குறித்து நடுநிலையுடன்
பேசுவதில்லை. காமராஜரின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்வதே இந்தக்
கட்டுறையின் நோக்கமாகும்.
காமராஜரின் தோல்விக்கான காரணங்கள்:-
1. 1942-ம் ஆண்டு பம்பாய் மாநாட்டில்
காங்கிரஸ் கட்சி ‘வெள்ளையே
வெளியேறு’ தீர்மானத்தை
நிறைவேற்றியது. காந்தி
முன்னிலையில், அந்த தீர்மானம்
சிறுபிள்ளைத் தனமானது என்று
கண்டித்து விட்டு ராஜாஜி அங்கிருந்து
வெளியேறினார். இந்த தீர்மானத்தை
தொடர்ந்து வெள்ளை அரசாங்கம் காங்கிரஸ்
தலைவர்களையெல்லாம் கைது செய்து
சிறை வைத்தது. இதனால் கொந்தளித்த
மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள்
காவலர்கள், அரசு அலுவலகங்கள் என
எல்லாவற்றையும் தாக்கத் தொடங்கினர்.
இது ஆகஸ்டு புரட்சி என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த மக்கள்
போராட்டத்தை ரவுடிகள், காலிகள்
போராட்டம் என்று சொல்லி கண்டித்தது.
அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்
சேர்ந்து செயல்பட்ட ராஜாஜி அவ்வாறு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக்
கொடுத்து கைது செய்ய உதவி வந்தார்.
பின்னாளில் அந்தப் போராட்டம் காங்கிரஸ்
கட்சியினரின் போராட்டம்தான் என்று
அறிவிக்க வேண்டிய நிலைக்கு நேரு
தள்ளப்பட்டார்.
2. துவக்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில்
ராஜாஜி கோஷ்டி - சத்தியமூர்த்தி
கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள்
இருந்தன. பின்னர் அது ராஜாஜி கோஷ்டி -
காமராஜ் கோஷ்டி என்று மாறியது. இவர்களிடையே தொடர்ச்சியாக பதவிப் போட்டி
நடைபெற்று வந்தது.
3. காந்தியின் மகனுக்கு ராஜாஜியின்
மகளை திருமணம் முடித்திருந்த
காரணத்தால் காந்தி காமராஜரை விட
ராஜாஜியே காங்கிரஸ் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்றே
விரும்பினார். அதோடு அவருக்கு
காமராஜர் மீது நல்ல அபிப்ராயம்
கிடையாது. 1946-ம் ஆண்டு தமிழகத்தில்
சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி,
காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜரிடம் ஆலோசனை செய்யாமல்
ராஜாஜியிடம் ஆலோசனை செய்தார்.
மேலும் தமிழக காங்கிரஸில் ஒரு (காமராஜ்) கோஷ்டி இருப்பதாக ‘க்ளிக்’ என்ற
வார்த்தையின் மூலமாக குறிப்பிட்டு
தனது கட்டுரையில் எழுதினார். இதனால்
ஆத்திரமடைந்த காமராஜர் காந்திக்கு
எதிராக அறிக்கை வெளியிட்டதோடு
காங்கிரஸ் நாடாளுமன்றக்
குழுவிலிருந்தும் விலகினார்.
4. பாகிஸ்தான் கொடுத்து விட்டால் ‘முஸ்லீம்களால் பிரச்சனை இருக்காது,
முஸ்லீம்களுக்கு தனி நாடு
கொடுக்காதது, பாண்டவர்களுக்கு நாடு
கொடுக்காதது போன்றது’ என்ற
பிரிவினை கருத்தை முன்மொழிந்து
அதை பிரச்சாரம் செய்தார் ராஜாஜி.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ்
கட்சியை ஆட்சியில் அமர்த்த காமராஜர் அத்தகைய ராஜாஜியின் உதவியை நாட
வேண்டியதாயிற்று.
5. இரண்டாம் உலகப்போர் வெள்ளையருக்குச்
சாதகமாக திரும்புகிறது என்பதை
உணர்ந்த காந்தி ராஜாஜியின் நட்பை
நாடினார். காந்தி உண்ணாவிரதம் இருந்த
காலங்களில் அவருக்காக வெள்ளையரிடம்
தூது சென்றவர் ராஜாஜியே.
6. ஆகஸ்டு புரட்சியில் ஈடுபட்ட
புரட்சியாளர்களை ரவுடிகள், காலிகள்
என்று கூறி அவர்களை காட்டிக் கொடுத்த
ராஜாஜி பின்னாளில் காங்கிரஸ் கட்சியின்
கை ஓங்குவது கண்டு மீண்டும் காங்கிரஸ்
கட்சிக்குள் நுழைய முயற்சித்தார். அவர்
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜருக்குத் தெரியாமல்
திருச்செங்கோட்டில் ஒரு மாநாட்டை
நடத்தி அதில் தன்னை மாகாண காங்கிரஸ்
கமிட்டி உறுப்பினராக தேர்வு
செய்துகொண்டார். ஆனால் அது
செல்லாது என்று காமராஜர் அறிவித்தார்.
7. ராஜாஜி தமிழக காங்கிரஸ் தலைவர்
பதவியை அடைய முயற்சிப்பதை அறிந்த
காங்கிரஸ் நிர்வாகிகள்
திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு
நடத்தி ராஜாஜியின் தேர்வு செல்லாது
என்று அறிவித்தனர். ஆனால்
திருப்பரங்குன்றம் மாநாடு நடந்த இரவே
காங்கிரஸ்காரர்களுக்கும்
காந்தியவாதிகளுக்கும் இடையே ஒரு
ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்
அடிப்படையில் தான் தங்களுக்கு விரோதி
அல்ல என்றும், தேவர் காரணமாகவே
திருப்பரங்குன்றம் தீர்மானம் கொண்டு
வரப்பட்டது என்றும் காமராஜர் ராஜாஜிக்கு
ஒரு எழுத்துப்பூர்வமான தகவலை
அனுப்பி வைத்தார்.
8. 1946-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில்
மாகாண பிரதமர் (முதல்வர்) தேர்வு
நடைபெற்றது. தெலுங்கரான டி. பிரகாசம்
போட்டியிட்டார். காமராஜர் முத்துரங்க
முதலியாரை முன்மொழிந்தார். ஆனால்
தெலுங்கு உறுப்பினர்கள் அதிகமாக உள்ள
காரணத்தால் டி. பிரகாசம் வெற்றி
பெற்றார். அவர் காமராஜர் பரிந்துரைத்த
அமைச்சர்களின் பெயர்களை ஏற்கவில்லை.
இவ்வாறு கட்சித் தலைவரான
காமராஜருக்கும் டி. பிரகாசத்திற்கும்
கருவேறுபாடு ஏற்பட்டது.
9. கருத்து வேறுபாடு முற்றிய
நிலையில் 1947-ம் ஆண்டு காமராஜரின்
ஆதரவு பெற்ற, தெலுங்கு பேசக் கூடிய
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்
கட்சியின் புதிய முதல்வராக நம்பிக்கை
வாக்கெடுப்பில் வெற்றி பெறுகிறார்.
அவர் கொண்டு வந்த வகுப்புவாரி
இடஒதுக்கீட்டுச் சட்டம், அறநிலைய
மசோதாவுக்கு காங்கிரஸ்
கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது.
முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்த
காமராஜர் பின்னர் அவருக்குப் பதிலாக
குமாரசாமி ராஜாவை முதல்வராக்க
முடிவு செய்தார்.
10. 1949-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி
குமாரசாமிராஜா காங்கிரஸ் கட்சியின்
புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த குமாரசாமி ராஜா 1942-ம் ஆண்டு
நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியின்போது
பெண்களை மானபங்கப் படுத்திய வெள்ளை
காவல் அதிகாரிகளுக்கு தேனீர்
விருந்துகொடுத்து உபசரித்தவர் ஆவார்.
11. சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு
முதல் பொதுத் தேர்தல் வந்தது.
தேர்தலுக்கு முன்பாக சென்னை
மாகாணத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம்
நிலவியது. பஞ்சத்தை சமாளிக்க முதல்வர்
குமாரசாமி குடும்பம் ஒன்றுக்கு ஆறு
அவுன்ஸ் அரிசியே வழங்கப்படும் என்று
அறிவித்தார். இது தேர்தலில் காங்கிரஸ்
கட்சிக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
12. 1947-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்
கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கோட்டா
பெர்மிட் முறைகள் மூலமாக லட்சம்
லட்சமாக சம்பாதிக்கத் துவங்கினர்.
அதேபோல முன்பு காங்கிரஸ் கட்சிக்கு
எதிராக செயல்பட்டவர்கள் காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்து தாங்களும் காங்கிரஸ்
கட்சியினர் என்று சொல்லி செயல்படத்
துவங்கினர். இது மக்கள் மத்தியில்
காங்கிரஸ் மீதான வெறுப்பை உருவாக்கி இருந்தது.
13. 1952 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக
காம்யூனிஸ்ட்கள், திமுக, பெரியார்,
தேவர் போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.
இதனால் ஒருங்கிணைந்த சென்னை
ராஜ்யத்தில் மொத்தம் 375 தொகுதிகளில்
எதிர்க்கட்சியினர் 223 தொகுதிகளை
கைப்பற்றினர். காங்கிரஸ் கட்சியால் 152
தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற
முடிந்தது. இந்தத் தோல்வி
காமராஜருக்கு பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்தது.
14. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜர், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ராஜாஜியின் உதவியை நாடினார்.
பிரகாசம் தலைமையிலான ஐக்கிய
ஜனநாயக முன்னணி 168 சட்டமன்ற
உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று
தங்களையே ஆட்சியமைக்க அழைக்க
வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார்.
15. பொறுப்பு முதல்வராக இருந்த
குமாரசாமி ராஜா சென்னை சட்டமன்ற
மேலவை உறுப்பினராக ராஜாஜியை
நியமிக்க வேண்டும் என்று ஆளுநரிடம்
வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு
அவரை நியமித்த ஆளுநர் ஸ்ரீ பிரகாசா,
ராஜாஜியை அழைத்து ஆட்சியமைக்க
அழைப்பு விடுத்தார். ராஜாஜியின்
நியமனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
16. அப்போது 152 மற்றும் 168 இதில் எது
பெரிய எண்ணிக்கை என்று கேள்வி
எழுப்பியபோது 152 தான் பெரியது,
அதனால்தான் அவர்களை ஆட்சியமைக்க
அழைத்தாக ஆளுநர் ஸ்ரீபிரகாசா விளக்கம்
அளித்தார். மேலும் ஒரே கட்சி, சின்னத்தில்
போட்டியிட்டவர்கள் காங்கிரஸ்
கட்சியினர்தான், பல கட்சி, பல சின்னங்களில்
போட்டியிட்ட சுயேட்சைகளை ஒரே
கட்சியாக ஏற்க முடியாது என்று விளக்கம்
அளித்தார். இந்திய அரசியலில் நடத்தப்பட்ட
முதல் ஜனநாயக படுகொலை இதுவே.
17. இவ்வாறு தனது தந்திரத்தால்
ஆட்சியமைத்த ராஜாஜி, காங்கிரஸ்
கட்சியை எதிர்த்து போட்டியிட்டு
வெற்றி பெற்ற எஸ்.எஸ். படையாட்சி,
மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோரையும்,
அவர்களின் கட்சிகளான உழவர் உழைப்பாளர்
கட்சி, காமன் வீல் கட்சிகளை காங்கிரஸ்
கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
மாணிக்க வேல் நாயக்கருக்கு மட்டும்
அமைச்சர் பதவி கொடுத்த ராஜாஜி
அவர்களின் கட்சிகளை கூட்டணி
கட்சிகளாகவோ அல்லது அமைச்சரவையை
கூட்டணி அமைச்சரவையாகவோ அமைக்கத்
தயாராக இல்லை.
18. 1952-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர்
தனது பதவியை ராஜினாமா செய்ததால்
அருப்புக்கோட்டை பாராளுமன்ற
தொகுதிக்கு இடைத் தேர்தல்
நடத்தப்பட்டது. இந்த தேர்தலே, அரசு
இயந்திரத்தைக் கொண்டு பொதுமக்களை
அச்சுறுத்தும் வகையில்
கெடுபிடியுடன் நடத்தப்பட்டது. குறுக்கு
வழியில் அதிகாரத்திற்கு வந்த ராஜாஜி
முதல்வராக இருந்த மமதையில், ‘‘நான்
வேண்டுமானால் காங்கிரஸ் வேட்பாளரை
வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று சவால்
விடுக்கும் வகையில் வாக்காளர்களிடம்
வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மக்கள்
பார்வர்டு பிளாக் வேட்பாளரை வெற்றி
பெறச் செய்தனர். எங்கே எதிர்க்கட்சிகள்
ராஜினாமா செய்யக் கோருவார்களோ
என்று அஞ்சிய ராஜாஜி தங்கள் கட்சி
பெரும்பான்மை பலம் கொண்ட
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு
என்ற ஒரு கேலிக் கூத்தை
அரங்கேற்றினார். இது காங்கிரஸ்
கட்சியினர் ஜனநாயகத்தின் மீதாக நடத்திய
இரண்டாவது தாக்குதல் ஆகும்.
19. ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் ‘குலக் கல்வித் திட்டம்’ என்று
அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக
கண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜாஜி
பதவி விலகும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில் பிராமணர்,
பிராமணர் அல்லாதோர் அரசியல் பரவலாகப்
பேசப்பட்டு வந்தது. பிராமணரான
சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக்
கொண்ட காமராஜர் பதவிக்கு வருவதற்காக ‘பிராமணர், பிராமணர் அல்லாதோர்’
பிரச்சாரத்தை துருப்புச் சீட்டைப்
பயன்படுத்துகிறார்.
20. 1953-ம் ஆண்டு ஆந்திராவுடன்
இணைக்கப்பட்ட சித்தூர் பகுதியை
தமிழகத்துடன் இணைக்க கோரி போராட்டம்
நடத்திய ம.பொ.சி.க்கு ஆதரவாக
திமுகவினரும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட
தமிழர்களை நேரு முட்டாள்கள் என்று
கூறினார். கல்லக்குடியில் கருணாநிதி
தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானர்கள்.
போராட்டக்காரர்கள் மீது தடியடியும்
நடத்தப்பட்டது.
பெருமாள் தேவன் at 5:31 AM காமராஜர் தோல்வியுற்றது ஏன்?
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஒரு
பெருந்தலைவராக, மைல் கல்லாக
கருதப்பட்டு வருகிறார். அவர்
நல்லாட்சியை வழங்கினார் என்று
அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்
கொள்ளப்படுகிறது. அவரது ஆட்சியை
மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் பல
தரப்பினராலும் பேசப்படுகிறது.
காமராஜரின் பணிகள் அளப்பரியவை. அவர்
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய
பணியும் அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமும் ஈடிணையில்லாதது.
அவர் காலத்தில் கட்டப்பட்ட அணைகளும்
அவரது ஆட்சி சிறப்பை பறை
சாற்றுகின்றன.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைவர் ஒரு 18
வயது இளைஞனால் தோற்கடிக்கப்பட்டார்.
அதன் பின் அவர் சார்ந்த கட்சியும்
தமிழகத்தில் வீழ்ச்சி பெற்று இன்று வரை
ஒரு பெயரளவுக் கட்சியாக இருந்து
வருகிறது. காமராஜரின் ஆட்சி
மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின்
ஆட்சி காலமுமே நடுநிலையுடன்
ஆய்வு செய்யப்படவில்லை, அதேபோல
காமராஜரின் தோல்விக்கான காரணமும்
நடுநிலையுடன் ஆய்வு
செய்யப்படவில்லை என்றே கூறவேண்டும்.
எப்படி ராஜாஜியின் வீழ்ச்சிக்குப் பிறகு
காமராஜர் அதிகாரத்திற்கு வருகிறாரோ
அதேபோல தமிழகத்தில் காங்கிரஸ்
கட்சியின் வீழ்ச்சிக்கு காந்தி, நேரு,
ராஜாஜி, காமராஜர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களின் நடத்தைகள் காரணமாக
அமைந்தன. காமராஜரின் தோல்வி என்பது
காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆகும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ்
கட்சியின் பணி அளப்பரியது.
அதேவேளையில் முதல் உலகப்போர்
நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கும் இரண்டாம் உலகப்போர்
நடைபெற்ற காலத்தில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கும் பெருத்த வேறுபாடு
இருந்தது.
அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்த காந்தி
அந்தக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் பல நேரங்களில் ஆங்கிலேயருடன்
இணக்கமாக பயணிக்க வேண்டியதாயிற்று. அது காங்கிரஸ் கட்சிக்கு பல
பின்னடைவுகளை ஏற்படுத்தியது. பல ஜனநாயக மரபுகளை கொலை செய்தது. பிராந்திய
உணர்வுகளை அலட்சியப்படுத்தியது.
இவற்றையெல்லாம் அமைதியாக கவனித்து வந்த மக்கள் இறுதியில் வாக்கு மூலமாகவே
காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்டினர். குறிப்பாக அகிம்சை பற்றி பேசி
வந்த காங்கிரஸ் சுதந்திரம் அடைந்த பிறகு துப்பாக்கியை கையிலேந்தி
தாண்டவமாடியது. இது மக்கள் மனதில் தீரா வெறுப்பை ஏற்படுத்தியது. அதுவே
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தியது. காமராஜர்
காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதினார்.
காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு காமராஜரின் ஆட்சி பற்றி மட்டும்
சிலாகித்துப் பேசுவோர் காமராஜரின் தோல்வி குறித்து நடுநிலையுடன்
பேசுவதில்லை. காமராஜரின் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்வதே இந்தக்
கட்டுறையின் நோக்கமாகும்.
காமராஜரின் தோல்விக்கான காரணங்கள்:-
1. 1942-ம் ஆண்டு பம்பாய் மாநாட்டில்
காங்கிரஸ் கட்சி ‘வெள்ளையே
வெளியேறு’ தீர்மானத்தை
நிறைவேற்றியது. காந்தி
முன்னிலையில், அந்த தீர்மானம்
சிறுபிள்ளைத் தனமானது என்று
கண்டித்து விட்டு ராஜாஜி அங்கிருந்து
வெளியேறினார். இந்த தீர்மானத்தை
தொடர்ந்து வெள்ளை அரசாங்கம் காங்கிரஸ்
தலைவர்களையெல்லாம் கைது செய்து
சிறை வைத்தது. இதனால் கொந்தளித்த
மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள்
காவலர்கள், அரசு அலுவலகங்கள் என
எல்லாவற்றையும் தாக்கத் தொடங்கினர்.
இது ஆகஸ்டு புரட்சி என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த மக்கள்
போராட்டத்தை ரவுடிகள், காலிகள்
போராட்டம் என்று சொல்லி கண்டித்தது.
அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்
சேர்ந்து செயல்பட்ட ராஜாஜி அவ்வாறு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்டிக்
கொடுத்து கைது செய்ய உதவி வந்தார்.
பின்னாளில் அந்தப் போராட்டம் காங்கிரஸ்
கட்சியினரின் போராட்டம்தான் என்று
அறிவிக்க வேண்டிய நிலைக்கு நேரு
தள்ளப்பட்டார்.
2. துவக்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில்
ராஜாஜி கோஷ்டி - சத்தியமூர்த்தி
கோஷ்டி என்று இரண்டு கோஷ்டிகள்
இருந்தன. பின்னர் அது ராஜாஜி கோஷ்டி -
காமராஜ் கோஷ்டி என்று மாறியது. இவர்களிடையே தொடர்ச்சியாக பதவிப் போட்டி
நடைபெற்று வந்தது.
3. காந்தியின் மகனுக்கு ராஜாஜியின்
மகளை திருமணம் முடித்திருந்த
காரணத்தால் காந்தி காமராஜரை விட
ராஜாஜியே காங்கிரஸ் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்றே
விரும்பினார். அதோடு அவருக்கு
காமராஜர் மீது நல்ல அபிப்ராயம்
கிடையாது. 1946-ம் ஆண்டு தமிழகத்தில்
சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி,
காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜரிடம் ஆலோசனை செய்யாமல்
ராஜாஜியிடம் ஆலோசனை செய்தார்.
மேலும் தமிழக காங்கிரஸில் ஒரு (காமராஜ்) கோஷ்டி இருப்பதாக ‘க்ளிக்’ என்ற
வார்த்தையின் மூலமாக குறிப்பிட்டு
தனது கட்டுரையில் எழுதினார். இதனால்
ஆத்திரமடைந்த காமராஜர் காந்திக்கு
எதிராக அறிக்கை வெளியிட்டதோடு
காங்கிரஸ் நாடாளுமன்றக்
குழுவிலிருந்தும் விலகினார்.
4. பாகிஸ்தான் கொடுத்து விட்டால் ‘முஸ்லீம்களால் பிரச்சனை இருக்காது,
முஸ்லீம்களுக்கு தனி நாடு
கொடுக்காதது, பாண்டவர்களுக்கு நாடு
கொடுக்காதது போன்றது’ என்ற
பிரிவினை கருத்தை முன்மொழிந்து
அதை பிரச்சாரம் செய்தார் ராஜாஜி.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ்
கட்சியை ஆட்சியில் அமர்த்த காமராஜர் அத்தகைய ராஜாஜியின் உதவியை நாட
வேண்டியதாயிற்று.
5. இரண்டாம் உலகப்போர் வெள்ளையருக்குச்
சாதகமாக திரும்புகிறது என்பதை
உணர்ந்த காந்தி ராஜாஜியின் நட்பை
நாடினார். காந்தி உண்ணாவிரதம் இருந்த
காலங்களில் அவருக்காக வெள்ளையரிடம்
தூது சென்றவர் ராஜாஜியே.
6. ஆகஸ்டு புரட்சியில் ஈடுபட்ட
புரட்சியாளர்களை ரவுடிகள், காலிகள்
என்று கூறி அவர்களை காட்டிக் கொடுத்த
ராஜாஜி பின்னாளில் காங்கிரஸ் கட்சியின்
கை ஓங்குவது கண்டு மீண்டும் காங்கிரஸ்
கட்சிக்குள் நுழைய முயற்சித்தார். அவர்
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜருக்குத் தெரியாமல்
திருச்செங்கோட்டில் ஒரு மாநாட்டை
நடத்தி அதில் தன்னை மாகாண காங்கிரஸ்
கமிட்டி உறுப்பினராக தேர்வு
செய்துகொண்டார். ஆனால் அது
செல்லாது என்று காமராஜர் அறிவித்தார்.
7. ராஜாஜி தமிழக காங்கிரஸ் தலைவர்
பதவியை அடைய முயற்சிப்பதை அறிந்த
காங்கிரஸ் நிர்வாகிகள்
திருப்பரங்குன்றத்தில் ஒரு மாநாடு
நடத்தி ராஜாஜியின் தேர்வு செல்லாது
என்று அறிவித்தனர். ஆனால்
திருப்பரங்குன்றம் மாநாடு நடந்த இரவே
காங்கிரஸ்காரர்களுக்கும்
காந்தியவாதிகளுக்கும் இடையே ஒரு
ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்
அடிப்படையில் தான் தங்களுக்கு விரோதி
அல்ல என்றும், தேவர் காரணமாகவே
திருப்பரங்குன்றம் தீர்மானம் கொண்டு
வரப்பட்டது என்றும் காமராஜர் ராஜாஜிக்கு
ஒரு எழுத்துப்பூர்வமான தகவலை
அனுப்பி வைத்தார்.
8. 1946-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில்
மாகாண பிரதமர் (முதல்வர்) தேர்வு
நடைபெற்றது. தெலுங்கரான டி. பிரகாசம்
போட்டியிட்டார். காமராஜர் முத்துரங்க
முதலியாரை முன்மொழிந்தார். ஆனால்
தெலுங்கு உறுப்பினர்கள் அதிகமாக உள்ள
காரணத்தால் டி. பிரகாசம் வெற்றி
பெற்றார். அவர் காமராஜர் பரிந்துரைத்த
அமைச்சர்களின் பெயர்களை ஏற்கவில்லை.
இவ்வாறு கட்சித் தலைவரான
காமராஜருக்கும் டி. பிரகாசத்திற்கும்
கருவேறுபாடு ஏற்பட்டது.
9. கருத்து வேறுபாடு முற்றிய
நிலையில் 1947-ம் ஆண்டு காமராஜரின்
ஆதரவு பெற்ற, தெலுங்கு பேசக் கூடிய
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காங்கிரஸ்
கட்சியின் புதிய முதல்வராக நம்பிக்கை
வாக்கெடுப்பில் வெற்றி பெறுகிறார்.
அவர் கொண்டு வந்த வகுப்புவாரி
இடஒதுக்கீட்டுச் சட்டம், அறநிலைய
மசோதாவுக்கு காங்கிரஸ்
கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது.
முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்த
காமராஜர் பின்னர் அவருக்குப் பதிலாக
குமாரசாமி ராஜாவை முதல்வராக்க
முடிவு செய்தார்.
10. 1949-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி
குமாரசாமிராஜா காங்கிரஸ் கட்சியின்
புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த குமாரசாமி ராஜா 1942-ம் ஆண்டு
நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியின்போது
பெண்களை மானபங்கப் படுத்திய வெள்ளை
காவல் அதிகாரிகளுக்கு தேனீர்
விருந்துகொடுத்து உபசரித்தவர் ஆவார்.
11. சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு
முதல் பொதுத் தேர்தல் வந்தது.
தேர்தலுக்கு முன்பாக சென்னை
மாகாணத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம்
நிலவியது. பஞ்சத்தை சமாளிக்க முதல்வர்
குமாரசாமி குடும்பம் ஒன்றுக்கு ஆறு
அவுன்ஸ் அரிசியே வழங்கப்படும் என்று
அறிவித்தார். இது தேர்தலில் காங்கிரஸ்
கட்சிக்கு பெரும் பின்னடைவை
ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
12. 1947-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்
கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கோட்டா
பெர்மிட் முறைகள் மூலமாக லட்சம்
லட்சமாக சம்பாதிக்கத் துவங்கினர்.
அதேபோல முன்பு காங்கிரஸ் கட்சிக்கு
எதிராக செயல்பட்டவர்கள் காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்து தாங்களும் காங்கிரஸ்
கட்சியினர் என்று சொல்லி செயல்படத்
துவங்கினர். இது மக்கள் மத்தியில்
காங்கிரஸ் மீதான வெறுப்பை உருவாக்கி இருந்தது.
13. 1952 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக
காம்யூனிஸ்ட்கள், திமுக, பெரியார்,
தேவர் போன்றோர் பிரச்சாரம் செய்தனர்.
இதனால் ஒருங்கிணைந்த சென்னை
ராஜ்யத்தில் மொத்தம் 375 தொகுதிகளில்
எதிர்க்கட்சியினர் 223 தொகுதிகளை
கைப்பற்றினர். காங்கிரஸ் கட்சியால் 152
தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற
முடிந்தது. இந்தத் தோல்வி
காமராஜருக்கு பெரும் அதிர்ச்சியைக்
கொடுத்தது.
14. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த
காமராஜர், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ராஜாஜியின் உதவியை நாடினார்.
பிரகாசம் தலைமையிலான ஐக்கிய
ஜனநாயக முன்னணி 168 சட்டமன்ற
உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று
தங்களையே ஆட்சியமைக்க அழைக்க
வேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தார்.
15. பொறுப்பு முதல்வராக இருந்த
குமாரசாமி ராஜா சென்னை சட்டமன்ற
மேலவை உறுப்பினராக ராஜாஜியை
நியமிக்க வேண்டும் என்று ஆளுநரிடம்
வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு
அவரை நியமித்த ஆளுநர் ஸ்ரீ பிரகாசா,
ராஜாஜியை அழைத்து ஆட்சியமைக்க
அழைப்பு விடுத்தார். ராஜாஜியின்
நியமனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
16. அப்போது 152 மற்றும் 168 இதில் எது
பெரிய எண்ணிக்கை என்று கேள்வி
எழுப்பியபோது 152 தான் பெரியது,
அதனால்தான் அவர்களை ஆட்சியமைக்க
அழைத்தாக ஆளுநர் ஸ்ரீபிரகாசா விளக்கம்
அளித்தார். மேலும் ஒரே கட்சி, சின்னத்தில்
போட்டியிட்டவர்கள் காங்கிரஸ்
கட்சியினர்தான், பல கட்சி, பல சின்னங்களில்
போட்டியிட்ட சுயேட்சைகளை ஒரே
கட்சியாக ஏற்க முடியாது என்று விளக்கம்
அளித்தார். இந்திய அரசியலில் நடத்தப்பட்ட
முதல் ஜனநாயக படுகொலை இதுவே.
17. இவ்வாறு தனது தந்திரத்தால்
ஆட்சியமைத்த ராஜாஜி, காங்கிரஸ்
கட்சியை எதிர்த்து போட்டியிட்டு
வெற்றி பெற்ற எஸ்.எஸ். படையாட்சி,
மாணிக்கவேல் நாயக்கர் ஆகியோரையும்,
அவர்களின் கட்சிகளான உழவர் உழைப்பாளர்
கட்சி, காமன் வீல் கட்சிகளை காங்கிரஸ்
கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.
மாணிக்க வேல் நாயக்கருக்கு மட்டும்
அமைச்சர் பதவி கொடுத்த ராஜாஜி
அவர்களின் கட்சிகளை கூட்டணி
கட்சிகளாகவோ அல்லது அமைச்சரவையை
கூட்டணி அமைச்சரவையாகவோ அமைக்கத்
தயாராக இல்லை.
18. 1952-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர்
தனது பதவியை ராஜினாமா செய்ததால்
அருப்புக்கோட்டை பாராளுமன்ற
தொகுதிக்கு இடைத் தேர்தல்
நடத்தப்பட்டது. இந்த தேர்தலே, அரசு
இயந்திரத்தைக் கொண்டு பொதுமக்களை
அச்சுறுத்தும் வகையில்
கெடுபிடியுடன் நடத்தப்பட்டது. குறுக்கு
வழியில் அதிகாரத்திற்கு வந்த ராஜாஜி
முதல்வராக இருந்த மமதையில், ‘‘நான்
வேண்டுமானால் காங்கிரஸ் வேட்பாளரை
வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று சவால்
விடுக்கும் வகையில் வாக்காளர்களிடம்
வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மக்கள்
பார்வர்டு பிளாக் வேட்பாளரை வெற்றி
பெறச் செய்தனர். எங்கே எதிர்க்கட்சிகள்
ராஜினாமா செய்யக் கோருவார்களோ
என்று அஞ்சிய ராஜாஜி தங்கள் கட்சி
பெரும்பான்மை பலம் கொண்ட
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு
என்ற ஒரு கேலிக் கூத்தை
அரங்கேற்றினார். இது காங்கிரஸ்
கட்சியினர் ஜனநாயகத்தின் மீதாக நடத்திய
இரண்டாவது தாக்குதல் ஆகும்.
19. ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் ‘குலக் கல்வித் திட்டம்’ என்று
அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக
கண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜாஜி
பதவி விலகும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். இந்தச் சூழலில் பிராமணர்,
பிராமணர் அல்லாதோர் அரசியல் பரவலாகப்
பேசப்பட்டு வந்தது. பிராமணரான
சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக்
கொண்ட காமராஜர் பதவிக்கு வருவதற்காக ‘பிராமணர், பிராமணர் அல்லாதோர்’
பிரச்சாரத்தை துருப்புச் சீட்டைப்
பயன்படுத்துகிறார்.
20. 1953-ம் ஆண்டு ஆந்திராவுடன்
இணைக்கப்பட்ட சித்தூர் பகுதியை
தமிழகத்துடன் இணைக்க கோரி போராட்டம்
நடத்திய ம.பொ.சி.க்கு ஆதரவாக
திமுகவினரும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட
தமிழர்களை நேரு முட்டாள்கள் என்று
கூறினார். கல்லக்குடியில் கருணாநிதி
தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானர்கள்.
போராட்டக்காரர்கள் மீது தடியடியும்
நடத்தப்பட்டது.
காமராஜர் விமர்சனம்
search வால்பாறை தேயிலை தொழிலாளர் துப்பாக்கிச்சூடு 1957 காங்கிரஸ் fbtamildata
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக