புதன், 20 செப்டம்பர், 2017

நீட் வினாத்தாள் cbsc மட்டும் சமச்சீர் மாணவர் எழுத கடினம் மருத்துவம் கல்வி neet

Logan K Nathan
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்க்க இந்திய அரசு தமிழகத்தின்
மீது திணிக்கும் "நீட்" தேர்வை எதிர்ப்போம்!!:
தமிழகத்தில் +2 தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து
10 ஆயிரம் பேர். இதில் மாநிலத்தின் சமச்சீர் கல்விமுறையில் தேர்வு எழுதிய
மாணவர்கள் 9 இலட்சம் பேர். இதில் மருத்துவப் படிப்பிற்க்கான உயிரியல்
தேர்வு எழுதிய மாணவர்கள் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர்.
ஒன்றிய அரசின் CBSE கல்வி முறையில் +2 தேர்வு எழுதிய மாணவர்கள் 10 ஆயிரம்
பேர் மட்டும் தான்.
இதில் மருத்துவப் படிப்புக்கான உயிரியல் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய
மாணவர்கள் வெறும் 3 ஆயிரம் பேர் மட்டுமே.
இந்த நிலையில் தற்பொழுது இந்திய அரசு மருத்துவத்துப் படிப்பிற்க்காக
கொண்டுவந்துள்ள "நீட்" நுழைவுத்தேர்வில் 3 ஆயிரம் பேர் மட்டுமே எழுதிய
CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் 98% கேள்வி கேட்கப்படுமாம்.
மீதி உள்ள 2% வினாக்கள் 3,80,000 பேர் தேர்வு எழுதிய மாநில சமச்சீர்
பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுமாம்.
வெறும் 2% மாணவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஒரு நுழைவுத்தேர்வை, அந்த
பாடத்திட்டத்தை அறியாத 98% மாணவர்களையும் எழுதச் சொல்வது எதற்கு? ?
+2 பாடத்தில் ஒரு மாணவன் 100% மதிப்பெண் எடுத்தாலும் நீட் தேர்வில்
தேர்ச்சி பெற வில்லை என்றால் மருத்துவராக முடியாது! .
அப்படியானால் அந்த மாணவனுக்கு +2 தேர்வு எதுக்கு?.
12 ஆண்டுகளாக அவன் படித்த படிப்பு எதற்க்கு??.
"நீட்" நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி நிலையத்தில் ஒரு மாணவன் படிக்க ஒரு
மாதக் கட்டணம் 50,000 முதல் 70,000 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை
இல்லாத மாணவர்களால் +2 வில் 100 % மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவராக
முடியாது! .
CBSE யில் பயிலும் மாணவனின் 12 ஆண்டுகால படிப்பை சமச்சீர் கல்வியில்
பயின்ற மாணவர்களால் 1 மாதத்தில் பயின்று தேர்ச்சி பெற முடியுமா? ?.
இது பெரிய அநீதி அல்லவா??.
1920 வரையில் சமசுகிருதம் தெரியாதவர்கள் மருத்துவராக முடியாது என்ற நிலை
இருந்துள்ளது. அதனால் குறிப்பிட்ட இனம் தவிர்த்து தமிழக மக்களால்
மருத்துவராக முடியாத நிலை இருந்துள்ளது.
பின்னர் அன்றைய திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் போராட்டத்தினால்
தடையும் நீங்கி, கூடுதலாக சிறப்பு இட ஒதுக்கீடும் தந்து அனைத்து
தமிழர்களும் மருத்துவராக வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
ஆனால் இன்று அதே ஆரிய சூழ்ச்சியால் மறுபடியும் தமிழர்களின் மருத்துவப்
படிப்பு தடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் கிராமப்புற ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவை
அழித்தொழிக்கும் இந்த அநீதியை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் போராட
முன்வர வேண்டும். இல்லையென்றால் இனிவரும் காலங்களில் ஏற்கனவே
எட்டக்கனியான IIT போன்று மருத்துவப் படிப்பும் தமிழர்களுக்கு
எட்டாக்கனியாகிவ
ிடும்.
@தமிழ்செல்வன்.
# BAN_NEET
# SAVE_SOCIALJUSTICE
# SAVE_TAMILSTUDENT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக