வியாழன், 21 செப்டம்பர், 2017

ஆஷ் வாஞ்சி கொலை நடந்தது எப்படி ஐயர் பிள்ளை கூட்டணி குற்றவாளி பட்டியல் வழக்கு

# ஆஷூம்_வாஞ்சிநாதனும்_2
வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்ட வீரனா?
ஆஷ் தலித்களின் பாதுகாவலனா?
சில வரலாற்று தகவல்கள்-( 2 )
நெல்லையில் வாஞ்சிநாதனும்,ச
ங்கர கிருஷ்ணனும் தங்கியிருக்க உதவியவர் அன்றைய டிவிஎஸ்எஸ் பேங்க்
எழுத்தர் அரவங்குளம் முத்துச்சாமி. 1911 ஜீன் 17 நெல்லை சந்திப்பு இரயில்
நிலையத்திலிருந்
து மணியாச்சி ரயில் காலை 9.30 க்கு புறப்பட்டது.
கொடைக்கானலில் படிக்கும் தங்களது நான்கு குழந்தைகளையும் பார்ப்பதற்காக
அந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணமாயினர் ஆஷ் தம்பதியர்.
இரண்டாம் வகுப்பில் வாஞ்சியும் சங்கர கிருஷ்ணனும் பயணமாயினர். காலை
10.35க்கு ரயில் மணியாச்சி வந்து சேர்ந்தது.
தூத்துகுடியிலிருந்து செல்லும் சிலோன் போட் மெயிலுக்கு அவர்கள் மாற
வேண்டும். அதற்காக பயணித்த ரயிலில் அமர்ந்திருந்தனர். போட் மெயில்
10.48க்கு மணியாச்சி வந்து சேர்ந்த்து.
ஆஷ் தம்பதியரை வரவேற்று உடன் நின்றவர் மணியாச்சி ஸ்டேசன் மாஸ்டர்
அருளானந்தம் பிள்ளை. அவரின் குழந்தைகள் ஆரோக்கியசாமியும
்,மரியதாஸூம் உடன் பெட்டியில் இருந்தனர்.க்லெக்டரின் பியூன் காதர்பாட்சா
பிளாட்பாரத்தில் நின்றிருந்தார்.
பச்சைக்கோட் அணிந்திருந்த வாஞ்சி கலெக்டர் இருக்கும் பெட்டியில்
ஏறுகிறான்.குறி பார்த்து சுடுகிறான்.குண்டு மார்பில் பாய்கிறது.தனது
தொப்பியால் துப்பாக்கியை தடுக்க வீசுகிறான் ஆஷ். ஆனால் பயனில்லை.சமபவம்
நடக்கும் போது சிலோன் போட் மெயிலும் வந்து சேர்கிறது.
ரயில் நிலையம் பரபரப்பாகிறது.
வாஞ்சியை கலெக்டர் பியூன் காதர்பாட்சா பிளாட்பாரத்தில் இறங்கி ஓடும் போது
பிடிக்க இருவரும் கட்டிப் புரள்கின்றனர்.த
ுப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு வடக்கு நோக்கி ஓடுகிறான் வாஞ்சி.சங்கரகிர
ுஷ்ணன் வயல்காட்டிற்குள் ஓடி தப்பிக்கிறான்.
காதர்பாட்சாவும் பயணிகளும் விரட்ட கழிப்பறைக்குள் புகுந்து கதவை மூடிக்
கொள்கிறான்.துப்
பாக்கியை தன் வாய்க்குள் வைத்து அழுத்த தலையின் பின்பகுதி வரை குண்டு
துளைத்தது.வாஞ்ச
ி மரணம் அடைந்தான்.
உயிருக்கு போராடிய ஆஷ்ஷை,அவன் பயணித்த மணியாச்சி ரயிலிலேயே அவசரமாக
நெல்லைக்கு திருப்பி அனுப்பினார்கள்.ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ரயில்
கங்கைகொண்டான் அருகே 11.30க்கு வந்த போது ஆஷ் உயிர் பிரிந்தது.
வாஞ்சியின் உடல் ஒரு சரக்கு ரயிலில் மதியம் 3.45 க்கு நெல்லை வந்தது.
அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் தான் வாஞ்சியை செங்கோட்டை ரகுபதி ஐயர்
மகன் என அடையாளப்படுத்தியது.
1911 ஆகஸ்ட் 1 சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் தம்புவிடம் இ.பி.கோ.121Aன்படி
குற்றப்பத்திரிக
்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் பட்டியல் இதுதான்.
1.நீல்கண்ட பிரமச்சாரி
2.கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சங்கர கிருஷ்ண ஐயர்
3.தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை
4.தென்காசி முத்துக்குமாரசாமி பிள்ளை
5.தூத்துக்குடி சுப்பையா பிள்ளை
6.செங்கோட்டை ஜெகநாத ஐயர்
7.செங்கோட்டை ஹரிஹர ஐயர்
8.புனலூர் ராமசாமி பிள்ளை
9.திருவாங்கூர் தேசிகாச்சாரி
10.செங்கோட்டை மகாதேவ ஐயர்
11.செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை
12.செங்கோட்டை அழகப்ப பிள்ளை
13.எட்டயபுரம் வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர்
இவர்கள் தவிர போலீஸ் தேடுதலுக்கு பயந்து கத்தியால் தொண்டையை அறுத்துக்
கொண்டு 1911 ஆகஸ்ட் 5 ல் செத்த புனலூர் வெங்கடேஸ்வர ஐயர்.
1911 ஜீன் 28 ல் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்ட செங்கோட்டை
பாரதமாதா சங்கத்தின் பொறுப்பாளர் தர்மராஜ ஐயர்.
1911 செப்டம்பர் 11 முதல் 1912 பிப்ரவரி 2 வரை விசாரணை நடந்து பிப்ரவரி
15 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.ஆர்னால்ட் ஒயிட் தீர்ப்பு
வழங்கினான்.
இது கொலையின் வரலாறு
ஆனால் வாஞ்சியின் சட்டைப் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் தான் இன்று
வரை சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது.
பிரசவ வலியால் துடித்த தலித் பெண் யார்?
வாஞ்சி அதைத் தடுத்தானா?
ஆஷ் அவனை அடித்தானா?
இந்தக் கதையின் மூலம் எங்கு உருவாகிறது?
குற்றாலத்தில் தலித்களை குளிக்க ஆஷ் அனுமதித்தானா?
தொடருங்கள்
தொடர்கிறேன்
Surya Xavier

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக