ஞாயிறு, 19 மார்ச், 2017

தேவரடியார் வெவ்வேறு பெயர்கள் தேவதாசி கல்வெட்டு பெண்ணுரிமை பெண்

aathi tamil aathi1956@gmail.com

மார். 7 (12 நாட்கள் முன்பு)
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn
தேவதாசிகளைக் குறிப்பிடும் சொற்கள்...
அடிகள்மார்-அடிகள் அல்லது அடிகள்மார் என்ற சொல்லின் நேரடியான பொருள்
பக்தர்கள் அல்லது கடவுளின் பணியாளர்கள் என்பதாகும்.
கூத்திகள்:பல்லவர் சாசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி,
கூத்திகள் என்ற சொல்லின் பொருள் நடனப்பெண்கள் என்பதாகும்.
ருத்ரகணிகையர் மற்றும் மாணிக்கத்தார்:
மாணிக்கத்தார் என்ற சொல் மாணிக்கங்கள் என்ற பொருளைத்தருவதாக
ும்.டி.என்.சுப்பிரமணியணின் கருத்தின்படி,கோவில்களோடு இணைந்திருந்த
நடனப்பெண்களைக் குறிப்பிடுகிற சொல் இது.
வெள்ளாட்டிகள்: வெள்ளாட்டிகள் என்ற சொல்லின் நேரடியான அர்த்தம்
Òசுதந்திரமான பெண்கள்Ó என்பதாகும்.
தேவனார் மகளார்: தேவனார் மகளார் என்பது தேவர் மகள் என்றும் கூட வேறு
பெயர்களாலும் அறியப்பட்டு வந்துள்ளனர்.
தளிச்சேரிப் பெண்டுகள்: கோவில் என்பதைக்கு றிக்கும் தளி: குடியிருப்புகள்
அமைந்த தெரு எனப் பொருள்படும்.சேர
ி:பெண்களைக் குறிப்பிடும் பெண்டுகள் ஆகிய மூன்று பெயர்ச்சொற் பகுதிகளில்
ஒன்றிணைந்த பெயர்ச்சொல்தான் தளிச்சேரிப் பெண்கள் என்பது.
தேவரடியார்: கி.பி.ஒன்பதாகம்
நூற்றாண்டிற்குப் பிறகு, தேவரடியார் என்ற சொல்லாடலே பல ஆவணங்களிற் காணப்படுகிறது.
பதியிலார்:
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு, பெரும் எண்ணிக்கையிலான சிலா
சாசனங்கள்,தேவதாசிகளைப் பதியிலார் என்ற ஓரு குறிப்பான வார்ததையாலேயே
அழைத்து வந்துள்ளன.
தலைக்கோலி: -பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களிலிருந்து தெளிவாக பெறப்படுவது
என்னவெனில் மத்திய காலப் பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகளில் பலருடைய
பெயர்களுடன் தலைக்கோலி என்ற முன்னோட்டு பெயர் வழங்கி வந்திருக்கிறது
என்பதாகும்.
நக்கன்:-சோழ மண்டத்தைச் சேர்ந்த தேவதாசிகள் நக்கன் என்ற அடைமொழியுடன்
அழைக்கப்படுகின்றனர்.
நக்கன் என்ற வார்த்தை அநேகமாக நக்ன என்ற ஸம்ஸ:கிருதச் சொல்லின் தமிழ்
வடிவமாக இருக்கலாம்.இதன் பொருள் நிர்வாணமான அல்லது தோலையே தனது மேலாடையாக
அணிந்தவர் என்பதாகும்..(முனைவர் கே.சதாசிவம், தமிழகத்தில் தேவதாசிகள்,
பின்னிணைப்பு1)
*முனைவர் கே.சதாசிவம் அளித்துள்ள குறிப்புகளை சுருக்கி இருக்கிறேன்.
7 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக