பாண்டியப் பேரரசை வீழ்த்தியது முகமதியர்களா? வடுகர்களா?
++++++++
பிற்கால பாண்டிய வேந்தனான குலசேகர பாண்டியனுக்கு சுந்தரபாண்டியன்,
வீரபாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள். தந்தை ஆட்சி புரியும் காலம்
தொட்டே இருவரும் இளவரசர்களாக ஆட்சி புரிந்தனர். வீரபாண்டியன் கி.பி. 1296
- 97 ல் இளவரசுப் பட்டம் எய்தினான். அதற்கு அய்ந்தாறு வருடங்களுக்குப்
பிறகு கி.பி. 1303 ல் சுந்தரபாண்டியன் பட்டம் ஏற்றான். அரசுரிமைக்காக
இவ்விருவருக்கும் மூண்ட பொறாமையும், பகையும் பாண்டிய நாட்டின்
வீழ்ச்சிக்கு அடிகோலியது.
"வீரபாண்டியனின் திறமையையும், வீரத்தையும் கண்டு அவனே தனக்குப் பின்
அரசனாக வேண்டும் என மன்னர் குலசேகரன் பணித்தான். இதனால் வெகுண்ட
சுந்தரபாண்டியன் தந்தையை கொலை செய்து விட்டு மதுரையில் முடிசூட்டிக்
கொண்டான். இது நடந்தது கி.பி.1310ல் . சகோதர யுத்தம் ஆரம்பமாயிற்று.
வீரபாண்டியனுக்க
ு ஆதரவாக குலசேகரத் தேவரின் மகள் வயிற்றுப் பேரனும் கருர் பகுதிக்குத்
தலைவனுமான "மானர் பெருமான் " உதவி புரிந்தான். சுந்தர பாண்டியனோ டில்லி
சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் தஞ்சம் புகுந்தான். வீரபாண்டியன்
பாண்டியர் அரியணை ஏறினான்.
சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூரின் உதவியை
நாடினான். அப்போது மாலிக்காபூர் போசள நாட்டை வென்று அதன் தலைநகரான துவார
சமுத்திரத்தை கைப்பற்றியிருந்
தான். பாண்டிய சகோதரர்களுக்குள் சண்டை மூண்டிருந்த விஷயங்களை அறிந்து
கொண்ட மாலிக்காபூர் மதுரையின் மீது படையெடுத்தான்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பாண்டியப் பேரரசை வீழ்த்த அயலாரை
அழைத்து வந்தது சுந்தரபாண்டியனே. மாலிக்காபூர் படையெடுத்து வந்து மதுரையை
சூறையாடினான். மாலிக் கபூர் மதுரையில் நுழைந்தவுடன் பாண்டிய அரசன்
வீரபாண்டியன் தன் பரிவாரங்களோடு ஓடி விட்டான் என்று ஜியாவுதீன் பார்னி
குறிப்பிடுகிறார். வரலாற்றறிஞர் அமீர் குஸ்ரு எழுதுகிறார், "பாண்டிய
நாட்டிலிருந்து 512 யானைகள், 5000 குதிரைகள், 500 மணங்குப் பொன்,
முத்துகள், அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளையும் மாலிக்காபூர் கொள்ளையடித்து
சென்றான்" என்று பதிவு செய்கிறார்.
மாலிக்காபூர் சென்ற பிறகு மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும்
போட்டி போட்டுக் கொண்டு சிறிது காலம் ஆண்டனர். பாண்டிய நாட்டில் எங்கும்
குழப்பம் மலிந்திருந்தது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு
திருவாங்கூர் பகுதியை ஆண்டு வந்த சேரமன்னன் இரவிவர்மன் பாண்டிய நாட்டின்
மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினான். இது நடந்தது கி.பி.
1311-12 ல் .
இரவிவர்மன் தனது படைகளுடன் வடக்கே காஞ்சி வரை சென்றான். வேகவதி ஆற்றில்
இரண்டாம் முறையாக சேரன் முடிசூட்டு விழா நடத்தியதை வரதராஜ சுவாமி
கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தொண்டை மண்டலம் வரை பரவியிருந்த பாண்டியர்
ஆதிக்கம் சேரனால் ஒடுக்கப்பட்டது. சென்னைக்கருகிலுள்ள பூவிருந்தவல்லி
பெருமாள் கோவிலில் பாண்டியரது கயல்கள் மீது சேரனின் அங்குசம் பாய்வது
போன்ற சிற்பம் இன்றும் உள்ளது.
பிறகு சேரனை வீழ்த்தி இந்தப் பகுதியை காகதீய அரசன் பிரதாபருத்ரன்
கைப்பற்றினான். அடுத்தடுத்த வந்த தோல்விகளினால் பாண்டியர் ஆதிக்கம்
ஆட்டம் கண்டது. காஞ்சிப் பகுதியை பாண்டியர் இழந்தனர். ஆங்காங்கே
சிற்றரசர்கள் சுயத்தன்மை பெறத் தொடங்கினர். வட ஆர்க்காடு பகுதியில்
சம்புவராயர்களும், தென்னார்க்காடு பகுதியில் சேதிராயரும், பாண்டிய
நாட்டில் சில பகுதிகளில் வாணாதிராயர்களும் சிற்றரசர்களாக சுயேட்சையாக
இயங்கத் தொடங்கினர்.
இச் சூழ்நிலையில் தென்னிந்தியாவில் மேலும் இரு முகமதியப் படையெடுப்புகள்
நடந்தன. கி.பி. 1319 ல் குஸ்ரோ கான் படையெடுப்பு . கி.பி. 1323ல் முகமது
பின் துக்ளக் என்றழைக்கப்பட்ட உலுக்கான் படையெடுப்பு . உலுக்கான் மதுரையை
வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவன் தான் பாண்டிய அரசனை வென்று டில்லி
சுல்தான்களின் ஆட்சியை முதன் முதலில் 1323ல் நிறுவினான்.
பாண்டிய நாடு துக்ளக் இராச்சியத்தின் 23 மாகாணங்களில் ஒன்றாக
இணைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி சுல்தான் தொடர்பை
அகற்றிவிட்டு ஜலாலுதீன் ஆசன்ஷா தன்னை மதுரை சுல்தானாக பிரகடனப்படுத்திக்
கொண்டான். மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1335 முதல்
1378 வரை மாபார் சுல்தான்கள் ஆண்டனர். ஜலாலுதீனுக்குப் பிறகு அலாவுதீன்
உடாஜி, குதுபுதீன், கியா சுதீன், நாசிருதீன், அடில்ஷா, பக்ருதீன்
முபாரக்ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா போன்றோர் மதுரை சுல்தான்களாக
அரசாண்டனர்.
தொகுப்பாக...
1. மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் மகனான சுந்தரபாண்டியனால் கொலை செய்யப்படுகிறான்
2. சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் அரசரிமைப் போர் ஏற்படுகிறது.
3. வீரபாண்டியனின் ஆட்சிக்கெதிராக டில்லி சுல்தான் உதவியை நாடி பாண்டியப்
பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானான் சுந்தரபாண்டியன்.
4. தொடர்ச்சியான முகமதியப் படையெடுப்புகளால் பாண்டியர் ஆட்சி
வீழ்த்தப்பட்டு மதுரையில் சுல்தான் ஆட்சி தொடங்கியது.
பாண்டியரை வீழ்த்தி,பாண்டியர் ஆட்சியை அழித்தது வடுகரான விசய நகரப்
பேரரசு என்பது வரலாற்று மோசடி .பின் எப்படி விசயநகரப் பேரரசு
உருவாயிற்று? எப்படி மதுரையை வடுகர்கள் ஆண்டனர்...?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக