புதன், 20 செப்டம்பர், 2017

திராவிடம் தமிழகம் மூன்றாக உடைக்க போட்ட திட்டம் குமரிமைந்தன்

(காவிரி ஓடியதாக மேலே கூறிய தமிழகத்தின் பகுதிகள், இன்று ‘பெரி
யாரிய மார்க்சியப் புரட்சியாளர்’ பெரியவர் ஆனைமுத்துவின் உலைக்களத்தில்
உருவானவர்களால் வடிவமைக்கப்பட்ட “தமிழகத்தை ஒதுக்கீட்டுக்காக மூன்று
மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்” என்ற திட்டத்தின் படியமைந்த மூன்று
மண்டலங்களாகப் பிரிவதைப் பாருங்கள். இந்த மூன்று மண்டலங்களிலுமுள்ள
உழுகுடிகள் முறையே பறையர், சக்கிலியர், பள்ளர் என்பது காண்க. பள்ளர்களே
நெற்குடிகள் என்ற தங்களது கூற்று இங்கு பொருந்தாமை காண்க.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் முக்குலத்தோர், வன்னியர், வன்னியக்
கவுண்டர்கள் தனித்து நின்று அவர்களை வெல்ல முடியாது என்பதுதான் இந்த
மூன்று மண்டலக் கோட்பாட்டின் உட்சாரம். தம் மூன்று தொகுதியினரும் ஒன்றுபட
முடி
யாதென்று அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
ஒடுக்கப்பட்டோர் மூவரும் ஒன்றுபடக் கூடாதென்று தாங்கள் கச்சை கட்டி
களத்தில் இறங்கியுள்ளீர்கள்.)
தமிழகத்தினுள் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்புகள், படையெடுப்புகள்,
ஊடுருவல்கள், சூழ்ச்சிகள், சமய வடிவிலான தலையீடுகள், ஒற்று வேலைகள்,
கீழறுப்புகள், குறுங்குழுப் பகைமைகள் ஏராளம். அதனால் மக்கள் பிளவுண்டு
ஒருவர் மீதொருவர் ஆதிக்கம் செலுத்த மேற்கொள்ளும் இடையறாத முயற்சிகள்
இன்றும் தொடர்கின்றன.
இந்த நிகழ்வுகளின் விளைவாக இன்று தமிழகத்தில் மூன்று பெரும் ஆதிக்கச்
சாதிப் பிரிவுகளான முக்குலத்தோர், வன்னியர், வன்னியக் கவுண்டர்கள்
உருவாயினர்.
[4] முக்குலத்தோர் மட்டுமல்ல,வன்னி
யர், வன்னியக் கவுண்டர் எனப்படுவோரும் கூடத் தனிச் சாதிகளல்ல. இம் மூன்று
தொகுதிகளுக்கும் தனித்தனி உள் ஒதுக்கீடுகள் வழங்கினால் அவர்கள் உடனேயே
எண்ணற்ற உட்பிரிவுகளாகப் பிரிந்து உள் ஒதுக்கீட்டுக்காக வரிந்து
கட்டிக்கொண்டு சண்டையிடுவர்.
இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்
டோர் எனும் ஒரே தொகுதியினுள் இணைந்து நின்று ஒதுக்கீட்டுக்கா
கப் போராடிய காலத்தில் அவர்களால் ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர்,
சக்கிலியர் உட்பட்ட சாதிகளும் ஒன்று சேர்ந்து அவர்களோடு இணைந்து
போராடினர்.
இன்று பங்குச் சண்டையினால் பிரிந்து நிற்பதோடு பழைய சாதிய
வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் வலியுறுத்துபவராக நீங்கள் மாறி
நிற்கிறீர்கள். ஒவ்வொரு சாதியும் மாறி நிற்கிறது. இதுதான் பார்ப்பனியம்.
இதுதான் வெள்ளாளக்கட்டு.
இப்படி, நாய் தன் வாலைக் கடிக்கச் சுற்றிச் சுற்றிச் சுழல்வது போல்
தமிழ்க் குமுகம் மீண்டும் மீண்டும் உழலக் கூடாது என்பதுதான் என்
விருப்பம். அரசுப் பணியோ மக்களுடைமை(தனியார்), அயலார், அலுவலக அல்லது
தொழிலகப் பணியோ, ஒதுக்கீட்டின் மூலம் ஒரு நாட்டு மக்கள் அனைவரும் வளமும்
வாழ்வும் பெற்றுவிட முடியாது.
தங்களையும் தங்களுக்குத் துணை நிற்பவர்களையும் போன்று மேனிலையடைந்து
பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டுக்குத் தூண்களாகத்தான் உருவாக
முடியும். நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் அனைவருக்கும் பயன்படுமாறு
முதலாளிய விளைப்பு முறையில் ஈடுபடுத்தலே அனைவருக்கும் வேலைவாய்ப்பையும்
தொழில் தேர்ச்சி தரும் கல்வியையும் வழங்கும் ஒரே வழி
[5]. ‘பிற்படுத்தப்பட்ட’ ஆதிக்க சாதியினர் பரிந்துரைக்கும் மூன்று
மண்டலங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் ஆளுகையில் நாட்டின் அடிப்படைச்
செல்வமாகிய வேளாண் நிலங்களில் பெரும்பகுதி உள்ளது. இன்று தீண்டத்தகாததாக
ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டுள்ள வேளாண்மையை மானமும் வருமானமும் உள்ள ஒரு
தொழிலாக ஆக்குவதுடன் அவர்களில் செல்வம் படைத்தோரிடம் உள்ள செல்வத்தை
மூலதனமாக்கிப் படிப்படியாகப் பெருந்தொழில்களி
ல் ஈடுபடச் செய்வதற்கான போராட்டமுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்கு
வழி என்பது எம் நிலைப்பாடு.
இதைப் பல மடல்கள் மூலம் தங்களுக்கு தெரிவித்துள்ளேன். தாங்கள் முதல் மடலை
மட்டும் வெளியிட்டீர்கள்(நன்றி!). பிறவற்றைப் புறக்கணித்தீர்கள்.
ஒதுக்கீட்டின் பயனை நுகர்ந்து அதன் பயனாகக் கிடைத்த உயர்நிலையைத்
தங்களுக்கு மட்டும் நிலைநிறுத்தவும் தங்களைப் பார்ப்பனியம் எனும்
வெள்ளாளக்கட்
டினைத் தழுவும் குழுக்களுடன் இணைத்துக் கொள்ளவும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தாங்க ள்
தொடர விரும்புகிறீர்கள் என்பது தெளிவாகிறது. அதற்காகத் தாங்கள்
மேற்கொண்டுள்ள தவறான வரலாற்று அணுகலில் எனக்கு உடன்பாடில்லை என்பதை
மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்தருள்க.
சாதி வரலாறுகள் உருவாகும் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வி
தத்துக்கு ஒரு பதமாக நாடார்களின் வரலாறு பற்றிய ஓர் ஆய்வை இத்துடன் இணைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக