வியாழன், 30 மார்ச், 2017

சுபாஷ் போஸ் விமர்சனம் துரோகம் சயாம் மரணரயில் நேதாசி நேதாஜி மறுபக்கம்

aathi tamil aathi1956@gmail.com

24/1/16
பெறுநர்: எனக்கு
Tulasidass Subramaniam
"தமிழர்களுக்கு துரோகம் செய்த நேதாஜிக்கு இன்று பிறந்தநாளாம்"
சயாம் பர்மா ரயில்வே இரயில் பாதையமைக்க ஜப்பான் ஒரு லட்சம் தமிழர்களை
கொன்றதை கண்டு கொள்ளாத நேதாஜி. இவரின் பிறன்தாநாளை கொண்டாடும் தமிழர்
களுக்கு மிண்டும் நினைவுபடுத்துகிறேன் அந்த துயர சம்பவத்தை .
தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்.
பர்மா சியாம் மரண இரயில்வே (Japan’s Death Railway)
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற் றிலும் ஜப் பான் தமிழ்
மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி
நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான
இனப்படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.
தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறி யதோடு சிங்கள
அரசுக்குச் சாதகமான இராசதந்திர நக ர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம்
ஜப்பான் முன் னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான்
நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு
பரிமாணமாக அமைகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்க ப்பூரைக் கைப்பற்றிய
ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத்
திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பர்மா
வைத் தாக்கியபிறகு தனது படை யினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச்
செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை
இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பா தையை அமைக்க ஜப்பான் திட்
டம் தீட்டியது. அடர் காடுகள், கருங்கல், மலைகள்,
பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்லவே
ண்டி இருந்தது.
பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன் படுத்த ஜப் பான் படையினர்
திட்டமிட்டனர். அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்
கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட
தமிழ் ஆண்களும் இளைஞர் களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல்
மரணமடைந்தனர்.
ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என் பதால் இந்த புகையிரதப் பாதை
மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது. சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான
இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர்
முடிந்த பிறகு அதன் மீது சுமத் தப்பட்டது.
இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இரா ணுவம் 16,000 போர்க்
கைதிகளையும் கூடுதலான எண் ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.
மலாயாத் தோட்டப்புறங் களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின்
எண்ணிக் கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்
பிடப்படுகிறது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த
போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர். மலேரியா, கொலரா,
பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடி
யாதவர்கள் சுடப்பட்டனர். குற்ற வாளிகள் சிரச்சேதம் செய்யப் பட்டனர்.
மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது வொரு கண்ணீர் அத்தியாயம்.
சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்
கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்
டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள்
பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்
பட வில்லை.
இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல் களும் இன்றுவரை
வெளிவந்தபடி உள்ளன. குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River
Kwai) என்ற திரைப்படம் பிரசித் தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின்
மலைப் பிரதே சத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர்
அலெக் கினெஸ்
(Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.
அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன்
போர்ப்ஸ் (Cameron Forbes) நரக நெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559
பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி
கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப் பான் படை
அதிகாரிகள் மிக நல்லமுரை
யில் கவனித்தனர். சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடை
ந்த பிரிட்டிஷ் படைக்குத் தலை மை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen
Arthur Percival) மலாயா சிங்க ப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல்
தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita)பெரும் மரியா தையுடன்
நடத்தினார்.
1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்ப
தற்கு மாத் திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்
பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. கைதிகள்
ஒருவருக்கு மேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர்.
உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்ட
ு இறந்தனர்.
போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலி யப் படைகள்
அவர்களுக்குச் சொல் லொணாத் துன்பத்தைக் கொடு த்தனர். நீதி விசாரணை என்ற
பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர்.
விசாரணை இல் லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.
வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர்
வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனா. இன்னும் சிலர் ஜப்பான்
சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவ டிக்கைகள் வெள்ளை
அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.
இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர்.
மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கி விட்டது. ஆனால் ஈழத்தமிழர்
களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.
https://m.facebook.com/story.php?story_fbid=1177859578931258&id=100001216829061&refid=28&_ft_=qid.6243305784362025602%3Amf_story_key.-400190975946476793

கோடி AZAD HIND என ஆங்கிலத்தில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக