வியாழன், 30 மார்ச், 2017

குழந்தை பாடல் பலமொழி பரவல் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

26/1/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி
ரெண்டு குளம் பாழ் ஒண்ணுலே தண்ணியே இல்லை
தண்ணியில்லாக் குளத்திலே மண்ணைடுத்தவர் மூணுபேரு
ரெண்டுபேரு முடவர் ஒருத்தனுக்குக் கையேஇல்லை
கையில்லாத குயவன் செய்த பானை மூணுபானை
ரெண்டுபானை பச்சை ஒண்ணு வேகவே இல்லை
வேகாத பானையில போட்டரிசி மூணரிசி
ரெண்டரிசி பச்சை ஒண்ணு வேகவே இல்லை
வேகாத சோற்றுக்கு வந்தவிருந்து மூணுபேரு
ரெண்டுபேரு பட்டினி ஒருத்தன் சாப்பிடவே இல்லை"
இந்த நாட்டுப்புற நகையாட்டுச் சிறுவர் பாடல், தமிழிலுள்ளவாறே அடி
மாறாமல், சொல் மாறாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற
மொழிக் குழந்தைகளிடம் எக்காலத்தில் எப்படிப் பரவியதாம்?

சிறுவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக