வியாழன், 30 மார்ச், 2017

பள்ளர் விதை சுழற்சி விவசாயம்

பள்ளர் விதை சுழற்சி விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

6/2/16
பெறுநர்: எனக்கு
Sureshpandiyan Mavilpatti
விதைத்தல்
தொல் பாண்டியத் தமிழ் குடியான பள்ளர்@குடும்பர்களின் வேளாண் தொழில்
விதைகளை நிலத்தில் விதைப்பது என்பது ஓர் பண்பாட்டு மரபாகும்,
நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பார்கள்..
விதைகளை "விதைப் பெட்டி"என அழைக்ககூடிய பனை ஓலை நார்களால் முடையப்பட்ட
பெட்டியில் போட்டு வீட்டில் ஈசனா மூலயையை நோக்கி வணங்குவார்கள்...
விதைப் பெட்டிக்கு சந்தனம் குங்குமம் வைத்திருப்பார்கள்
விதைப்பதற்கு முன் குல தெய்வம் அல்லது ஊர் கிராம தெய்வங்களை
வணங்கி(எண்ணெய் விளக்கு போட்டு) சாமிக்கு காணிக்கையாக சில்லரை காசுகளும்
அல்லது இந்த விதைகள் நன்கு சாகுபடி அடைந்தால் உற்பத்தியின் மூலம்
கிடைக்கும் தானியத்தின் முதல் படியை காணிக்கையாக செலுத்துகிறேன் என
வேண்டிக் கொள்வர்....
வயலில் முதல் விதையை ஈசான மூலையில் தான் விதைப்பர்( ஈசுவரனை வணங்கி).
விதைப் பெட்டியில் விதைகளை வைத்துக் கொண்டு விதைப்பர்...
விதைகள் விதைக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டார்கள்...இது போன்ற பல உள்ளன,,,
சங்க இலக்கிய நூல்களில் வேளாண் விதைத்தலை பற்றிய தகவல்:
நிலத்தை நன்கு பண்படுத்திய பிறகு விதைவிதைப்பர். இச்செய்தி சங்க
இலக்கியங்களில் பலஇடங்களில் பயின்று வந்துள்ளன. நெல்விதைத்தல், வரகு
விதைத்தல், சாமை விதைத்தல்முதலியவை முல்லை மற்றும் மருத நில
மக்களின்தொழில்கள் என்பது இங்கு நினைவில்கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்றுபதிற்றுப்பத்தும்
உழவர்கள் காலையில்விதைப்ப
தற்காகச் சிறிய கூடைகளில் விதைகளைஎடுத்துச் சென்ற செய்தியை,
".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)
என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள்நன்கு உலர (காய) வைத்ததற்கான
சான்றும்கிடைக்கிறது.
"வெண்ணெல் வித்தின் அறைமிசைஉணங்கும்" (211:6)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக