ராம்நாத் கோவிந்த் ஒரு தலித் பிரதிநிதியா? - ரவிக்குமார்
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக-வின் வேட்பாளர்
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசியல்களம் சூடுபிடிக்கத்
தொடங்கியுள்ளது. பாஜக-வால் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரை எவரும்
எதிர்பார்க்கவில்லை என்றபோதிலும் அக்கட்சியின் சார்பில் தலித் ஒருவர்
வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற வதந்தி பல மாதங்களாகவே பரவிக்கொண்டுதான்
இருந்தது.
தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டி
ருக்கும் பீகார் மாநிலத்தின் ஆளுநர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் இருக்கும்
சிறுபான்மை தலித் சாதிகளில் ஒன்றான கோரி என்னும் சாதியில் பிறந்தவர்.
கோலி என்றும் அழைக்கப்படும் அந்த சாதி, நெசவு செய்வதைத் தொழிலாகக்கொண்டத
ாகும். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும்
வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த அவர், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக
இருந்திருக்கிறார். எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர், எளிமைக்குப்
பெயர்பெற்றவர் என்பவைதான் அவரது சிறப்பம்சங்கள்.
கருத்தொற்றுமையின் அடிப்படையில் தனது வேட்பாளரைப் பொது வேட்பாளராகத்
தேர்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பாஜக ஆதரவு
திரட்டியது. ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்ற நிலையில் இப்போது
தனது வேட்பாளரை அக்கட்சி அறிவித்திருக்கிறது. போட்டி நிச்சயம் என்பதைப்
போலவே பாஜக நிறுத்தியிருக்கும் திரு.ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதும்
நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது. அவர் வெற்றி பெற பாஜக-விடம் போதுமான
வாக்குகள் இல்லையென்றபோதில
ும் சிறிய கட்சிகள் சிலவற்றின் ஆதரவை அது பெறுவதில் எந்தத் தடையும்
இல்லை. ஆகவே, சுதந்திர இந்தியாவில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவிரு
க்கும் இரண்டாவது தலித் என்ற பெருமையை திரு.ராம்நாத் கோவிந்த் பெறப் போகிறார்.
தலித் வகுப்பைச் சேர்ந்த திரு.கே.ஆர்.நாராயணன் 1997ஆம் ஆண்டு குடியரசுத்
தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த
ஐக்கிய முன்னணி அரசாங்கம் வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சி கொடுத்த ஆதரவை
நம்பியிருந்தது. பிரதமராக இருந்த தேவகவுடா மாற்றப்பட்டு, ஐ.கே.குஜ்ரால்
பிரதமர் பொறுப்பேற்றிருந்தார். சிறுபான்மை அரசாக அது இருந்தது. அந்த
நேரத்தில்தான் கே.ஆர்.நாராயணனின் பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்கு
முன்மொழியப்பட்டது. அவரை எதிர்த்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
டி.என்.சேஷன் போட்டியிட்டார். இந்திய வரலாற்றில் ஒரு சிறுபான்மை அரசின்
ஆதரவைப் பெற்ற வேட்பாளர், பதிவான வாக்குகளில் 95%-ஐப் பெற்ற சாதனையை
கே.ஆர்.நாராயணன் நிகழ்த்தினார்.
1997இல் இருந்த நிலை இப்போது இல்லை. மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு ஓர்
ஆட்சி நடக்கிறது என்றபோதிலும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்
தலித் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.
இதன்மூலம் பாஜக-வின் நீண்டகாலத் திட்டம் தெளிவாகியிருக்கிறது.
2014 பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றாலும் தான்
விரும்புவதுபோல ஆட்சி நடத்துவதற்கும், இந்திய அரசியல் அமைப்பை
மாற்றுவதற்கும் பாஜக-வுக்கு இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று,
மாநிலங்களவையில் இன்னும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இரண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக
இருக்கிறார்.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால்தான் பல்வேறு மசோதாக்களையும்
சட்டமாக்குவதற்குச் சட்டத்துக்குப் புறம்பான கொல்லைப்புற வழியை பாஜக
நாடவேண்டியுள்ளது. அவர்களது நோக்கம், நிலம் கையகப்படுத்தும் சட்டம்
உள்ளிட்ட தாராளவாத பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்ல; பாஜக-வை
வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெடுநாள் கனவான ‘இந்து ராஷ்டிரத்தை’
அமைப்பதும் ஆகும். மாடு விற்பதற்கான தடை முதலான பாஜக அரசின்
நடவடிக்கைகளில் வெளிப்படுவது அந்த விருப்பம்தான். அதற்கு 2019இல்
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம். அந்தத்
திட்டத்துக்கான துருப்பு சீட்டுதான் தலித் குடியரசுத் தலைவர் என்ற
ஏற்பாடு.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் திரு.ராம்நாத்
கோவிந்த் அவர்கள் பாஜக-வின் திட்டங்களுக்குத் துணைபோவாரா, இல்லையா என்பதை
நாம் இப்போதே முடிவு கட்டுவது சரியல்ல என்றாலும் பாஜக-வைச் சேர்ந்த அவர்,
கே.ஆர்.நாராயணனைப்போல வகுப்புவாதத்தை எதிர்க்க மாட்டார் என்பது மட்டும்
உறுதி.
பாஜக தனது வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தமது
வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பாஜக தனது வேட்பாளரை
அறிவிக்கட்டும் என அவை காத்திருந்தன. அது இப்போது தவறாக முடிந்துவிட்டது.
பாஜக நிறுத்தியிருக்கும் தலித் வேட்பாளரை எதிர்த்து வேறு சமூகத்தைச்
சேர்ந்த யாரையாவது எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்தினால் தலித் ஒருவர்
குடியரசுத் தலைவராவதை இவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாக
நேரிடும். பாஜக-வும் அதை எதிர்பார்த்துதான் வேட்பாளரை களமிறக்கியிருக்
கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாகுமா என்ற
சந்தேகம் நமக்கு எழுகிறது.
2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பாஜக அல்லாத கட்சிகளிடையே
அப்படித்தான் இழுபறி நடந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில்
முன்வைக்கப்பட்ட சிவராஜ் பாட்டீலின் பெயரை இடதுசாரிகள் ஒரேயடியாக
நிராகரித்து விட்டனர். குடியரசு துணைத்தலைவராக இருந்த ஷெகாவத்தை சுயேச்சை
வேட்பாளராக நிறுத்துவதற்கு பாஜக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு
செய்த நிலையில் சிவராஜ் பாட்டீல் அவருக்கு இணையான போட்டியாளராக இருக்க
மாட்டார் என இடதுசாரிகள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், சிவராஜ் பாட்டீலின்
அமெரிக்க சார்பு அணுகுமுறையே இடதுசாரிகளின் கோபத்துக்குக் காரணம் என
சொல்லப்பட்டது. காங்கிரஸ் தலைமைக்கு சிவராஜ் பாட்டீலை நிறுத்துவதில் அதிக
நாட்டம் இருந்தது. அதை அறிந்திருந்தும்கூட இடதுசாரிகள் அவரை ஆதரிக்க
மறுத்துவிட்டனர்.
சிவராஜ் பாட்டீலுக்குப் பதிலாக கரன்சிங்கின் பெயர் முன்மொழியப்பட்டது.
அவரும்கூட அப்போது டெல்லியில் தங்கியிருந்த திமுக தலைவர் கலைஞரைச்
சந்தித்துத் தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால், மதச்சார்பின்மை
கொள்கையில் உறுதியானவராகக் குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்ற
இடதுசாரிகளின் நிபந்தனையில் கரன்சிங்கும் அடிபட்டுப் போய்விட்டார்.
அதன் பின்னர்தான் பிரதிபா பாட்டீலின் பெயர் முன்மொழியப்பட்ட
து. அதை இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டனர். அதற்கு முக்கியமான ஒரு காரணம்
இருந்தது. ராஜஸ்தான் அரசு 2006ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டம் ஒன்றைக்
கொண்டுவந்தது. ‘குடிமக்களுக்கு நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள
அடிப்படை உரிமைகளை அந்த சட்டம் மீறுகிறது’ எனக்கூறி, அம்மாநிலத்தின்
ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் கையெழுத்திடாமல் அதை திருப்பியனுப்பி
விட்டார். அது இடதுசாரி கட்சிகளுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதை
சொல்லத்தேவையில்லை. எனவே, அவரது பெயர் முன்மொழியப்பட்ட
போது இடதுசாரிகள் தாமே முன்வந்து அதை ஏற்றுக்கொண்டனர். அவரைப் போலவே
ஆளுநராக இருந்த ஒருவர் இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர்
ஆகியிருக்கிறார்.
பீகார் ஆளுநராக திரு.ராம்நாத் கோவிந்த் எந்தவொரு முக்கியமான சாதனையையும்
செய்துவிடவில்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த 12 ஆண்டுகளில்
ஓரிருமுறை தலித் மக்களின் பிரச்னை தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதைத்தான் அவரது சாதனை என்று சொல்ல வேண்டும். குடியரசுத் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநிலங்களவை உறுப்பினராகத் தான் எழுப்பிய
கேள்விகளை அவர் நினைவுகூர்வாரா என்பது நமக்குத் தெரியாது என்றாலும்
அவற்றை அவருக்கு நாம் நினைவுபடுத்துவது அவசியம். அவர் எழுப்பிய
கேள்விகளில் மூன்றை மட்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1998 ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி அவர் எழுப்பிய வினா முக்கியமானது.
அப்போது மத்திய அரசு ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு
முடிவெடுத்திருந்தது. “அரசு அச்சிடவிருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டில்
அம்பேத்கரைக் கௌரவிக்கும்விதமாக அவரது உருவப்படம் அச்சிடப்படுமா?” என
அவர் கேள்வி எழுப்பினார். “ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா காந்தியின்
உருவப்படத்தைத் தவிர வேறு எந்தப் படத்தையும் அச்சிடுவதில்லை என அரசு
கொள்கை முடிவெடுத்திருக
்கிறது” என அப்போது பதிலளிக்கப்பட்டது. அம்பேத்கரை கௌரவிக்க வேண்டும்
என்ற ஆசை அவரது மனதில் இருக்குமேயானால் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற
பின்னர் நூறு ரூபாய் நோட்டிலாவது அம்பேத்கர் படம் இடம்பெறுவதற்கு அவர்
முயற்சி எடுப்பாரா?
1997ஆம் ஆண்டு அப்போதிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் தலித்துகளின் வேலை
வாய்ப்பையும், பதவி உயர்வையும் முடக்கும் விதமாக சில ஆணைகளைப்
பிறப்பித்தது. அந்த ஆணைகளை ரத்து செய்வீர்களா என 23.07.1998 அன்று
மாநிலங்களவையில் அவர் கேள்வி எழுப்பினார். அந்த உத்தரவுகள் உச்ச
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை
ரத்து செய்ய முடியாது என அரசு சார்பில் பதிலளிக்கப்பட்ட
து. அப்போது பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
தொடர்பான ஆணை தவிர, மற்றவை பின்னர் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின்
அடிப்படையில் திருத்தப்பட்டன.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்குக் கடந்த காங்கிரஸ்
ஆட்சியின்போது தனியே சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்ட மசோதா
மாநிலங்களவையில் நிறைவேறிவிட்டது., மக்களவையில் நிறைவேற்றாமல் அப்படியே
கிடப்பில் போட்டுவிட்டு காங்கிரஸ் போய்விட்டது. பாஜக-வும் கடந்த மூன்று
ஆண்டுகளாக அதை நிறைவேற்றவில்லை. குடியரசுத் தலைவர் ஆனதும் அந்த மசோதாவை
நிறைவேற்றச் செய்து திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களே அதற்கு ஒப்புதல்
வழங்கினால் 20 ஆண்டுகளாக தலித்துகளுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதி சரி
செய்யப்படும். அதற்கு திரு.ராம்நாத் கோவிந்த் நடவடிக்கை எடுப்பாரா?
26.08.1996 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அவர் எழுப்பிய கேள்வி துப்புரவுத்
தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்தது. “துப்புரவுத் தொழிலாளர்களுக்கான
தேசிய ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா?” என்று அவர்
கேட்டார். இன்று அவர் சார்ந்திருக்கும் பாஜக அரசு துப்புரவுத் தொழிலாளர்
மறுவாழ்வுக்கான நிதியை அதிர்ச்சி அளிக்கும் விதமாகக் குறைத்திருக்கிறது.
அது அவருக்குத் தெரியாமலிருக்கல
ாம். துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு காங்கிரஸ்
ஆட்சியின்போது 2013-14 பட்ஜெட்டில் 557 கோடி ரூபாய். ஆனால் 2017-18
பட்ஜெட்டில் பாஜக அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 5 கோடி ரூபாய்.
இந்த ஆண்டு மட்டுமல்ல; பாஜக அரசு பதவியேற்ற ஆண்டிலிருந்தே இந்த அநீதி
ஆரம்பித்துவிட்டது. 2014-15இல் பாஜக அரசு பட்ஜெட்டில் துப்புரவுத்
தொழிலாளர் மறுவாழ்வுக்காக 439.04 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதில் 47 கோடி
மட்டுமே செலவு செய்தது
2015-16 பட்ஜெட்டில் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு 470.19 கோடி
ஒதுக்கப்பட்டு 10.01 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது. 2016-17
பட்ஜெட்டில் வெறும் 10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு
கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது.
1996இல் கேள்வி எழுப்பியபோது துப்புரவுத் தொழிலாளர் நல்வாழ்வின்மீது
அவருக்கு அக்கறை இருந்தது உண்மையாக இருந்தால், இந்த அநீதியை அவர்
சகித்துக்கொள்ள முடியாது. குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும் இந்த
அநீதிக்கு அவர் நிச்சயம் முடிவுகட்ட வேண்டும். செய்வாரா?
அவர் எழுப்பிய கேள்விகள், அவர் அக்கறை காட்டிய பிரச்னைகள் இவை.
இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்தால் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை
தலித் பிரதிநிதியாக நாம் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடையலாம். இல்லாவிட்டால்
அவர் பாஜக பிரதிநிதிதான் என்று முடிவு கட்டிக்கொள்ளலாம்.
இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட
ிருக்கும் வினாக்கள் மாநிலங்களவை தளத்தில் திரு.ராம்நாத் கோவிந்த்
அவர்களின் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
---- Pakshirajan Ananthakrishnan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக