புதன், 20 செப்டம்பர், 2017

மட்டக்களப்பு மான்மியம் சாதியம் கலிங்கர் படையாட்சி முக்குகர் படையாச்சி முக்குவர் ஈழம் தமிழகம் சாதி தொடர்பு முன்பின் முரண்

தமிழ்ச் சமூகம் குறித்த புரிதலுக்கு மட்டக்களப்பு மிக முக்கியமான இடமாகும்.தமிழகத
்துடன் ஒப்பிடும்போது இலங்கையும்,கேரளமும் 13 ஆம் நூற்றாண்டுக்கு பிந்திய
விஜய நகர,நாயக்கர் ஆட்சிகளின் பெரும் சமூக மாற்றங்களுக்கு உட்படாத
பகுதிகள் என்பதால் பண்டைத் தமிழகத்தின் பல்வேறுகூறுகள் இன்றும்
காணப்படுவதால் ஆய்வாளர்கள் இந்தப் பிரதேசங்களைப் புறக்கணித்து தமிழினம்
குறித்து முழுமையான புரிதலுக்கு வரவே முடியாது.
இலங்கையிலும்கூட தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியைவிட கிழக்கு குறிப்பாக
மட்டக்களப்பு,அம
்பாறைப் பகுதிகளே நாயக்கர் ஆட்சியின் சமூகத் தாக்கம் இல்லாத பழமையை
அதிகம் தக்க வைத்துள்ளன.
மட்டக்களப்பு மான்மியம் ஒல்லாந்தர் காலத்தில் தொகுக்கப்பட்டு
எழுதப்பட்டதாக கருதப்படுகின்றத
ு.முறைப்படியான வரலாறாக இல்லாமல் ஐதீகங்களாகவே வரலாறு கூறிச்
செல்லப்படுவதால் இவற்றில் கூறப்பட்டுள்ள வரலாற்றை வேறு புற ஆதாரங்களின்
அடிப்படையிலேயே பிரித்தறிய முடியும்.
அதேவேளை இதில் கூறப்படும் சமூகவியல் பகுதிகள் ஒரு பொக்கிஷம் என்றே
கூறமுடியும்.இலங்கையின் வரலாற்றில் ஆட்சியுரிமைக்கு இரண்டு குலங்கள்
மோதிக்கொண்டதை வரலாறு காட்டுகின்றது.பாண்டியரும் கலிங்கரும்.
கலிங்கர்,வங்கர்,சிங்கர் என்ற மூன்று கிழக்கிந்திய திராவிடக்குடிகள
ையே முக்குலத்தவர் என்றும் அவர்களையே குகன் என்ற இராமாயண பாத்திரத்துடன்
தொடர்புபடுத்தி முக்குகர் என்றும் இந்த நூல் குறிப்பிடுகின்ற
து.இன்னுமொரு இடத்தில் முக்குகர் என்பதில் ஏழு குடிகள் குறிப்பிடப்படுகின்றன.
மட்டக்களப்பு முக்குவர் என்பது ஒரு சாதியல்ல என்பதும் யாழ்ப்பாணத்து
வெள்ளாளர் போன்று பலகுடிகளின் பொதுவான பெயர் என்பதும் இந்த நூலிலிருந்து
புரிந்துகொள்ளக்
கூடிய முக்கியமான கூறு.
மட்டக்களப்பு மான்மிய சமூக சித்தரிப்பில் ஒன்றுக்கொன்று முரணான இடங்கள்
இருந்தாலும் ஒரு மேலோட்டமான வாசிப்பில் மனதில் உருவாக்கிய சித்திரத்தையே
எழுதுகிறேன்.இது குறித்து மட்டக்களப்பு சமூகத்துள்ளேயே வாழும் ஒருவராலேயே
முழுமையான புரிதலுடன் எழுத முடியும்.
"இந்நூல் கலிங்க வம்சத்தைச் சேர்ந்த அரசர்களுக்கும்,அவருக்கு
உதவியாகவிருந்த படையாட்சி குலம்,வங்கர்,பணிக்கர் குலம்,உலகப்போடி குலம்
ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்களை குகன் குலம் என்று
பெருமைப்படுத்த முயன்றதனால்,கிழக்கிலங்கை திராவிடக் கலாச்சாரத்தின்
முக்கிய குடிகளான வேளாளர் பதினெண் சிறைக்குடி மக்கள் வரலாறுகள்
முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட
்டுள்ளது ஈண்டு குறிப்பிடத்தக்க
து." என்று வரலாற்றாய்வாளர் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்
மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார
்.அதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
கலிங்கர் குடி இன்றும் மட்டக்களப்பிலே இருக்கின்றது.இத
ு ஒரு அரச குடியாகும்.அத்துடன் உலகிப்போடி என்கிற குடியும் மகள் வழியில்
அரச குடி என்று புரிகின்றது.படையாட்சி,பணிக்கர் போன்ற குடிகள்
படைத்தளபதிகள் குடியாக இருக்கவேண்டும்.
இந்தக் குடிகளுக்கு வெள்ளாளர் குடிக்கும் இடையேயான உறவில் ஒரு வகையில்
வர்ண முறையின் சாயல் தெரிகின்றது.அதேவேளை இன்றைய இறுக்கமான அகமண
முறையிலான சாதிகள் போன்றல்லாமல் இந்தக்குடிகளுக்கு இடையில் திருமண
உறவுகள் இருக்கின்றன.இதுவும் கவனிக்கத்தக்கது.
வேளாளரின் கட்டுப்பாட்டில் சிறைக்குடிகள் என்று பதினெண் குடிகள்
இருந்ததும் அவற்றைக்கொண்டு மேற்கூறிய கலிங்க குடி,படையாட்சி
குடி,உலகிப்போடி குடி போன்ற அரச,அதிகார வர்க்கக் குடிகளுக்கு வேலைகளைச்
செய்விப்பது வேளாளர்களின் கடமையாக இருந்ததும் தெரிகின்றது.
தமிழ் அரசுகள் சிதைந்ததும் நிலவுடமையாளர்களான வேளாளர்களின் கட்டுப்பாடு
இந்தக் குடிகள் மீது நேரடியாக ஏற்பட்டு பிற்காலத்து சாதியப் படிநிலைகள்
உருவாகி இருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.
1871 இல் யாழ்ப்பாணத்தில் அம்பட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் துணிகளை
வண்ணார் சமூக மக்கள் சலவை செய்ய மறுத்ததால் அவர்களுக்குப் 'பாடம்
படிப்பிக்க' வெள்ளாளர் அவர்கள் மீது தாக்குதலை நடத்திச் சாதிக்
கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்கள் என்று கூறப்படுகின்றது.இது
வெள்ளாளர்கள் குடிமைச் சமூகங்களை வைத்து அரசர்களுக்கு பணி செய்ததன்
தொடர்ச்சி என்றே கூறலாம்.
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் எடுபிடிவேலையான கங்காணிகளாக
மாறி தேயிலைத் தோட்டதொழிலாளர்களைப் பிழிந்தெடுத்து வேலை வாங்கியவர்களில்
பெரும் எண்ணிக்கையானோர் வெள்ளாளர்களாக இருந்ததும் தற்செயலானதல்ல அரச
எடுபிடி வரலாற்றின் தொடர்ச்சியே என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.
அதேவேளை மட்டக்களப்பு சமூகம் குடிகளாகவும் சாதிகளாகவும் காணப்பட்டாலும்
இவை இன்றைய நிலையில் ஏனைய தமிழ் சமூகங்களைப் போன்று நெடுக்கான உயர்வு
தாழ்வு சாதியக் கட்டமைப்புக்கொண்ட சமூகமாக இல்லாமல் பெருமளவுக்கு கிடையான
சமூக அமைப்புக்கொண்ட சமூகமாகவே இருக்கின்றது.எல்லோரிடமும் சிறிய
அளவிலேனும் நிலம் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தோன்றுகின்றது.க
ிராமங்களில் சாதிகளுக்கு இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க முனைபவர்கள்
நிலப் பங்கீடு குறித்துச் சிந்திக்கவேண்டும்.
5 மணிநேரம் · பொது

Tholar Velan
கிழக்கின் வரலாறு என்பது தனித்துவமானது ஈழத்தமிழர் வரலாற்றை கிழக்கில்
இருந்துதான் ஆராய முடியும். தொல்லியலாளர் தங்கேஸ்வரி (பெயர் சரியோ
தெரியவில்லை முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்) போன்றவர்களின் தற்கால
ஆய்வு முக்கியமானது. இதில் ஐதீகங்களே அதிகமாக இருக்கின்றது. மேலும்
முஸ்லீம்களிடையே உள்ள தாய்வழி சொந்தம் போன்றவைகள் முக்கியமானது. குகனுடன்
தொடர்பு படுத்துவது 1850களின் பின்னர் ஒவ்வொரு சாதியும் தன்னை உயர்த்திக்
கொள்ள கையாண்ட வழிமுறையாகும். பரத இனக்குழுமத்தின் உட்கிளை தான்
முக்குவர், அரையர், திமிலர், கரையார், கடையர், செம்படவர், மீனவச் செட்டி-
செட்டிகள் பள்ளிவிலி-

Sivachandran Sivagnanam
மட்டக்களப்பில் சாதிகளுக்கிடையே
யான முரண்பாடுகள் குறைவாக காணப்பட்டமைக்குக் காரணம், சாதிகளின் தொழிலை
கடமையாக ஏற்றுக்கொண்டதே. உதாரணத்துக்கு வண்ணான் என்பவனின் தொழில் சலவை
செய்வது என்றாலும், மரணவீடு, திருமணவீடு என்பவற்றில் வண்ணானுக்கென
கூரைமுடி வைத்தல் எனும் ஒரு மிகப்பெரிய கடமை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச்
சந்தர்ப்பத்தில் சலவைத்தொழிலாலிக
்கான முக்கியத்துவம் உணர்த்தப்படும். ஒரு சலவைத்தொழிலாளி இல்லாமல் ஒரு
இறந்தவீடோ, திருமணவீடோ நடைபெறாது. இவ்வாறு சமூகத்தின் நிகழ்வுகளில் எல்லா
சாதியினரும் கலந்துகொள்ளக்கூடியதாகவும், எல்லா சாதிகளுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கும் அம்சங்களை கோர்த்து வைத்திருப்பதாலும்
மட்டக்களப்பில் சாதிய முரண்பாடுகள் குறைவாக உள்ளன.
மட்டக்களப்பு மான்மியம் தொகுக்கப்பட்டது ஒல்லாந்தர் காலத்தில் அல்ல. போன
நூற்றாண்டின் ஆரம்பத்தில். அது ஒரு தகவல் புத்தகமே, அதில் இருக்கின்ற
ஏராளமானவை எந்த ஆதாரமும் அற்றவை. அதில் குறிப்பிடப்படும் கால அளவுகளும்
பெரும் குழப்பத்துக்குரியவை. அதை ஒரு வரலாற்றுச் சான்றாக ஏற்றுக்கொள்ள
முடியாது என்பது அதை வாசித்தால் புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக