புதன், 20 செப்டம்பர், 2017

தேவர் ராயர் பட்டம் பாவாணர் சொல்லாய்வு வேர்ச்சொல்

பாவாணர் நோக்கில் சில தகவல்கள்:
அரசன், தேவர் என்ற சொற்கள் பற்றி பாவாணர் என்ன எழுதுகிறார் என்று பார்ப்போம்.
1. அரசன் :
உரவு = > உரவன் = > அரவன் = > அரசன் = > அரைசன் = > அரையன் = > ராயன்
உரவு என்றால் வலிமை என்று பொருள். அரசன் என்றால் வலியோன், தலைவன்,
ஆள்வோன் என்று பொருள். அதனால் ஆட்சி உரிமை உடையவர்களை அரையர்
என்றழைக்கும் மரபு நம் தமிழ் மரபு. சிவ பெருமானை பொருப்பரையன் என்பர்.
பொருப்பு + அரையன் பொருப்பு என்றால் மலை என்று பொருள். அரையன் என்றால்
தலைவன் . மலைகளுக்கு தலைமையான கயிலையில் இருப்பவன் என்ற பொருளில்
பொருப்பரையன் மடப்பிடியி னொடு ..... என்று பெரிய புராணம் கூறும் .
ஆக தலைமையை ஏற்றவர்கள் தான் அரையன். அரசன் என்னும் பொருளில் வரும் குலப்
பட்டங்களை இன்றும் காணலாம். இதோ:
சேதுராயர், மழவராயர், மூவராயர், காளிங்கராயர், வாணாதிராயர் இப்படி பல
பட்டங்களைக் கொண்ட மக்கட் பிரிவினர் இன்றும் உள்ளனர். பள்ளர்கள்
யாருக்கும் இந்தப் பட்டங்கள் இல்லை.
2. தேவர் பற்றி பாவாணர் என்ன சொல்கிறார்.
உலகம் முழுவதும் பரவிய முதல் தெய்வம் தீயாகும். அதனால் தெய்வம் என்னும்
பொதுப் பெயரே தீயின் பெயரினின்று திரிந்தது.
தேய்தல் = மரங்கள் அல்லது கற்கள் உராய்தல். உராய்ந்து தீப்பற்றுதல்.
தேய் => தேய்வு => தேவு = > தேவன்
தேய்வு = > தெய்வு = > தெய்வம்
என்று பாவாணர் எழுதுகிறார்.
இதற்கு பொருள் கூறும் பாவாணர் ,
வணங்கப்படும் பொருள்
தெய்வத்தன்மை
கடவுள்
தீயைப் போன்று சிறந்தவன்
மறவன்
என்று விளக்குகிறார்.
ஆனால் பாவாணர் நோக்கில் எழுதுவதாகக் கூறும் செந்தில் மள்ளர் பாவாணரின்
இவ் வாய்வை திட்டமிட்டு மறைத்து விட்டு
தெவ்வர் > தேவர் என்று புதுக் கரடி விடுகிறார். தெவ்வர் என்றால் பகைவர்.
தேவரும் பகைவராம். பாவாணரை முறையாகப் படிப்பவர் உண்மைப் பொருள் உணர்வர்.
பாவாணர் நோக்கில் நம் ஆய்வை தொடரலாம்.
# மருதுபாண்டியன்_இரா ...

1 கருத்து: