வியாழன், 30 மார்ச், 2017

அகதி தமிழ்ச்சொல் வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

25/1/16
பெறுநர்: எனக்கு
திருவள்ளுவன் இலக்குவனார் >
தமிழ்ச் சொல்லாய்வு
‘கதி’ என்பது நல்ல தமிழ்ச்சொல். புகலிடம், பற்றுக்கோடு, ஆகியவற்றையும்
இச்சொல் உணர்த்தும்.
‘கதி’ என்பதை நாம் (ங்)கதி என்பதுபோல் ஒலிப்பதால் தமிழல்ல எனக் கருதுகிறோம்.
‘அ’ என்பது சுட்டெழுத்து மட்டுமல்ல. அன்மை, இன்மை, மறு தலை
ஆகியனவற்றையும் உணர்த்தும்.
‘அ’ சுட்டாயின் அகரம் அடுத்து வரும் சொல்லின் முதல் மெய் மிகும்.
எ.கா. அக்காலம், அம்முறை, அவ்வண்டி.
ஆனால், அன்மை, இன்மை, மறுதலை முதலியவற்றை உணர்த்தும் பொழுது அகரம்
அடுத்து மெய் மிகாது.
அகாலம், அசுரன் முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம்.
செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலியிலும் இது குறிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, புகலிடம் இன்மையை அல்லது பற்றுக்கோடு இன்மையை உணர்த்தும் வகையில்
‘அகதி’ என்னும் சொல் அமைந்துள்ளது.
எனவே, ஏதுமற்றவன் என்பதை விடப் புகலிடமற்றவன் என்பதைக்குறிக்க
ும் ‘அகதி’ என்பதே 'refugee' என்பதற்குப் பொருத்தமான சொல்லாகும்.
‘அகதி’ என்பதைத்தமிழ்ச்சொல் அல்ல எனக் கருதி ‘ஏதிலி’ எனப்பயன்படுத்தத்
தொடங்கிவிட்டோம்.
இச்சொல்மீது பற்றுக் கொண்டவர்கள் உள்நாட்டு அகதியை ஏதிலி என்றும்
புலம்பெயரும் ஏதிலியை அகதி என்றும் குறிப்பிடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா
விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக