வெள்ளி, 31 மார்ச், 2017

சேவல்சண்டை சிறந்த இனப்பெருக்க சேவல் தேர்வு ஏறுதழுவுதல்

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
Navalan Kumar 3 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
சேவக்கட்டும்,கிடாச் சண்டையும் தமிழரின் மரபியல் அறிவு:
எந்த ஒரு தமிழர் மரபிற்கு பின்னும் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு
அறிவியல் புதைந்திருக்கும். ஆனால் நமது சேவக் கட்டு , கெடாச் சண்டைக்கு
பின்னால் மரபியல் அறிவியலே புதைந்திருப்பது வியப்பே !.
அட போங்கப்பா நம்ம முப்பாட்டனுக ஏதோ பொழுது போகாமல் சேவலையும், ஆட்டையும்
வைத்து சண்ட போட்டு விளையாடியதெல்லாம் ஒரு மரபு என்று சொல்கிறீர்களே ?
என்று கேட்போர்களுக்கான பதிவே இது , சற்று பெரியதாக இருப்பதால் முழுவதும்
பொறுமையாக படிக்கவும்.
கி.பி 1822 பிறந்த ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த கிரிகோர் யோவான் மெண்டல்
தான் மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் , அவருக்கு பின்பே
ஐரோப்பாவில் மரபனு சார்ந்த புரிதலும் , அவர்களின் கால்நடை பராமரிப்பும்
செம்மைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகே தேர்ந்தெடுத்த வளர்ப்பு (selective
breeding) என்ற முறை விலங்குகளின் பராமரிப்பில் அவர்களால் பின்பற்ற
பட்டது. தேர்ந்தெடுத்த வளர்ப்பு (selective breeding) என்பது ஒரு
குறிப்பிட்ட தகுத்திக்காக, பண்புகளுக்காக (traits) , மனிதன் தனது
விலங்குகளை அவனுக்கு தேவையான பண்பின் அடிபடையில் தானே தேர்வு செய்து
இனப்பெருக்கம் செய்வதாகும். அதாவது ஒரு குண்டு சேவல், ஒரு குண்டு கோழியை
மட்டும் இனபெருக்கம் செய்வதன்மூலம் அடுத்த தலைமுறை குஞ்சுகள் குண்டாக
பிறக்கும் , அந்த குஞ்சுகளிலும் எது குண்டாக பிறக்கிறதோ அதை மட்டுமே
அடுத்தகட்ட இனப்பெருக்கதிற்கு அனுமதிப்பதன் மூலம் எல்லா கோழிகளும்
குண்டாகவே பிறக்கும். இந்த கோழிகள் அதிக அளவு கறி தருவதால் இந்த முறையில்
ஐரோப்பியர்களும் கோழிகளை இனபெருக்கம் செய்தார்கள் , இதுவே அப்படியே
ஆட்டினத்திற்கும் பொருந்தும். இதை செயற்கை தேர்வுமுறை (artificial
selection ) என்றும் கூறுவர் .
இந்த செயற்கை தேர்வு முறையில் உருவாக்க பட்டதே இந்த பிராய்லர் கோழிகள்.
இவ்வாறு எடைக்காக உருவாக்க பட்ட கோழிகளில் நோய் எதிர்ப்பு சக்திகள்
மிகவும் குறைந்துவிடுகிறது , ஆகையால் இந்த கோழிகள் , ஆடுகள் சீக்கிரம்
நோய்களால் தாக்க படுகின்றன. இதை சரி செய்ய இவைகளுக்கு தொடர்ச்சியாக நோய்
எதிர்ப்பு ஊசிகள் போடப்படுகிறது .இது அவற்றை உண்ணும் மனிதர்களையும்
பாதிக்கிறது. செயற்கை தேர்வு முறையில் உருவாக்கப் பட்ட கோழிகளும்
ஆடுகளும் , நோய் எதிர்ப்பு சக்தி அற்று இருப்பதற்கு காரணம் அவைகளின்
தகுதியான மரபணுக்களின் குறைபாடே .
புரியவில்லையா, சற்றே விளக்கமாக பார்ப்போம். இயற்கையில் ஒரு கோழியோ,
அல்லது ஆடோ இனபெருக்கம் செய்ய வேண்டும் என்றல் , ஆண் சேவல்களில் , ஆண்
கிடாக்களில் எது தகுதியானதோ அவற்றுடன் மட்டுமே பெண் கோழிகளும், ஆடுகளும்
இனபெருக்கம் செய்ய சம்மதிக்கும் , இதுவே இயற்கையாகும் . இதை இயற்கைவழி
தேர்வு (natural selection) என்று கூறுவர். ஆக தகுதியான பெற்றோருக்கு
பிறக்கும் குழந்தைகள் தகுதியானதாகவே இருக்கும். இதனால் பிறக்கும்
குஞ்சுகளும்,குட்டிகளும் பெற்றோரை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி ,
வலிமை மிக்கனவாக இருக்கும். இது ஒரு இனத்தின் தொடர்ச்சியை (evolutionary
continuation) உறுதி செய்யும்.
ஒவ்வொரு விலங்கினங்களும் அவற்றின் தகுதிகளுக்கான வரையறையில்
வேறுபடுகின்றன.( எ .கா) மயில்கள் , ஆண் மயிலின் கவரும் தன்மையின்
அடிப்படையில் எது தகுதியானது என்று பெண் மயில் முடிவு செய்கிறது,
கோழிகளில் , ஆண் சேவல்கள் ஒன்றோடுஒன்று சண்டையிட்டு எது வலிமையானதோ அது
வெல்லும். வெற்றிபெற்ற சேவல் மட்டுமே பெட்டை கோழிகளால்
இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப் படும் , இதுவே ஆடுகளுக்கும் பொருந்தும்.
ஆனால் பண்ணையில் பல்வேறு ஆண் ,பெண் விலங்குகள் இருக்கும் இடத்தில் இது
சாத்தியப் படுவதில்லை ,ஆக அணைத்து ஆண்களும் இனப்பெருக்கத்தில்
ஈடுபடுகின்றன , விளைவு தகுதி அற்ற குட்டிகளும், நோய் எதிர்ப்பற்ற
குட்டிகளுமே மிஞ்சும் , ஆக கொஞ்ச காலத்தில் பண்ணையில் உள்ள அணைத்து
விலங்கினங்களும் தகுதியற்ற நிலையில் இருக்கும்.
இங்குதான் தமிழனின் உயர்ந்த அறிவியல் சிந்தனை துணை நிற்கிறது , இயற்கையாக
நடந்த தேர்வு முறையை செயற்கையாக இவனே நடைமுறைபடுதினான்.
சேவக்கட்டு , கிடாச் சண்டை என்ற பழக்கத்தை கொண்டு வந்தான் . குறிப்பிட்ட
எந்த சேவல் , கெடா பந்தயத்தில் வெற்றிபெருகிறதோ அதைமட்டுமே இனபெருக்கம்
செய்ய அனுமதித்தான் . விளைவு வளுவான தகுதியான விலங்கினங்கள் அவனுக்கு
கிடைத்தது. ஆக இயற்கையை தமிழரை காட்டிலும் யாரால் நன்கு புரிந்துகொள்ள
முடியும். தமிழரின் ஒவ்வொரு மரபிற்கு பின்னாலும் ஒரு உயர்ந்த அறிவியல்
சிந்தனை மறைந்து கிடக்கிறது . ஆகவே தமிழர்களே சேவகட்டும் , கெடா
சண்டையும் தமிழரின் பண்டைய கால்நடை மேலாண்மை நுட்பம்(livestock
management technique ) . இதை தடை செய்ய இந்திய அரசாங்கம் அனுமதித்தது
செல்லாது. நம் மரபியல் கூறுகளை நாம் இனி ஒருபோதும் இழக்க கூடாது.
வாருங்கள் நமது மரபுகளை மீட்டெடுப்போம் .
- பாரிசாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக