வியாழன், 21 செப்டம்பர், 2017

சங்ககால உணவு அரிசி இறைச்சி கள் கூழ் மாட்டிறைச்சி இலக்கியம் உணவுமுறை 1.5

வெண்சோறு : வெள்ளிய அரிசிச் சோறு
இன்னும் வழக்கில் உள்ள உளுந்தச்சோறு சங்க காலத்தில் மங்கல நிகழ்ச்சிகளில்
பரிமாறப் பட்டது. அகநானூறு (86-1-2) “உழுந்து தலைப் பெய்த கொழுங்கழி
மிதவை” எனக் கூறும். இங்கு மிதவை என்பது சோற்றுக்குரிய பெயர்தான்.
அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட அவல், பொரி இரண்டையும் பால் கலந்து
சாப்பிடுவது என்னும் பழக்கம் ஆரம்பகாலத் தமிழகத்திலும் பிற்காலத்திலும்
இருந்திருக்கிறது. (ஆ.ஹசடிமலையளயஅல, 1972 ஞ 82-100)
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்பது பொது வழக்கு. பிங்கல
நிகண்டு கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் சொற்களைக் கூறும்
தென்னிந்திய வாய்மொழிக் கதைகளும் புத்த சமயம் தொடர்பான நூற்களும் கஞ்சி
குடிக்கும் வழக்கம் பொதுவானது என்கின்றன.
பார்ப்பனர்கள் கஞ்சி குடித்தது பற்றிய குறிப்புகள் புத்தயான தர்ம சூத்திர
விளக்கங்களில் வருகிறது. (மு.கூ. ஹஉhயலயலய, ஞ.103) வறுமைக் கோட்டிலிருந்த
மக்கள் பழைய சோற்றைக் கஞ்சி என்ற சொல்லால் குறிப்பிட்டனர். கஞ்சிக்கு
அலைந்து அடிமை ஆனோம் என்று பறை அடிமை ஆவணம் ஒன்று கூறும். பழங்கஞ்சி
மிகச் சாதாரண உணவாக இருந்தது என்பதற்கு இது ஆதாரம்.
அரிசியால் தயாரிக்கப்பட்ட ஆப்பம், இடி ஆப்பம், பிட்டு, கும்மாயம்,
இட்டளி, தோசை போன்ற உணவு வகைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும்
கல்வெட்டுகளிலும் அரிதாகக் காணப்படுகின்றன.
பிற்காலச் சோழர் காலத்தில் இடிஆப்பம் என்னும் அரிசிப் பலகாரம் வழக்கில்
இருந்திருக்கிறது. அதைப் பாலுடன் கலந்து சாப்பிட்டனர். இதற்குக்
கல்வெட்டுச் சான்று உண்டு. (மு.ஹ.சூடையமுயனேய ளுயளவசi, 1964, ஞ.73)
பெரும்பாணாற்றுப்படை கும்மாயம் என்னும் பலகாரத்தைப் பற்றிக் கூறும்
(194-95) அவித்த பயிற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது
கும்மாயம். இந்த உணவு பற்றி மணிமேகலை “பயிற்றுத் தன்மை கெடாது
கும்மாயமியற்றி”
(27-185) எனக் கூறும். அம்பா சமுத்திரம் கல் வெட்டிலும் இந்தக் கும்மாயம்
உணவு என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறது. இது பயிற்றுப் போகம் என்னும்
சொல்லால் குறிக்கப்பட்டது.
மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் கூறும். இது
தோசை வடிவில் இருந்திருக்கலாம். புட்டு அல்லது பிட்டு எனப்படும் அரிசி
உணவு பற்றிய செய்தி புராணங் களில் வருகிறது. திருவிளையாடல் புராணம் மண்
சுமந்த படலத்தில் “களவிய வட்டம் பிட்டு கைப் பிட்டு பிட்டு” எனக்
குறிக்கப்படுகிறது. இந்தப் பிட்டு வட்டக் கிண்ணத்தில் வைக்கப்பட்டது
என்கிறார் உரையாசிரியர்.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டு கூறும் பிட்டு குழாய் பிட்டு தான்.
தமிழ் வாய் மொழிப் பாடல் ஒன்று. குழாய்ப் புட்டு தயாரிப்பு பற்றிக்
கூறும். இடித்த உதிர்மாவு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை
ஆகியவற்றின் சேர் மானம் குழாய்ப்புட்டு. ஒரு பாளையில் பல கவுர் குழாய்கள்
உள்ள புட்டுக்குழல், பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.
இட்டளி என்ற பலகாரம் தமிழகத்தின் உணவாகவே வெளி உலகில் அறியப்படுவது, இடு
முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில் பெயர் பின்னர் இகர
விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்லி எனவும் படும்.
திருப்பதி கோவிந்தராசச் சுவாமிகோவில் இரண்டாம் பிரகாரம் தெற்குச் சுவரில்
உள்ள கல்வெட்டு “திருவாராகளம் கண்டருளாம் போலே அமுது செய்தருளும்
அப்பப்படி1, இட்லிப்படி , சுசியன்படி1, அவல் படி 2, மரக்கால் - பொரியமுது
2 மரக்கால் எனக் கோவில் நைவைத்தியத்தைப் பட்டியல் இடுகிறது. இது
கி.பி.1547 ஆம் ஆண்டுக் கல்வெட்டு. இங்கு இட்லிப்படி என்பது இட்லி
நைவேத்தியத்தைக் குறிக்கும். இதனால் இட்லி கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கு
முற்பட்டு வழக்கில் இருந்தது என்று கொள்ளலாம்.
கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுதான் முதலில் தோசை என்னும் பலகாரம் பற்றிக்
கூறும். தோசைக்கு அரிசி, உளுந்து, எண்ணெய் கொடுத்ததை இக் கல்வெட்டு
குறிப்பிடுகிறது. அச்சுதராயரின் கல் வெட்டு தோசைக்கு உளுந்து படியாகக்
கொடுத்தது பற்றிக் கூறும். இந்தக் கல்வெட்டுக்கள் வைணவக் கோவில்களில்
ஸ்ரீராம நவமியில் தோசை நைவேத்தியமாக அளிக்கப்பட்டதைக் கூறுகின்றன. இதனால்
தோசை என்னும் பலகாரம் கி.பி.16ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்ததாகக்
கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சிவன் கோவிலிலும் தோசை நைவேத்தியம்
செய்யப் படுகிறது.
தமிழகத்தில் தெலுங்கர், மராட்டியர் ஆதிக்கத்துக்குப் பின்னர் எண்ணெய்
பலகாரங்கள் பொது வழக்கில் வந்தன என்ற கருத்து உண்டு. இசுலாமியர்,
ஐரோப்பியர் போன்றோரின் செல் வாக்கு புதிய பலகாரங்களையும் உணவுப் பழக்கத்
தையும் மாற்றியிருக்கின்றன.
சங்கப் பாடல்களில் ஊன், கள் இரண்டிற்கும் தான் அதிகச் சொற்கள்
இருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இலக்கியங்களிலும் உணவின்
வகைகள் தயாரிப்பு பற்றிய செய்திகள் குறைவாகவே வருகின்றன. தனிப்பாடல்
திரட்டில் பலகாரங்களின் பட்டியல் உள்ள பாடல்கள் உண்டு.
தேன்குழல் அப்பம் தோசை யித்தியமாவுடலில்
திகழ்வடை அப்பளம் பணியாரங்கள் எலாம் நீத்தே
ஓங்கியமுதலட்டு பலகாரமுள அளைமார்க்கு
ஒடுங்கிய பாயசம் நிகர்த்த உற்றார்க்கும் அஞ்சி
வீங்கு இபந்கோடா முலையில் பூந்தினவு கொண்டுன்
விரகமதில் அதிரசமுற்று அன்பிட்டு வந்தான்
தாங்குதல் நின்கடன் செந்தில் வேலரசே
தண்பாலாய் அடைதல் எழில்தரு முறுக்குதானே
என்ற ஒரு பாடல் உண்டு.
தென்னிந்தியாவில் கி.பி.முதல் நூற்றாண்டி லேயே தேங்காய்
பயன்பாட்டிலிருந்தது. இங்கிருந்து தேங்காய் ரோம் நாட்டிற்குச் சென்றது
பற்றிய குறிப்பு உண்டு. தமிழகத்தில் தேங்காயை அரைத்து எண்ணெய் எடுக்கும்
இயந்திரம் கி.பி.7ஆம் நூற் றாண்டில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டு
செக்கு இயந்திரம் சக்கரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தாராசுரம்
கோவிலில் எண்ணெய் ஆட்டும் செக்கின் சிற்பம் உண்டு. செக்கை இரண்டு காளைகள்
ஓட்டு கின்றன. செக்கின் பின்னால் செக்காட்டுபவனும் உதவியாளாக ஒரு
பெண்ணும் நிற்கின்றனர்.
பிற்காலச் சோழர் காலத்தில் நல்லெண்ணெயும் தேங்காயெண்ணெயும் பொதுவான
பயன்பாட்டில் இருந்தன. திவ்விய பிரபந்தப் பாடல்களில் நல் லெண்ணெயை
சமையலுக்குப் பயன்படுத்தியது பற்றிய குறிப்பு உண்டு.
அப்பம் என்னும் பலகாரம் பற்றிச் சிலப்பதி காரத்திலும் மணிமேகலையிலும்
குறிப்பு உண்டு. மதுரைக் காஞ்சி, தீஞ்சேறு எனக் குறிப்பது (627)
அப்பத்தைத்தான் என்கிறார் உரையாசிரியர். பெரும் பாணாற்றுப்படை பாகோடு
கலந்து வட்டவடிவில் அப்பம் செய்யப்பட்டதைக் கூறும். (372 - 73)
வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் என்னும் உணவுப் பொருள்
பற்றி புறநானூறு கூறும் (381) இது. இப்போது உள்ள அக்காரையாக இருக்கலாம்.
பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் வரும் இனிப்பு பலகாரமான திருப்பணியாரம்
தேங்காயும் கருப்புக்கட்டியும் கலந்து செய்யப்பட்டது. தேங்காய்,
கதலிப்பழம், சீரகம், மிளகு, சுக்கு ஆகியவை கலந்து செய்யப்பட்ட ஒரு
பணியாரம் பற்றிப் பிற்காலப் பாண்டியனான பராக்கிரமனின் கல்வெட்டு கூறும்.
மதுரைக்காஞ்சி குறிப்பிடும் (625) மோதகம் இன்று வழக்கில் உள்ள மோதகமா
என்று தெரிய வில்லை.
கி.பி.15ஆம் நூற்றாண்டு, கிருஷ்ண தேவராயர் கல்வெட்டு அதிரசம் என்னும்
பலகாரம் செய்யத் தேவையானவை பற்றிக் கூறுகிறது. அதிரசத்திற்கு என்று தனி
அரிசி இருந்தது. இது அதிரசப்படி எனப் பட்டது. அதிரசம் தயாரிப்பதற்குரிய
பொருள் களைக் கல்வெட்டு,
அதிரச அரிசி 1மரக்கால்
வெண்ணெய் 2 நாழி
சர்க்கரை 100 பலம்
மிளகு 1 ஆழாக்கு
எனப் பட்டியல் இடுகிறது.
பெரியாழ்வார் பாடலில் சீடை பற்றிச் செய்தி வருகிறது. இவர் சீடையை
காரெற்றினுண்டை என்றார். தென் மாவட்ட வைணவக் கோவில்கள் சிலவற்றில்
சீண்டுருண்டை என்னும் பலகாரத்தை கோகுலாஷ்டமி விழாவில் நைவேத்தியமாகப்
படைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
சங்க காலத்தில் பொரி வழக்கில் இருந்தது. புழுங்கிய நெல்லிலிருந்து பொரி
எடுத்ததை ஐங் குறுநூறு கூறும். பொரியையும் பாலையும் கலந்து உண்ணும்
வழக்கம் மிகப் பழமையானது (ஐங்குறு 53).
அவல் பற்றிய செய்தி சங்கப் பாடல்களில் வருகிறது. அரிசியை இடித்துச்
செய்யப்பட்ட உணவு நெல்மா எனப்பட்டது. இது அவலாக இருக்கலாம். மூங்கில்
நெல்லை இடித்து ஒருவகை அவல் தயார் செய்தனர். (அகம் 141) அவலை இடிக்கும்
உலக்கையை பெருஞ் செய் நெல்லின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக