வியாழன், 30 மார்ச், 2017

பசு வாங்கும்போது கவனி அடையாளங்கள் மாடு ஏறுதழுவுதல் வேளாண்மை நாட்டு பசு கலப்பின வேறுபாடு படம்

நாட்டுமாடு சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மாடு

aathi tamil aathi1956@gmail.com

26/1/16
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan 3 new photos இணைத்துள்ளார்.
நல்ல கறவை பசு வாங்க :
==============================
=====================
1) பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும்.
2) வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.(வாலின் தசைப் பகுதி
பின்னங்காளின் முட்டியை தாண்ட வேண்டும் )
3) பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம்
4) தொப்புள் பெரியதாக இருபது நலம்.
5) பின்னங்கால் நல்ல இடைவெளியுடன் இருப்பது நன்று.
6) வயிறு நன்றாக இறங்கி இருக்க வேண்டும்.
7) முதுகு எலும்புகள் தெரிவது நல்லது. இது எதற்கு என்றால், பசுவானது,
தான் உண்ணும் அனைத்தையும் பாலாக மாற்றிவிடும். இல்லாவிடில், உடலாக
மாற்றிவிடும்.
8) மடிகள் பெரியதாக இருப்பது நலம்.
9) காம்புகலுக்கிடையில் நல்ல இடைவெளி இருத்தல் நல்லது.
10) பசு ஆக்ரோசமாக இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.
11) பசுவின் கண்கள் நல்ல ஒளியுடன் இருக்க வேண்டும்.
12) பசு நுனிப்புல் மேய கூடாது. நன்றாக தீவனம் உண்ண வேண்டும். (நுணிப்
புல மேய்வது வயதான பசுக்கள் மட்டுமே..காரணம் பற்கள் தேய்ந்துவிடும்)
13) பற்கள் 6 அல்லது 8 கொண்டதாக இருக்க வேண்டும்.
14) பசுவின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். நீங்கள் சிறிய குச்சி
வைத்து தோலை தொடும்போது, தோல் துடிக்க வேண்டும்.
15) மடி நரம்புகள் நன்றாக தெரிய வேண்டும்.
16) பசுவின் கீழ் வயிற்றில் தொப்புளில் இருந்து ஒரு நரம்பு மாடிவரை
நீண்டு செல்லும். அந்த நரம்பு நல்ல தடிமனாக பெரியதாக இருக்க வேண்டும்.
17) கறவை பசுவை பால் பீச்சி வாங்கலாம். பால் பீச்சும்போது, குண்டாவில்
விழும் பாலின் சப்தம் 'சர் சர்' என்று நன்றாக கேட்க வேண்டும். அப்படி
கேட்கவில்லை என்றால், பசு அதிக பால் தராது என்று பொருள்.
நன்றி : விவசாயி
https://m.facebook.com/story.php?story_fbid=730298667107401&id=100003818232006&refid=28&_ft_=qid.6243820514694829672%3Amf_story_key.-3383444999415332376&fbt_id=730298667107401&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_927fb6555a8e05bce48bbf5352e88a51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக