புதன், 20 செப்டம்பர், 2017

அரிசி வெள்ளை நிறம் உணவு மண்ணுக்கு கேடு நம்மாழ்வார்

Suresh Nataraj உடன் தமிழன் சுரேஷ் அகமுடையார் .
# நெல்>> நீண்ட நாள் வாசிப்பில் உணவு அரசியல் எனக்கு புரிய தொடங்கியது 6
வருடம் முன்பு மருத்துவர் கு.சிவராமன், மற்றும் ஐயா நம்மாழ்வார் வழியில்
புத்தகங்கள் வாயிலாகதான்..
அதன் இறுதியில் நான் உணர்ந்தது வெள்ளை நிற உணவும்,உற்ப்பத்
தியும் மணிதனுக்கும் சரி,நிலத்திற்கும் சரி கேடுதான்.. சுமார் 5 வருடம்
மேலாக என் வீட்டில் மாதம் 20 கிலோ சிறுதானியம்,10 கிலோ சுமார் வரைதான்
மாதம் அரிசி பயன்பாடு... அந்த 10 கிலோ எனும் குறைவான அளவையும் முழுவதுமாக
நிருத்தி பழங்கால முறைப்படி பண்டிகை உணவாக மட்டுமே நான் மாற்றனும்..
கேப்பை கூலு,கம்பு தோசை,சாமை பொங்கள்,வரகு சோறு சாதம்,தினை அரிசி
கூழ்,சோள அடை,சிறுதானிய அடை என 100 க்கும் அதிகமான உணவையே
பயன்படுத்துகிறேன்... மாமிசமும்....
குறிஞ்சி(மலையும் மலைசார்ந்த நிலமும்),
முல்லை(காடும் அதன் சார்ந்த நிலமும்),இதன் வழி உணவு,பண்பாடு, வழிபாடு என
வாழ்வதே பழந்தமிழர் முறை அதுவே நல்லது என்பது என் அனுபவ புரிதல்..
ஏதோ இப்ப அரசியல்,நண்பர்கள் பதிவு காரணங்களால் இது என் நிலைப்பாடு
அல்ல... நான் சமூக அரசியல் உள்ளே வந்து இரண்டு ஆண்டுதான் ஆகிறது...
எப்போதோ எனக்கு புரிந்த உணவு அரசியலின் சிந்தனைகளோடு சமகால அரசியலையும்
சேர்த்து நினைத்து பா்க்கும்போது உணர்வது,
மருதம் இல்லாமல் என்னால் முழு சுதந்திர சந்தோசங்களோடு வாழ முடியும்...
அதுவே நன்மையும், என் சந்ததிகளுக்கு சேர்த்து வைக்கவேண்டிய சொத்து
குறிஞ்சி,முல்லை நிலங்களைதான்...
மொத்தத்தில் # மருதம் உலகின் முதல் உணவு அரசியலின் தொடக்கம்...
அவை எனக்கு அவசிய அவசியமானது என்பது இல்லை.. குறைவான அளவில் இருத்தல்
போதுமானது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக