வெள்ளி, 31 மார்ச், 2017

ஏறுதழுவுதல் சிற்பம் சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

aathi tamil aathi1956@gmail.com

17/1/16
பெறுநர்: எனக்கு
Vel Murugan
ஏறு தழுவிய வீரனுக்கு புடைப்பு
கற்சிற்பம் :
ஏறுதழுவி பெண்கவர்ந்த வீரன்... தான் அடக்கிய காளையை ஒரு கையால் அணைத்து
முத்தமிட்டபடியும்... இருவரை மறு கையால் ஆசீர்வதித்தபடியாகவும் உள்ளது
இந்த புடைப்பு கற்பலகை. இருவர் காளையின் பின்புறமாக நின்று கயிற்றை
பிடித்தபடியும் உள்ளனர். வீரனை சூரிய சந்திர வம்சத்துக்குரியவனாக
வழிபட்டதாக கற்பலகையின் கீழுள்ள வழிபாடு தெரிவிக்கிறது.
இக் கல்வெட்டானது பெரம்பலூருக்கு அருகில்... பெரம்பலூர் ‍ துறையூர்
நெடுஞ்சாலையில் நாகலாபுரம் என்கிற கிராமத்துக்கு அருகில் உள்ளது. சாலை
ஓரத்தில் இருக்கும் இக்கல்வெட்டைப் பார்க்கையில் வேறு எந்த இடத்திலோ
நிறுவிட எடுத்துச்சென்றது போல் உள்ளது.
இக்கற்சிற்ப மாந்தர்களின் சிகையலங்காரத்தை வைத்துப் பார்த்தால்...
இச்சிற்பம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.
அருகில் உள்ளவர்கள் சென்று பார்வையிட்டு வரவும்
https://m.facebook.com/photo.php?fbid=1224207367590239&id=100000029634293&set=a.296489697028682.78679.100000029634293&refid=28&_ft_=qid.6240640194541989712%3Amf_story_key.-4996182350355242297&__tn__=E&fbt_id=1224208647590111&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_f435b4fcb21169f604aae59d93560cc6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக