வியாழன், 30 மார்ச், 2017

பிராமணர் பார்ப்பனர் சொல் ஆண்டாள் தந்தை பட்டர் அல்லது சித்தர் பறை நோன்பு பறையர்

aathi tamil aathi1956@gmail.com

2/2/16
பெறுநர்: எனக்கு
தமிழர் பண்பாட்டில் பிராமணர் .
* பிராமணர் எனும் சொல் காலத்தால் வெகு பிந்தியது.
* தொல்காப்பியர் குறிப்பிடுவது:
’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)
- தொல்காப்பியர்.
இதன் பொருள்,
''’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’
'''என்பதாகும்.
எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட
’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.
'''‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’''' (மரபியல் 76)
- தொல்காப்பியர்.
தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக்
கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி.
தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப் படுவதில்லை. அது,
தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப்
பொறுத்தே முடிவு செய்யப்படும்.
தொல்காப்பியம் வகுத்த நான்கு வகைப் பிரிவுகளின் அதிகாரப் படிநிலை,
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்
இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை... தீண்டாமையின் சூத்திரரும் இல்லை.
அந்த நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை கீழ்க்கண்டவாறு _
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர்
பிராமணர் இருக்கும் இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர்
வருகிறார். அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் ஆன்றோர் ..
சான்றோர் ... அறிவாளிகள் ஆவர். அரசு ஆட்சியின் போது , அரசர்களுக்கான
அறிவுரைகள் வழங்கியும், மெய்ஞான & சமய துறைகளில் ஈடுபட்டும் வந்த சித்தர்
/ ஞானி வகையினர் ; இவர்கள் தமிழர்களே.
தொல்காப்பியர் காலத்து அந்தணர் / பார்ப்பார் என்பது பிராமணரைக்
குறிக்கிறது என்பது ஆரவாரமான பிராமண திரிபு.
* திருவள்ளுவர் காலம் :
குறளில் , பார்ப்பார் & அந்தணர் எனும் 2 குடிகளைப் பற்றிப் பாடுகிறார்
வள்ளுவர்... இவர் காலத்தில் பிராமணர் எனும் சொல் கிடையவே கிடையாது.
1. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் -- திருக்குறள்.
2. அந்தணர் என்போர் அறவோர், மற்று எவ் உயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள்
திருவள்ளுவர் காலத்தில் சாதி வேறுபாடுகள் & கொடுமைகள் இருந்திருந்தால்
... அவர் ஒளவையார் போல் ஓரிரு செய்யுள் சொல்லாமல் அதற்கு ஓர் அதிகாரமே
பாடியிருக்க மாட்டாரா ?. எனவே, அவர் காலத்திலும் பிராமணன் , உயர்வு
தாழ்வு .... சாதி வேறுபாடுகள் இல்லை . அதனால் அப்படி ஓர் அதிகாரமே
பிறக்கவில்லை.
திருவள்ளுவர் காலத்து அந்தணர் & பார்ப்பான் என்பது ..... பிராமணரைக்
குறிக்கிறது என்பது இன்னும் ஆரவாரமான பிராமண திரிபு.
* ஆண்டாள் குறிப்பிடுவது :
ஆண்டாள் காலத்தில் பிராமண எனும் சொல் இல்லை ..
அவள் காலத்தில் பட்டர் எனும் இறை வழிபாடு தொடர்பு உடையோரும் ,
சித்தர்களுமே வழக்கில் இருந்துள்ளனர்.
அதனால்தான் ஆண்டாள் எப்போதும் தன்னை அடையாளம் இடும்போது இரண்டு வகையாக ,
தன் வளர்ப்பு தந்தையான பெரியாழ்வாரைக் குறிப்பிட்டுக் கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறாள்.
1 ''பட்டர் பிரான்'' கோதை
2 ''விட்டுச்சித்தன்'' கோதை
பிராமணன் எனும் சொல் ஆண்டாள் காலத்திற்கும் பிட்பட்டது....
இருந்திருந்தால் ''பறையை'' நோன்பு கருவியாக வைத்திருப்பாளா ?.... பறை
தருவான் .. பறை தருவான் என்று பாடியிருப்பாளா ?.... அவள் காலம் சாதி
பேதங்களுக்கு & ஏற்ற தாழ்வுக்கு அப்பாற்பட்டது .
* திருமூலர் காலத்து பிராமணர் & பார்ப்பார் :
'''சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே''' - திருமந்திரம் - 231
அந்தணர் ஒழுக்கம் - பாயிரத்தில் - 231 பாடலில் 'பிராமண' எனும் சொல்
இருக்கிறது... இது பார்ப்பான் எனும் சொல்லை நீக்கி விட்டு பிராமணன் எனும்
சொல் சொருகப்பட்டுள்ளதாக தமிழ் ஆய்வாளர் கூறுகின்றனர்.
அதேவேளை ....
18 சித்தர்பீடம் கூறுவது....
'''திருமூலர் காலத்தில் பிராமணர் , 'பிரமனை' மட்டுமே வணங்கும் சமூகம் ..
அவர்கள் இன்றைய சாதி பிராமணர் அல்ல ''''
http://www.tamilvu.org/slet/l41A0/
l4170uri.jsp?song_no=82&book_id
=118&head_id=67&sub_id=2375
திருமூலர் பார்ப்பான் எனும் தொழில் சார்ந்தவர் பற்றிப் பாடுகிறார்.
திருமூலர் , திருமந்திரத்தில் பல பாடல்களில் ''பார்ப்பான்'' பற்றி ...
அன்னார்தம் குறிசொல்லும் பாங்கு & சமய சடங்கு .... சம்பிரதாயம் / தீட்டு
பற்றி இடித்துரைத்துப் பாடுவதைத் தமிழர்கள் படித்து அறியலாம்.
இந்தப் பார்ப்பான் தொல்காப்பியர் சொல்லும் குறி / நிமிதிகம் பார்க்கும்
பார்ப்பார்/ன் (வள்ளுவ குலம்)... இவர்களும் இன்றைய சாதி ( பிராமணன் )
பார்ப்பான் அல்ல.
http://www.tamilvu.org/slet/l41A0/
l4170uri.jsp?song_no=78&book_id
=118&head_id=67&sub_id=2375
** பிற்காலத்தில் ' பிரமனை'க் கும்பிட்ட பிராமண சமூகத்தை சாதி பிராமணர்
ஆக்கினர் ... ஆயினர் ... & குறி சொல்லும் ' பார்ப்பரை' , பார்ப்பனர்
என்று தங்களாக ஆக்கிக் கொண்டு சாதி பார்ப்பனர் ஆயினர். .... எல்லாம்
வாழ்வியல் போராட்ட & பேராசையின் உச்சகட்டம்தான்.... காலத்துக்கு ஏற்ற
புது தோற்றம் & புது பொலிவு....
பாரதியார் குறிப்பிடுவது :
'ஆரியர்' என்றால் பிராமணர் என்று பிறழ்வு செய்த கருத்தை பெரும் ஆப்பு
வைத்து தகர்க்கிறார் பாரதியார்.
தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த ஆரியர் - கற்றறிந்த மேன்மக்கள்
எனும் பொருள் ஆக்கத்திற்கு ஆகி உள்ளது.
கிருஸ்துக்குப் பின் அல்லது சுமார் 1900 ஆண்டுகளுக்கு உட்பட்டுதான்
ஆரியர் என்றால் பிராமணர் என்று திரிபு தமிழ் இலக்கியத்தில் காண
கிடக்கிறது ; குமட்டூர் கண்ணனாரின் பதிற்றுப்பத்து ; இவர் சேரன்
இமயவரம்பனைப் பற்றிப் பாடும் போது 'ஆரிய' என்றால் பிராமணர் பொருளில்
பாடியிருப்பதைக் காணலாம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் - கி.பி.
71-129
Read more: பகலவன்: சேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு
http://pagalavantamil.blogspot.com/2010/01/
blog-post_9619.html
.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மரபினன் .இமயம் வரை படை நடத்திச் சென்றவன்
என்னும் பொருளில் இவன் "இமய வரம்பன்" எனப்படுகிறான். சங்ககாலத் தமிழ்
இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும் ,
குமட்டூர்க் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக்
குறிப்பவை . இவன் ஆரிய மன்னர்களை எப்படியெல்லாம் அழித்தான் என்று
பாடுகையில் ஆரியன் என்றால் பிராமணன் என்று பொருள் பெறுகிறது.
''பிராமணன்'' காலத்தால் பிந்திய சமூக படைப்பாக்கம்.
அதே வேளை ... அவர் ஆரிய என்று பாடியது மௌரியர் பற்றி .. அது இந்த
பிராமணர்களை அல்ல எனும் ஆய்வுகளும் உண்டு.
ஆக ,
# பிராமணன் என்பது 1800 / 1900 ஆண்டுகளுக்குப் முன் தமிழர் பண்பாட்டில்
... இந்திய வளர்ச்சியில் உருவாகி வந்த புத்தம் புது சாதி அடிப்படைச்சொல்
.
# இந்தியாவின் அந்தணர் / ஆன்றோர் சான்றோர் எனப்படும் பல ஆதி தமிழ்க்
குடிகளோடு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் மொழி வளம் இன்றி ... எழுத்து
மொழி இன்றி ... சிறு சிறு கூட்டத்தினராக வந்து கலப்பு செய்த பிற மண்
சார்ந்த கலப்பு இனம் பிராமணன் .
or
# பிராமணன் - பிராமணர்கள் தாங்கள் .... பிரமனின் புத்திரர் பிராமணன் என்பர்.
# இன்றைய 'பிராமணம்' , 'ஆரியம்' , 'பார்ப்பனம்' ஆகிய 3 - ம், தமிழர்
பண்பாட்டில் / நாகரிக வளர்ச்சியில் இருந்த -
*திரிபு அடைந்த பிராமணன்..
*திரிபு அடைந்த ஆரியம்... &
*திரிபு அடைந்த பார்ப்பனம்...
# பல்வேறு 'ரூபம்' / உருவம் தாங்கி காலத்தால் தமிழை .... தமிழ்
அடிச்சொல்லைக் கொண்டு அத்தமிழ்மொழியைத் திரித்து தனதாக்கி .. பல கதைகள்
சொல்லி சமன் நோக்கு அடிப்படையில் சமஸ்கிருதம் உருவாக்கி தமிழ் & தமிழர்
மரபுரிமை மறுத்த & மறைத்த இனம் பிராமண இனம்.
# தமிழர் வாழ்வை தமிழாக இருக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் களம்
இறங்கி தமிழரை & தமிழை உண்டு இல்லை என்று ஆக்க முயற்சித்து , முடிவில்
தமிழரை இந்தியர் ஆக்கி வெற்றி பெற்றதாக நாம் கொள்ள முடியும்.
இருந்தபோதும் ....
பாரதியார் & இளையபெருமாள் எனும் இராமானுசர் இக்குடியில் காலத்தால்
பிறந்து வந்தது தமிழை தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்தியவர்கள் ;
தமிழர் நாம் ... அவர்கள் பொருட்டு பிரம்மம் அறிந்த அந்தணர் - பிராமணர்
என்று இச்சொல்லின் வேர் சொல் காணலாம்... என்றால் மறுப்பவர் திருமூலர் ஆக
திருமந்திரம் ஆக இருக்கிறது....
சத்தியம் இன்றித் தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம் விட்டோரும் உணர்வு இன்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே.
(ப. இ.) உலகியல் ஒழுக்கவுண்மையும், அருளியல் ஆய்வாம் இறை, உயிர், தளை
என்னும் முப்பொருள் உண்மையும் சத்தியம் எனப்படும். அத்தகைய சத்தியமின்றி,
ஒப்பில்லாத சிவபெருமானே முழுமுதல் என்னும் தனி ஞானமாகிய திருவடி
உணர்வின்றி, மனம் போனவாறே பொறிகளில் சென்று புலன்களை நுகர்வதாகிய
வேட்கையினை விட்டுத் திருவடியினை யுணரும் உணர்வின்றி, இவற்றான்
ஆருயிர்க்கொழுநனாம் சிவபெருமான் மாட்டு விளையும் அழியாக் காதலாம்
பத்தியுமின்றி, மிக எளியவரும் நம்பியொழுகும் கடவுள் உண்மைக் கோளுமின்றி,
ஐம்புலன் நுகர்விலே மருள் கொண்டு இருளுக்கு அடிமையாய், மெய்ப்பொருளை
நாடாது திரியும் மூடர்கள் எங்ஙனம் பிராமணர்கள் ஆவார்கள்? ஒரு காலத்தும்
பிராமணர் ஆகார்.
(அ. சி.) பிராமணர் - பிரமனை வணங்குகிறவர்கள். (விஷ்ணுவை வணங்குவோர்
வைணவர்; உருத்திரனை வணங்குவோர் உருத்திர பல்கணத்தார்; மகேசனை வணங்குவோர்
மாகேசுரர்.)
http://www.tamilvu.org/slet/l41A0/
l4170uri.jsp?song_no=82&book_id
=118&head_id=67&sub_id=2375

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக