புதன், 20 செப்டம்பர், 2017

பாரதிதாசன் இன் திராவிட வந்தேறி ஈவேரா ஆதரவு 1959 ஆதித்தனார் ஐ எதிர்த்தல்

Valasavallavan > Kathir Nilavan
ஆதித்தன் அழிவு மனப்பான்மை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
நான் ஏறத்தாழ இருபதாண்டுகளாகச் சொல்லி வருகின்றேன்.
தெலுங்கு என்பது தமிழே
கன்னடம் என்பது தமிழே
மலையாளம் என்பது தமிழே என்று.
நான் முதன்முதலில் வடசென்னைக் கூட்டத்தில் விளக்கியதைக் கேட்ட பெரியாரும்
இதை ஒப்புக்கொண்டதோடு, நின்றுவிடாமல் பல கூட்டங்களிலும் மக்களுக்கு
நன்றாகப் புரியும் வகையில் இதை விளக்கியருளினார்கள்.
இது மட்டுமன்றித் திராவிடம், தமிழ் என்ற சொல்லின் திரிபே என்று என்
குயில் வாயிலாகவும், கோவையில் நடைபெற்றது முதலிய கூட்டங்கள் வாயிலாகவும்
விளக்கியிருக்கி
ன்றேன்.
இதைப் பெரியாரோ, பிறரோ மறுத்ததில்லை. நான் இவைகளைப் பற்றிப் பன்முறை
தலைப்பாடாக வற்புறுத்தி விளக்கி வந்ததற்குக் காரணம், திராவிடநாடு
தமிழ்நாடு என்ற அடிப்படையில் துவக்கப்படும் கிளர்ச்சி தமிழர்க்கு -
திராவிடர்க்கு மீட்சியை அளிக்கவல்லது; அத்தகைய கிளர்ச்சித் தலைவர்கள்
நான் சொல்லுகின்ற உண்மைகளைக் கைசோர விடுவார்களானால் அவர்கள் துவக்கிய -
துவக்கியுள்ள காரியம் குளறுபடி யடையும்; கருத்தில் முன்னுக்குப் பின்
முரண் ஏற்படும் என்பதே.
நாம் தமிழர் இயக்கத் தலைவர் என்று தம்மைக் காட்டிக் கொள்ள ஆசைப்படும்
ஆதித்தன் கூறுவதைக் கேளுங்கள்:
பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் குடியேறிய தெலுங்கு
மொழிக்காரர்கள் சிலர்; இன்னும் தங்களுடையே இல்லங்களில் தெலுங்கு
மொழியிலேயே பேசி வருவதைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். தமிழ்
மண்ணில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்கின்ற இவர்கள், தமிழ்மொழியைத் தங்கள்
தாய்மொழியாக ஏற்றுக்கொண்டு தமிழ்மொழியிலேயே பேசவேண்டும் என்று நான்
கேட்டுக் கொள்ளுகிறேன்!
இவ்வாறு ஆதித்தன் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசியுள்ளார்.
ஆதித்தனின் இந்தப் பேச்சுகள், தமிழகத்தில் உள்ளவர்களிடம் ஒரு
பெருங்கலகத்தை விளைக்கக் கூடியனவாகும். அவர் சொல்லும் தமிழன் வீடு ஒன்று.
அதன் அண்டை வீடு அவர் சொல்லும் தெலுங்கன் வீடு. அதன் அண்டையில் அவர்
சொல்லும் கன்னடத்தான் வீடு! அதன் அண்டையில் அவர் எண்ணும் மலையாளி வீடு!
இவர்கள் அனைவரும் ஆதித்தன் சொல்லும் தெலுங்கையோ கன்னடத்தையோ மலையாளத்தையோ
பேசக்கூடாதாம். அதையெல்லாம் விட்டுத் தமிழிலேயே பேசவேண்டுமாம்.
அறுநூறு ஆண்டுகளுக்குமுன் இந்தத் தமிழகத்தில் புகுந்தும், அவர்கள்
இன்னும் தமிழில் பேசவில்லையாம்.
அறுநூறு ஆண்டுகளாகியும் ஆதித்தன் பேசும் முறையிலே அவர்களும் பேசாததற்குக்
காரணம் அதுவும் இதுவும் தமிழே என்பதுதானே.
கோழியைக் கோடி என்றுதானே சொல்லுகிறான். அவன் தமிழ் பேசுகின்றானே ஒழியத்
தமிழல்லாத வடமொழியையா மேற்கொள்ளு கின்றான்?
வாழைப்பழத்தை வாயப்பயம் என்பவர் தமிழ் பேசுகிறானா வட மொழி பேசுகின்றானா?
வாழைப்பழத்தை வாயப்பயம் என்பவன் கூட அறுநூறு ஆண்டுகளாகத்தான் பேசுகிறான்,
ஏன், அவன் தமிழ்தான் பேசுகிறான்.
தமிழனும் மலையாளியும் கன்னடத்தானும்
தெலுங்கனும் ஓரினத் தானே
தமிழும் மலையாளமும் கன்னடமும்
தெலுங்கும் ஒருமொழியே
என்று மறுக்க முடியாத - மாற்றமுடியாத உண்மையைக் கைவிட எண்ணுவோர் எவரும்
திராவிடம் - தமிழகம் என்ற அடிப்படையில் எழும் எந்தக் கிளர்ச்சியிலும்
தலையிடவும், தகுதியற்றவர்கள் என்று நம்பவேண்டும்; உணரவேண்டும்.
தமிழன் என்பதற்கு ஆதித்தன் காணும் இலக்கணம் அலாதி யானது.
தமிழ் பேசும் பார்ப்பான் தமிழன்தான் என்பது ஆதித்தன் கொள்கை
. இந்த ஆதித்தன் தமிழ் பேசத் தெரியாத தமிழர்களைக் கண்டால் அவர்களை எங்கே
போகச் சொல்லுவாரோ தெரியவில்லை.
ஆதித்தன் ஒரு பொய்க் கொள்கையைத் தமிழகத்தில் மெய்க் கொள்கையாக்கித்
தருவதாக யாருக்கோ வாக்களித்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டி
இருக்கின்றது.
இவருடைய - இவர் வெளியிடும் எந்தக் கருத்தையும் புடம் போட்டுப்
பார்த்தாலும் மூளையில் நிலையாகக் காணப்படுவது ஒன்று. அது; பார்ப்பனர்
தமிழரே என்பதுதான்
. இந்தக் கருத்தை நிலைநாட்ட எந்தெந்தக் கலகத்தை தமிழகத்தில் உண்டாக்க
வேண்டுமோ - அதை யெல்லாம் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் உண்டாக்கியே
வருகின்றார் ஆதித்தன்.
பெரியார் கொள்கைக்கும் ஆதித்தன் கொள்கைக்கும் வேறுபாடு இல்லையாம்.
இவ்வாறு சொல்லும் ஆதித்தன் நாம் தமிழர் இயக்கம் ஒன்றைத் தனியே வளர்க்க
வேண்டியதென்ன?
பெரியார் கொள்கைக்கே வெடிவைத்து வருவது எதற்கு?
திராவிடர் கழகம் மேற்போட்டுக் கொண்டிருக்கும் பெரும் போராட்டத்தின் -
அதன் வெற்றி நிலையின் ஓட்டும் வாரைக் கைப்பற்றிய பின் இந்த ஆதித்தன்,
பெரியாரே நீர் தமிழரல்லர் வெளியிற் போய்விடுவீர் என்று சொல்வாரானால்
அதுபற்றி நான் வியப்படைய மாட்டேன்.
அவ்வாறு தமிழர் தலைவருக்கு ஆதித்தன் தைக்கும் குல்லாய் செல்லுபடியாகாது
என்பது எனக்குத் தெரியும்.
ஆயினும் நாளைக்குத் துரத்தப்படவேண்டிய ஆதித்தனை இன்றைக்கே
துரத்திவிடுவதால் காலம் மீதிப்படுமே என்றுதான் சொல்லவிரும்புகின்றேன்.
- குயில், கிழமை இதழ், 1.9.1959, ப.2 - 3
அன்று ஆதித்தனுக்கு எழுதியது. இன்று சீமான், பெ.மணியரசன் வகையறா தமிழ்த்
தேசியர்களுக்கும் பொருந்தும்.

Kathir Nilavan
1960 களுக்குப் பிறகு திராவிடத்தை பாரதிதாசன் ஆதரித்து எழுதியதை
காட்டுங்கள். 1962இல் திராவிடர்களுக்கு எதிராக பாரதிதாசன் எழுதிய
பாடல்கள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக