திங்கள், 18 செப்டம்பர், 2017

கீழடி பாண்டியர் ரோமானியர் ரோம் நாணயம் அகழ்வாராய்ச்சி பிராமி செங்கல் நாகரீகம் பழமை சான்று

சாரதா தேவி
தென் இந்தியாவிலேயே நாற்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க பட்ட # கீழடி
நகரம் பாண்டியர்கள் வணிக நகரமாக இருந்து உள்ளது..
பாண்டியர்கள் காலத்து நாணயங்கள் தங்கத்தால் ஆனது, தமிழ் பிராமி
எழுத்துகள் பொறித்த பதினாறு பானைகள் ,மிக நேர்த்தியாக அமைக்க பட்ட
செங்கல் சுவர்கள், உரை கிணறுகள் , மருந்து சேகரித்து வைக்கும் கிடங்குகள்
மழைநீர் வடிகால்கள் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூன்றரை
கிலோமீட்டர் சுற்றளவிற்கு இந்த நகரை பாண்டியர்கள் நேர்த்தியாக அமைத்து
வாழ்ந்ததற்கான இடமாக கீழடி இருந்து வந்துள்ளது,
ரோமானியர்களோடு வாணிக தொடர்பு கொண்டதற்கான ஆதாரமாக ரோமானிய அணி கலங்களும்
இங்கே கிடைத்து உள்ளது
வெள்ளம் வந்து ஊரை அடிக்கடி நாசம் செய்ததால் அங்கு வாழ்ந்த மக்கள் ஊரை
காலிசெய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து இருக்க வேண்டும் என்கிறார்கள்
ஆய்வறிஞர்கள்
# பாதுகாப்போம்_கீழடியை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக