வெள்ளி, 31 மார்ச், 2017

திராவிட எதிர்ப்பு பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

16/1/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan என்பவர் கேளிர்ப் பிரியலன் மற்றும் 48 உடன் ஆகியோருடன்.
'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர் நினைவு நாள்
16.1.1981
தமிழன் வேறு, திராவிடன் வேறு!
இந்தியா விடுதலை அடைந்தவுடன் தமிழ் நாடு தமிழ் மாகாணம் எனத் தனியாய்ப்
பிரிந்து தமிழுக்கு ஆக்கம் பிறக்கும் என எண்ணியிருந்தோம். அது ஏனோ இன்று
முற்றும் கை நெகிழ விடப்பட்டுள்ளது. பிறநாட்டரால் மட்டுமின்றித் தமிழ்
நாட்டாராலும் தமிழுக்கு மாறான கருத்துகள் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டு
வருகின்றன. அவற்றுள் தமிழ்நாட்டைத் திராவிட நாடு (அல்லது தமிழனைத்
திராவிடன்) என்பதும் ஒன்று.
புதிதாய்த் கறந்த பாலுக்கும் புளித்துப் புழுபுழுத்தத் தயிருக்கும்
எத்துணை வேறுபாடுண்டோ, அத்துணை வேறுபாடு தமிழுக்கும்
திராவிடத்திற்குமுண்டு. புதிதாய்த் கறந்த பாலின்றே புளித்துப்
புழுபுழுத்த தயிரும் தோன்றியதாயினும் அவ்விரண்டையுங் கலக்க முடியாதவாறு,
அவற்றுட் பின்னது அத்துணை திரிந்துள்ளது.
அவ்விரண்டையும் வேண்டுமென்று கலப்பின், முன்னது தன்னிலை கெட்டுப்
பின்னதின் நிலையடையும். அங்ஙனமே தமிழும் திராவிடத்தோடு சேரின் திராவிட
நிலையடைந்து விடும்.
தமிழம் என்னும் பெயரும் அதனின்று த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என முறையே
திரிந்து வந்த திராவிடம் என்னும் பெயரும் எத்துணை வேறுபட்ட மொழிகளைக்
குறிக்குமோ, அத்துணையே, தமிழர் என்னும் பெயரும் அதனினின்று திரிந்த
திராவிடர் என்னும் பெயரும் வேறுபட்ட இனத்தாரைக் குறிக்கும்.
தமிழ் ஒன்றே தூயது; வடமொழித் துணையன்றித் தனித்தியங்க வல்லது, ஏனைத்
திராவிட மொழிகளோ தமிழ்த் துணையை விட்டு வடமொழித் துணையை வரையிறந்து ஆரிய
மயமாய்ப் போனவை. வடசொல் குறையக் குறையத் தமிழ் தூய்மையடைந்து உயரும்.
ஆனால், பிற திராவிட மொழிகளோ, வடசொல் கூடக் கூட எழில் பெற்றுயர்வனவாகக்
கருதப்படும்.
தமிழர் தம்மை ஆரியக் கலப்பில்லாத தனியினமாகக் கருதுவதில் பெருமை
கொள்கின்றனர். ஆனால் ஏனைத் திராவிடர் தம்மை ஆரியராக கூறுவதிலேயே பெருமை
கொள்கின்றனர். இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், திராவிடத்திற்குள்ளேயே
தமிழல்லாத பிறவற்றை ஒரு தனிச்சொல்லால் தொகுத்துச் சுட்ட
வேண்டியிருக்கின்றது.
தமிழல்லாத பிற திராவிமொழிகளைத் திராவிடகம் என்றும், தமிழரல்லாத பிற
திராவிட இனத்தாரைத் திராவிடகர் என்றும் அழைக்கலாம்.
......ஆரியன் என்னும் பெயருக்கு எதிரானது திராவிடம் என்பதுதான் என்னின்,
அதுவும் பொருந்தாது. ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்று
திருஞானசம்பந்தர் கூறியிருத்தல் காண்க. ஆரியத்தை எதிர்ப்பது தமிழ் ஒன்றே.
அவ்வெதிர்ப்புணர்ச்சியிருப்பதும் தமிழ் நாடொன்றே.
-ஞா.தேவநேயப் பாவாணர்.
(இக்கட்டுரை முத்தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தொடங்கிய 'தமிழர்
கழகம்' எனும் கட்சி ஏடான 'தமிழர் நாடு' இதழில் (15.5.1951) வெளியானது.
பாவாணர் எழுதிய முழு கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கு
வெளியிட்டுள்ளோம்.)
11 மணிகள் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக