வேதம் சமஸ்கிருத மொழியில் இல்லை. - தெய்வத்தின் குரல்.
"அந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள், இங்கே நான் இன்னொன்றையும்
சொல்லி விட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக
இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு. வேத பாஷைக்கு
'ஸம்ஸ்க்ருதம்' என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான்.
சந்தஸ் என்றால் சந்தம் (meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த
வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட 'சந்தஸ்' என்றே பேர். வேதம் தவிர மற்ற
எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன
மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்பட எல்லா விஷயங்களிலும்)
பிரயோகமாகிற பாஷைக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ்.
'வேத பாஷையில் இப்படி இருக்கிறது' என்று சொல்லுமிடங்களில், வியாகரண
சாஸ்திரம் எழுதிய பாணினி, 'இதி சந்தஸி' என்பார். மற்றபடி
ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது 'இதி லோகே' என்பார்.
ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது
பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட - பாஷை. ஆனாலும்
முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட
ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். 'கிருதம்' என்றால்
'செய்யப்பட்டது' என்று அர்த்தம். 'ஸம்ஸ்கிருதம்' என்றால் நன்றாக
செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த
பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே! அது
தானாக flash ஆனது (பளிச்சிட்டது) என்றுதானே இத்தனை நாழி கதை சொன்னேன்?
அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த
சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக
ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில்
பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody
(வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து
ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை.
பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும்
அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில்
ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக