வியாழன், 30 மார்ச், 2017

ஈழம் காந்தாரி குறிஞ்சாக்குளம்

aathi tamil aathi1956@gmail.com

25/1/16
பெறுநர்: எனக்கு
Ragu Nathan Jeevithan
ஈழத்தில் எங்க ஊரில்
எல்லோருமே சொந்தக்காரர்கள் தான்
வேறு இடங்களில் இருந்து வந்து எங்க ஊரில் நிலம் வாங்க முடியாது
விற்கமாட்டோம்
ஆனால் இடம்பெயர்ந்து வருவோருக்கு வீடுகளில் உள்ள அறைகளை ஒதுக்கி கொடுத்து
சாப்பாடு தேவைகளை கவனித்துக்கொள்வோம்.......
எங்க ஊர் என்றாலே சிங்கள நேவிக்கு ஒரு பயம்தான்
மாவீரர் நாள் என்றாலே ஊர் உணர்வுப்பூர்வமாக மாறிவிடும்
ஏனென்றால் வீட்டுக்கு ஒருவர் இயக்கம்
இல்லை என்றால் வீரச்சாவு
இதனாலேயே சிங்கள போலிஸ் தொடங்கி கடற்படை வரை கோபத்தில் இருப்பார்கள்
ஒருமுறை எங்கள் பிராந்திய கட்டளை தளபதி பகிரங்கமாக எங்க ஊரில் வந்து சொன்னான்
இந்த பிராந்தியத்தில் முதலில் எதையாவது அழிக்க சொன்னால் உங்க ஊரைத்தான்
அழிப்பேன் என்றான்
அப்படியென்றால் பார்த்துக்கொள்ள
ுங்கள் எவ்வளவு கோபத்தில் இருந்திருப்பார்கள்
கிட்டத்தட்ட எங்கள் மாவட்டத்தில் எங்க ஊரில் வைக்கும் மாவீரர் கட் அவுட்
அலங்கார வளைவுகளுக்கு தலைவரிடம் இருந்தே பாராட்டுக்கள் வரும்
இப்போ ஏன் இது சொன்னேன் தெரியுமா
எங்க ஊரு காவல்தெய்வம் யாரு தெரியுமா காந்தாரியம்மன்
கடலில் புலிகளோடு சண்டை வந்தால் இந்த சிங்கள நேவி கடற்படை முகாமில்
இருந்து எங்கள் ஊரை நோக்கி சுடுவான்
ஆனால் இதுவரைக்கும் யாருக்குமே ஒன்றும் நிகழ்ந்ததில்லை
இதற்கு காரணம் தேவி காந்தாரி என்று பேசிக்கொள்வார்கள்
இன்னொன்னு எங்க ஊரு காந்தாரியம்மன் சாலையில் வச்சி மிக முக்கியமான
தளபதிகள் போன ஜீப் வெடிச்சி சிங்கள ராணுவம் செத்தது
ஊருக்குள் நுழைந்த சிங்கள போலிஸ் 3 பேரு சாயங்காலம் மனியம்புட்டி
(ஊருக்கு பின்னாடி) என்ற மணல் மேட்டில் வெட்டி புதைக்கப்பட்டிருந்தனர்
பக்கத்தில் உள்ள நேவி அடிபட்டு கிட்டத்தட்ட நூறு நேவி செத்து முகாமையே
எடுத்துட்டான்
இன்னும் இருக்கு
காந்தாரியம்மனுக்காக இப்பதிவு.

மகாபாரதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக