வெள்ளி, 31 மார்ச், 2017

தீண்டாச்சேரி நோயாளிகளே தீண்டத்தகாதோர் சான்று கல்வெட்டு சோழர் சேரி தீண்டாமை

aathi tamil aathi1956@gmail.com

15/1/16
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
தீண்டாச் சேரி அரசியல்
நம்ம கம்முனாட்டிச வாதிகளும் (அதான்பா கம்முயுனிசுட்டுகள்) ஆரிய
அப்ரசண்டிகளான வடுகர்களும் தலித்தியர்களும் தமிழரசர்களின் கல்வெட்டுகளில்
தீண்டாச்சேரி என்று ஒன்று இருந்ததை கண்டுபிடித்து விட்டார்களாம். அப்போவே
தீண்டாமை இருந்ததென்று குய்யோ முய்யோன்னு கத்துகிறார்கள். சரி அப்படி
என்ன தான்பா நம்ம அரசர்கள் தீண்டாமை செஞ்சாங்கன்னு பார்த்தா ஒன்னும்
இல்லை.
தீண்டார்னு ஒரு வகுப்பை சோழநாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும்
கோயிலிலுள்ள குளத்தை பயன்படுத்த விடவில்லையாம். பாண்டிய நாட்டில்
தீண்டத்தகாதவரை எல்லாம் அடைச்சு வச்சு ஒரு சேரி கட்டுனாங்களாம். அதான்
தீண்டாச்சேரியாம். இந்த தீண்டார்தான் இப்போது தலித்துகள் என்று
கம்முனாட்டிச வடுக தலித்தியவாதிகளால் அடையாளப்படுத்தப்படும் குழுக்களில்
ஒன்றான பறையராம். இப்படி எல்லாம் கதை கட்டுகிறார்கள்.
சரி. இதை வாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். நம்ம அப்ரசண்டிங்க சொல்றது போல
பாண்டியர் காலப் பறையரை தீண்டார்னு வச்சுக்குவோம். அப்போ பறையருக்கு
தனிச்சேரியும் உழப்பறையருக்கு தனிச்சேரியும் எதனால்? அப்போ பறையர்கள்
தீண்டார்னு குறிக்கப்படவில்லைனு பொருள். சரி அப்போ தீண்டார்னு
குறிக்கப்பட்டது யார்னு பார்த்தா வண்ணாரும், மருத்துவரும்/
அம்பட்டரும். அப்போ இவர்கள் தமிழரசர்கள் காலத்தில் தீண்டத்தகாதவர்களான்னு
பார்த்தா அதுவும் இல்லை. காரணம் தீண்டார்னு பிரிவு இருக்கும் அதே
குழுக்களில் தான் தீண்டுவார்னும் ஒரு குழு இருக்கு. அதாவது தீண்டா
வண்ணார் ஒரு பிரிவு. தீண்டுவா வண்ணார் ஒரு பிரிவு. அதுபோலவே தீண்டா
மருத்துவர்/
அம்பட்டர் ஒரு பிரிவு. தீண்டுவா மருத்துவர்/அம்பட்டர் ஒரு பிரிவு.
அப்போ தீண்டார் என்பது கம்முனாட்டிசர்களின் கடவுளான உரோமிலா தாப்பர்
கூறுவது போல தீண்டத்தகாவதவர்னு எடுத்துக்கொண்டால் அதே
வண்ணார்/மருத்துவர்/நாவிதர் குழுக்களில் தீண்டுவார்னு ஒரு பிரிவிருக்கே.
அப்போ அவர்களும் தீண்டத்தகாதவர்களா? அது எப்படிய்யா எதிரெதிர் சொற்கள்
ஒரே பொருளை குறிக்கும்?
கோயிலிலுள்ள குளத்தை தீண்டார் பயன்படுத்தக்கூடாதென்றால் அது
தீண்டாமையாம். அப்போ நம்ம காம்ரேட்டுங்க என்ன சொல்ல வராங்க? கோயிலுக்குள்
வர தீண்டாருக்கு உரிமை உண்டு. ஆனால் குளத்தை பயன்படுத்தக்கூட
ாதுன்னு சொல்ல வராங்களா? அப்போ கோயிலுக்குள் வரும் உரிமை பெற்றவர்கள்
எப்படி தீண்டத்தகாதவர் ஆனார்கள்? இல்லை கோயிலுக்குள் வரவே தீண்டார்க்கு
அனுமதி இல்லைன்னா அப்போ கல்வெட்டில் கோயிலுக்குள் வரவே தீண்டார்க்கு
அனுமதியில்லைன்னு அல்லவா போட்டுருக்கனும்? ஏன் குளத்தை மட்டும்
பயன்படுத்தக்கூடாதுன்னு போட்டார்கள்?
காரணம் குளத்தை துவைக்கவோ முடிவெட்டவோ மருத்துவக்கழிவுகளை கொட்டவோ
பயன்படுத்தினால் என்னவாகும்? குளம் மாசுபடும். அதனால் குளத்தை மட்டும்
பயன்படுத்தக்கூடாதென்று கல்வெட்டு சொல்கிறது. தீண்டாச்சேரி இருக்கும்
ஊருக்கு அருகில் தான் நம்ம பூதவியல், ஆசீவகம், ஜைனம், பௌத்தப்பள்ளிகளு
ம் உண்டு. நோயாளிகள் அதிகம் புலங்கும் பகுதிகளே தீண்டாச்சேரியாக
வழங்கப்பட்டன என இது மூலம் உறுதியாகிறதல்லவா? சமணர்களான பூதர், ஆசீவகர்,
ஜைனர், பௌத்தர் படுகைகள் அனைத்தின் அருகிலும் மூலிகைகள் அரைக்கும்
கல்லுரல் இன்றும் மலைகளில் இருப்பது இதற்கு நல்லதொரு சான்று.
ஆய்க்குடி மகாலிங்க மலையில் உள்ள கல்லுரல்கள்.
இப்படி பகுத்துப் பொருள் காண வேண்டிய தீண்டார், தீண்டுவார் போன்ற சொற்களை
ரோமிலா தாப்பர் சொல்லிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே நம்பும் அவரின்
பக்தர்களின் பக்தி பரவசத்தை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.
சரி மருத்துவரிலுள்ள தீண்டான் பிரிவுக்கும் தீண்டுவான் பிரிவுக்கும் என்ன
வேறுபாடு. தீண்டான் எனப்படுவோர் ஆசான்கள். நோயாளிகளுக்கு உணவுமுறை
சொல்வோர். தீண்டுவார் என்போர் நாடி மருத்துவர். வன்மமருத்துவ முறை
அறிந்தோர். சுளுக்கெடுக்க நன்கறிந்தோர்.
மருத்துவர்களுக்கு அக்காலத்தில் முடிமழிக்க தேவையே பெரும்பாலும் இல்லை.
அக்கால ஆண்கள் கூந்தலை நீளமாக வளர்ப்பவர்கள். அதனால் அக்கால
மருத்துவர்கள் மருத்துவத்தையே பெருவருவாய் தொழிலாகக் கொண்டிருந்தோர்.
முடிகாணிக்கை கொடுக்கப்படும் காலங்களிலும் இடங்களிலும் மட்டுமே
முடிமழித்தலை செய்தார்கள்.
அக்கால நிலைமை இப்படி இருக்க இன்று பிராமணர்களே அக்காலத்தில் மருத்துவர்
தொழிலை செய்துவந்தனர் எனச்சொல்லி மருத்துவர் சமுதாயத்தின் வரலாற்றை
பிராமணியத்துக்க
ு தாரை வார்க்கும் வேலையை திராவிடக்கழக இயக்கங்களும்
கம்முனாட்டிசுடுகளுமே செய்து வருகிறார்கள். இவர்கள் தான் தங்களை சாதி
ஒழிப்பாளர்களாய் அடையாளப்படுத்துகிறார்கள் என்பது மேலதிக நகைச்சுவைத்
துணுக்கு.

1 கருத்து:

  1. அருமை ஐயா. இப்போது ஒருவர் இராசராசன் காலத்தில் தீண்டாச் சேரி இருந்தது என்று வாதிட்டார். அதுகுறித்துத் தேடியபோது உங்கள் கட்டுரை கிடைத்தது. அருமையான விளக்கம். தரவுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு