வெள்ளி, 31 மார்ச், 2017

கருணாநிதி டாக்டர் பட்டம் உதயகுமார் கொலை தலித்

aathi tamil aathi1956@gmail.com

21/1/16
பெறுநர்: எனக்கு

ஜெயராமன். ரெ > உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
உதயகுமார் மரணத்திற்கு காரணமான உங்கள் மீது அன்று உரிய நியாயமான,
சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படிப்பட்ட Twit-களை தமிழகம்
பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
___________________________________
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்
கழக மாணவர் உதயகுமார் கொலை செய்யப்பட்டார் . அந்தக் கொலையின் உண்மைகளை
மறைக்க அன்றைய கருணாநிதி அரசு ஆடிய கபட நாடகங்களை உதயகுமாரின் தம்பி
கே.பி.மனோகரன் கருணாநிதிக்குப் பின்னால் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு எழுதிய கடிதம். (செய்திதாள்
வடிவம்)
____________________________
ஐயா,
கொலையுண்ட உதயகுமாரின் (அண்ணாமலைப்பல்கலைக் கழகம்) தம்பி கே.பி.மனோகரன்
எழுதிக் கொண்டது. எங்கள் குடும்பம் முன்னாள்(கருணாந
ிதி)அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற
மகனை இல்லை என சொல்லச் செய்து பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தைப்
பற்றி தாங்கள் அறிந்ததே.
இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் (கருணாநிதி)அரசாங்கம் 5 ஏக்கர்
நிலம் தருவதாக வாக்களித்தனர்.
#*வீடு கொடுப்பதாக கூறினர்.
#*வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன
பதில் சொல்ல வேண்டுமென என் தந்தையை பயமுறுத்தி சொல்ல செய்தனர்.
எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறினர். மற்றும் பல
வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் நாங்கள் இதுவதை எந்தவித
உதவியும் பெறவில்லை.
# என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ என்ற
சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது:
தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார
தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ
அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ எனக்கு வாங்கித்தரும்படி
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத்திற்காகவும்
என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக்ககின்றோம். தாங்களே எங்கள் இதய தெய்வமாக
இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று
உறுதியாக நம்புகிறேன்.
(ஒப்பம்)
கே.பி.மனோகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக