|
12/1/16
| |||
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசியம் மீது பற்றுக்
கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேளையில் அவர் அதற்கு
சற்றும் குறையாத அளவுக்கு தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும்,
தமிழ் மண் மீதும் பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் தேவரைப் பற்றிய
புத்தகங்களை வாசித்தறியாத சிலர் தேசியம் என்ற பெயரில் தமிழுணர்வை, தமிழர்
உரிமையை கைவிட வேண்டும் என்று பேசுகிறார்கள். தேவர் இன்னமும் சிறிது
காலம் வாழ்ந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக தமிழர் உரிமைகளுக்காக
போரடியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தேவர் தமிழ் மொழி மீதும்,
தமிழ் நாட்டின் மீதும் பற்று வைத்திருந்தார் என்பதை விவரிக்கும் வகையில்
இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்
1949 பிப்ரவரி 13-ம் வெளியான ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் இதழான
கண்ணகியில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுகிறார் தேவர். தமிழின்
பண்டைக்காலப் பெருமை இன்றைக்கு மிகவும் குறைந்திருக்கிறது என்று
குறிப்பிடும் அவர், இன்றைக்கு வானுலக ஆராய்ச்சியில் சூரியனில் புள்ளிகள்
இருப்பதை மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள்,
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற சந்தேகப்படுகிறது அறிவியல்
என்று சொல்கிறார்.
ஆனால் பண்டைத் தமிழர் மண்ணுலகு, வானுலகு,
வானோர்க்கு உகந்த உலக என்கின்ற அனைத்தையும் ஆராய்ந்துள்ளனர். அண்டம்,
பிண்டம், சராசரம், அதலம்,
மத்தியம், பாதாளம் இவைகளில் உள்ள சஞ்சரிப்பு குறித்து சிவஞான போதமென்னும்
நூலைப் பார்த்து தெரிந்துகொள்க என்று குறிப்பிடுகிறார். உயிர்கள்
இறப்புக்குப் பின்னர் அவரவர் குணங்கள், செய்கைக்குத் தக்கவாறு பல
இடங்களிலான வசிப்பை பெறும் என்று சொல்லும் அவர்,
“யானென தென்னுஞ் செறுக்கறுப்பான்-வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்”
என்ற குறளை எடுத்துக் காட்டுகிறார்.
‘யான்’, ‘எனது’ என்னும் அகங்காரமும் ஆசையும் அற்றவன் மண்ணுலகினின்றும் உயர்ந்த,
வானுலகினின்றும் உயர்ந்த இடத்திற்குப் போய்ச் சேருகிறான் என்று
நிச்சயப்படுத்தி சொல்வதிலிருந்து வானுலகிலும் சஞ்சரிப்பு இருக்கிறது
என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அது யோக பாக்கிய சுவர்க்க நிலையே தவிர
முக்தி நிலையில்லை என்பதையும் வெகு தெளிவாகக் காட்டுகிறது என்று விளக்கம்
அளிக்கிறார்.
மேலும், பண்டைத் தமிழ் மக்கள் மூளை கலையில் மட்டுமல்ல,
சிற்பத்திலும், சித்திரத்திலும்,
கணிதத்திலும், வான ஆராய்ச்சியிலும்,
கடலாராய்ச்சியிலும் கரை கடந்து நின்றார்கள். எடுத்துக் காட்டாக
‘மொகஞ்சதாரோ’ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும் பண்டைத்
தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில
ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன
என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால்
செய்யப்பட்டுள்ளது. அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம்
திகைக்கிறது. இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ்
நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும் என்று சொல்கிறார்.
இந்தக் கட்டுரையில் தேவர், தமிழரின் ஓவிய நுணுக்கம், கணித நுணுக்கம், கடலாராய்ச்சி,
வைத்தியம், ஆகாய சஞ்சரிப்பு ஆகியவை குறித்துப் பேசுகிறார். இன்றைய
மருத்துவர்கள் போதிக்கின்ற சுகாதாரத்தை ‘ஆசாராக் கோவை’
என்ற சிறு நூல் போதிக்கிறது என்று தமிழின் பெருமை குறித்து பேசுகிறார்.
மேலும், தமிழ்ச் சங்கம், முதல் சங்கம்,
இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும், அகஸ்தியர், நக்கீரர்
போன்ற ஞானப்புலவர்களும்,
இடைக்காடர், ஔவை போன்ற துறவிகளும், முருகன்,
சிவபெருமான் போன்ற தெய்வங்களும் அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள்,
ஊக்குவித்தார்கள். அவை இன்று சீர்கெட்டுக் கிடக்கின்றன. இவைகளுக்கு
ஆக்ககாலம் வருகிறது என்று சொல்லி கட்டுரையை முடிக்கிறார். (பசும்பொன்
தேவரின் கட்டுரைகள்- கே. ஜீவபாரதி, பக்கம் 19, 20, 21, 22, 23)
மலேயா தமிழரின் நிலை
சுதந்திரம் பெற்ற நிலையில் மலேசியாவில் துப்பாக்கி வைத்திருந்தார் என்ற
ஒரே காரணத்திற்காக தொழிலாளர்களுக்காக போராடி வந்த கணபதி என்ற தமிழருக்கு
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதேவேளையில் இந்தியாவுக்கு எதிரான
போரில் ஹைதராபாத்திற்கு ஆயுதம் வழங்கிய சிட்னி காட்டன் என்ற
ஆஸ்திரேலியருக்கு ஆங்கில நீதிமன்றம் 200 பவுண்ட்கள் அபராதம் மட்டுமே
வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை சுட்டிக் காட்டும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
காமென்வெல்த்தில் உறவு வைத்துள்ள இந்திய அரசாங்கம். தமிழரான கணபதியை
காப்பாற்றத் தவறி விட்டது என்று குற்றம் சட்டி நேதாஜி இழலில் கட்டுரை
எழுதினார். அதேபோல சாம்பசிவன் என்ற மலேயாகாரரை பாதுகாக்க நடவடிக்கை
எடுக்காமல் லண்டன் பிரிவி கவுன்சிலில் பாதுகாக்கப் போவதாக இந்திய
அரசாங்கம் தெரிவித்தது. அதையும் தேவர் கண்டித்தார்.
இலங்கை தமிழரின் நிலை
இலங்கையில் கடுமையாக உழைத்துப் பிழைத்து வரும் தமிழர்கள் இரண்டாம்தர
குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு (தமிழகத்திற்கு)
பணம் அனுப்ப பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பதையும் தேவர் தனது
கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.
அதேபோல இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனா இந்தியர்கள் (தமிழர்கள்)
பொருளாதாரத்தை சுரண்டி இந்தியாவுக்கு அனுப்பி அங்குள்ள நிதிநிலையை
சீர்குலைப்பதாக குற்றம்சாட்டுவதை குறிப்பிட்டு இலங்கைக்கு பயணம்
மேற்கொள்ள இருக்கும் நேரு இந்தப் பிரச்சனைகளை போக்க உதவ வேண்டும் என்று
வலியுறுத்துகிறார். அவ்வாறு நேரு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை
வாழ் இந்தியர்களுக்கு அது பெருத்த இடராக விடியும் என்று எச்சரிக்கிறார்.
(பசும்பொன் தேவரின் சிரிய சிந்தனைகள் - க.பூபதிராஜா, பக்கம் 74-85)
தமிழனுக்குக் கிடைத்த மரியாதை
1955-ம் ஆண்டு சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளை வேறொரு பதவிக்கு
சென்றார். அப்போது அதைப் பராட்டும் விதத்தில் தேவர் ஆகஸ்டு 10-ம் தேதி
சட்டப்பேரவையில் பேசும்போது அது தமிழனுக்கு கிடைத்த மரியாதை என்று
பேசினார்.
ஏற்கனவே கவர்னர் பதவி கிடைக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்து அது கைநழுவிப்
போனது துக்கரமான சம்பவம் என்று குறிப்பிடும் தேவர்,
தற்போது கொடுக்கப்படும் பதவியும் நிலையை மாற்றும் பதவிதானே தவிர உங்கள்
பதவியை உயர்த்தும் பதவி என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார்.
உங்களுக்கு தற்போது கிடைத்திக்கும் கௌரவம் உங்களுக்கு மாத்திரம் சார்ந்ததல்ல,
முதலில் அது தமிழருக்கு கிடைத்த மரியாதையாகும். இரண்டாவதாகச்
சென்னைவாசிக்கு கிடைத்த மரியாதையாகும். மூன்றாவதாக இந்தச் சட்டசபைக்கு
கிடைத்த மரியாதை. நான்காவதாக ஹரிசன சமூகத்திற்குக் கிடைத்த
மரியாதையாகும். இத்தனைக்கும் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
என்று குறிப்பிட்டு பேசுகிறார். (சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - க.
பூபதிராஜா,
பக்கம் 169, 170)
“தமிழ் ராஜ்யம்” என்று பெயரிடுக
1956-57 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் மீதாக 1955 மார்ச் 3-ம் தேதி
தேவர் சட்டசபையில் பேசியபோது, தமிழகத்திற்கு
“தமிழ் ராஜ்யம்” என்று பெயரிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
மேலும் நிதியமைச்சர் தனது உரையை தமிழில் கொடுத்திருப்பதை பாராட்டும்
அவர், ஆந்திரா பிரிந்த பின்னர் இந்த ராஜ்யத்தை “தமிழ் ராஜ்யம்”
என்றழைக்காமல்
‘எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்’
என்று அழைப்பது மிகவும் வருந்த வேண்டியதாகும் என்று குறிப்பிடுகிறார்.
அந்த நிலை என்றைக்கு மாறும் என்பதே தெரியவில்லை என்று கூறி
வருந்துகிறார்.
மேலும் இந்தியாவிலுள்ள இதர ராஜ்யங்கள் எல்லாம் தங்கள் ராஜ்யமொழி
இன்னதென்று தீர்மானித்து விட்டன. வங்காளம்,
பஞ்சாப் போன்ற பெரிய மாகாணங்களும், ஒரிசா போன்ற சிறிய மாகாணமும் கூட
தங்கள் தாய் பாஷையை ராஜ்ய மொழி ஆக்கிக் கொண்டன. ஆனால் இங்கே தமிழ் மொழியை
ஆட்சி மொழியாக ஆக்காததற்கு காரணம், ‘சில கன்னடர்களும், சில மலையாளிகளும்
இன்னமும் நம்மோடு இருப்பதுதான்’ என்று சொல்லப்படுகிறது.
அது வாஸ்தவம்தான். ஆனால் மலையாளிகளுக்கு தனி ராஜ்யமாக திருவாங்கூர் -
கொச்சி இருக்கிறது. அதைப் போலவே கன்னடர்களுக்கும் தனி ராஜ்யமாக மைசூர்
இருக்கிறது. சென்னையிலிருந்து பிரிந்துபோன தெலுங்கர்கள் கூட ஆந்திர
ராஜ்யத்தை தங்களது ராஜ்யமாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆந்திர ராஜ்யம்
பிரிந்து போன பின்னாலும், நம் ராஜ்யத்திற்கு
‘தமிழ் ராஜ்யம் என்று பெயரிடாமல்
‘எஞ்சியுள்ள சென்னை ராஜ்யம்’
என்று பெயரிட்டிருப்பது வருந்த வேண்டிய விஷயமாகும் என்று சொல்கிறார்.
மேலும், இன்றைக்கு இந்த ராஜ்யத்தில் தமிழர் ஆட்சி வந்து விட்டது என்று
வெளியே பேசப்படுகிறது. அதோடு ‘பச்சைத் தமிழர்’ ஆட்சி ஏற்பட்டு
விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் ‘பச்சைத் தமிழருடைய ஆட்சியில்’
இந்த ராஜ்யம் ‘தமிழ் ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?
என்றும் கேள்வி எழுப்புகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக