மலையாளிகளுக்கு எதிராக தமிழர் நடத்தும் நூற்றாண்டுப் போர்!
மாட்டிறைச்சி திண்பதற்கு எதிராக போராடிவரும் மலையாள இளைஞர்கள் சிலர் ,
திராவிட நாடு கேட்டு போராடப் போவதாக அறிவித்து இணைய தளங்களில் எழுதி
வருகின்றனர்(?) இதனைக் கேட்டு இங்குள்ள சில திராவிடர்கள் ஆஹா எழுந்தது
பார் திராவிடப்புரட்சி என்று தொடை தட்டி ஆட்டம் போடுகின்றனர். திராவிடம்
என்ற கருத்தியல் பிறக்குமுன்னே நானொரு தமிழன் என்று மலையாளிகளின்
ஆதிக்கத்திற்கு எதிராக திராணியோடு இயக்கம் வைத்துப் போராடியவர்கள்
தமிழர்கள் என்பதை திராவிடர்களுக்கு இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
1. 1810இல் தமிழர்களின் உரிமை பறிக்கும் மலையாளிகளுக்கு எதிராக முதல்
மலையாள எதிர்ப்பு இயக்கம் (ஒன்று) தொடங்கப்பட்டது. இதை தொடங்கியவர்கள்
மோசஸ், சாலமன், டேவிட், நீலன் ஆகியோர். மலையாளக் காவலரும்,
மேல்சாதியினரும் தாக்கியதில் இவ்வியக்கத்தினர் பலர் மாண்டனர்.
2. திருவிதாங்கூர் சமசுதான ஆட்சி மொழியாக மலையாள மொழி இருந்ததால்
மலையாளம் தெரியாத தமிழர்களின் நிலங்களை தங்கள் பெயருக்கு மலையாளிகள்
ஆவணப்பதிவு செய்து கொண்டனர். இதனை எதிர்த்து 1822இல் மலையாள எதிர்ப்பு
இயக்கம் (இரண்டு) தொடங்கப்பட்டது. புலிப்பனம் என்னும் ஊரைச் சேர்ந்த
இசக்கி மாடன் என்பவர் இவ்வியக்கத்தை தொடங்கினார். இவர் பத்மநாப
கோட்டைக்கு அருகில் தம்மை எதிர்த்த மலையாளப்படையை தமிழர்படை துணை கொண்டு
அடக்கினார்.
3. திருவிதாங்கூர் சமசுதானம் என்பது திருவிதாங்கூர் , திருவனந்தபுரம்,
பத்மாநாபபுரம், கொல்லம் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது . இந்தப்
பகுதிகள் 32 வட்டங்களாகவும் 245 பிடாகைகளாக பிரிக்கப்பட்டிர
ுந்தன. பிடாகைகளின் தலைமைப் பொறுப்பாளர்களுக்கு பிடாகைக்காரர்கள் என்று
பெயர். இப் பிடாகைக்காரர்களின் ஏவலாக விளங்கிய மலையாளிகள் தமிழர்களின்
நிலங்களில் விளைந்த நெல்லை நிலவரியாக வசூலித்தனர். இக் கொடுமையை
எதிர்த்து 1928இல் தமிழர் விடுதலை காங்கிரஸ் எனும் அமைப்பு உருவானது. இதை
உருவாக்கியவர் நெய்யூரைச் சேர்ந்த குஞ்சன் நாடார் ஆவார். பொய்யான
குற்றச்சாட்டின் பேரில் இவ்வியக்கத்தினர் பலர் சிறைவாசம் அனுபவித்தனர்.
4. சிலம்பாட்டம் , வர்மக்கலை ஆகிய பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆசான்
என்று பெயர். 1935இல் அப்பாவு ஆசான் என்பவர் தமிழர் கட்சியைத்
தொடங்கினார். பல ஆசான்களைத் திரட்டி மலையாளிகள் மீது பல்வேறு
தாக்குதல்களை நடத்தினார்.
5. 1938இல் தமிழ்மொழி மீட்புக்காக ஈத்தாமொழி தமிழ்ச்சங்கம்
தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் கவிஞர் பெ.இராமசாமி ஆவார்.
6. 1937இல் திருவிதாங்கூர் சமசுதானக் காங்கிரசு கட்சி தொடங்கப்பட்டது.
இதில் மலையாளிகள் பெருமளவில் நுழைந்து தமிழர்களை ஒடுக்கி வந்தனர்.
7. 1943இல் எஸ்.சிவன் பிள்ளை, டி.எம். சுந்தரம் ஆகியோரால் மத்திய வாலிபர்
சங்கம் தொடங்கப்பட்டது.
8. 1945இல் தமிழர் விடுதலைக் குறிக்கோள் கொண்ட நாஞ்சில் தமிழர் காங்கிரஸ்
தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் இரா. வேலாயுதம் பிள்ளை,
ஆர்.கே.ராம், பி.எஸ்.மணி, காந்தி ராமன் ஆகியோர்.
9. நெய்யூரில் 9.12.1945இல் மலையாளிகளின் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்
மார்சல் நேசமணி ஆவார்.
10. திருவிதாங்கூரில் உள்ள தமிழர்ப் பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்கக்
கோரி 16.12.1945இல் அகில திருவிதாங்கூர் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இதன்
தலைவர் எஸ்.சாம் நத்தானியல் ஆவார். பி.எஸ்.மணி , காந்தி இராமன்,
இரா.வேலாயுதம் பிள்ளை ஆகியோர் இவ்வமைப்பை வழி நடத்தினர்.
10. மார்சல் நேசமணி தொடங்கிய திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கம்
8.10.1947இல் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. திருவிதாங்கூரில் உள்ள
தமிழர்ப்பகுதிகளை மீட்கவும், மலையாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும்
இவ்வியக்கம் போராடியது. மலையாள இனவெறி பட்டம்தாணுப்பிள்ளை கும்பலின்
துப்பாக்கிச் சூட்டிற்கு 11க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகினர்.
பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகினர். தமிழர்களின் சொத்துகள்
சூறையாடப்பட்டன. வீரஞ்செறிந்த போராட்டத்தை நேசமணி தலைமையில் தமிழர்கள்
மேற்கொண்டு தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை
நகர் ஆகிய பகுதிகளை மீட்டெடுத்தனர். தமிழர்கள் வாழும் எஞ்சியுள்ள
தேவிகுளம், பீர்மேடு வட்டங்களை மலையாளிகள் பிடுங்கிக் கொண்டனர்.
1.11.11956இல் மேற்கண்ட பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில்
தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டன.
மேற்கண்ட வரலாறு அறியத்தருவது என்னவெனில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக
தமிழர்கள் தம்மை "தமிழர் " என்ற அடையாளத்தோடும், " தமிழ்நாடு " என்று
இயக்கத்தின் பெயரிலுமே மலையாளிகளுக்கு எதிராக போராடி வந்ததை அறிய
முடிகிறது. சென்னை மாகாணத்தில் இருந்த காலத்திலும் சரி, தமிழ்நாடு உருவான
காலத்திலும் சரி திராவிட இயக்கங்கள் மலையாளிகளை சேர்த்துக் கொண்டு
திராவிடநாடு கோரிக்கையை தமிழர்களிடம் பேசினார்களே ஒழிய , கேரளத்திற்குச்
சென்று மலையாளிகளிடம் பேச வில்லை. திராவிடநாடு சரக்கு அங்கு விலைபோகாது
என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மலையாளிகள் எப்போதும் தங்களை
மலையாளிகளாகவே கருதி வருவதால்தான் தமிழர்கள் மீது வன்முறையை அவ்வவ்போது
கட்டவிழ்த்து வருகின்றனர். அன்று தொடங்கிய தமிழர்- மலையாளி யுத்தம்
இன்னும் முடிய இல்லை. முல்லைப் பெரியாறு அணை உரிமைப்போரில்
மலையாளிகளுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் தொடரவே செய்கிறது.
இந்நிலையில் "திராவிடநாடு திராவிடருக்கே" என்பது தமிழர்களை ஏய்க்கும்
மாயமந்திரச்சொல் என்பதை தமிழர்கள் உணரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
நன்றி: முகிலை இராசபாண்டியன் எழுதிய " தமிழக எல்லைப் போராட்டங்கள்".

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக