வியாழன், 21 செப்டம்பர், 2017

பள்ளர் பன்னாடி காலாடி குடும்பர் தேவேந்திரர் ஒருவரே செப்பு பட்டயம் கிபி 1301 கல்வெட்டு சாதி

R Velu Moopan
# பள்ளன்_குடும்பன்_தேவேந்திரன் அனைவரும் ஒருவரே காஞ்சி காமாட்சியம்மன்
கோயில்செப்புப் பட்டயம் மிக தெளிவாக விளக்குகிறது.
காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு
இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து
பேர்களும், முதலியார்களில் நான்கு பேர்களும், ஆசாரிகளில் ஐந்து
பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில்
ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பட்டயத்தின் காலம் கி.பி. 1301
அரசன்: மருதிங்க சோழன்
"சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம
ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி
சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம
யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக்
கொடுத்த விபரம்".
தேவேந்திரர் மெய்க்கீர்த்தி
"தேவேந்திரப் பள்ளரில் வெள்ளானை வேந்தன் மிக விருது பெற்றவன்.
சேத்துக்கால் சென்னன், சென்னல் முடிக்காவலன், தேவேந்திர வர புத்திரன்,
மண் வெட்டி கொண்டு மலையை கடைந்த கண்ணன், வெள்ளானை கொடி படைத்தவன்,
வெள்ளக் குடை, முத்துக்குடை, பஞ்சவர்ண குடை, முகில் கொடி, புலிக் கொடி,
அழகுக் குடை படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து
இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் தேவேந்திரப் பள்ளன்"
விருது பெற்ற தேவேந்திரர்கள்
"காஞ்சிபுரத்துப் பண்ணாடி, சின்னக் காஞ்சிபுரம் நாகப் பண்ணாடி,
சர்வதீரத்து வீதி முத்துப் பன்னாடியும், செஞ்சி நகரம் அரசப் பன்னாடியும்,
# தஞ்சாவூர்_சீரங்
க_மூப்பன் . # திருச்சிராப்பள்
ளி_மூக்க_மூப்பன் , திருவெங்கிமலை நயினார்க் குடும்பன் மதுரை நாராயணக்
குடும்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்திமதி காலாடி, திருச்செங்கோடு
பழனிப் பன்னாடியும் தேவேந்திர கூட்டத்தின் பெரியோர்களாகும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக