|
17/1/16
![]() | ![]() ![]() | ||
ஆலங்காடு துரை. பிரபாகரன்
உணர்கிறார் பெருமையாக.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு என் தாத்தா "ரெத்ணா" சோடா கம்பெனி என்று
ஒரு சோடா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்...
அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாட்டு வண்டியை
பயன்படுத்திதான் பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை,
வேதாரண்யம்,திருத்துறைபூண்டி பகுதிகளுக்கு விநியோகம் செய்வாராம்...
இரவில் அந்த மாட்டு வண்டி மாடுகளை ஆலங்காட்டில் இருந்து பூட்டிக்கிளம்பி
இவர் உறங்கிவிடுவாராம்...
அந்த மாடுகள் சரியாக பயணித்து நிதமும் விநியோகிக்கும் கடைகளில் சரியாக
நின்று கழுத்தில் கட்டபட்ட சலங்கைகளை ஆட்டி என் தாத்தாவை எழுப்புமாம்...
அதை விட பெரிய ஆச்சர்யம் துவரங்குறிச்சியில் மிக பிரபலமான அந்த கால
ஜோதிடரிடம் சென்று மாடுகளுக்கு ஜாதக குறிப்பு எழுதி வாங்கி
வந்திருக்கிறார் என் தாத்தா...
இப்படி உதவிய தன் மாடுகளின் நினைவுகளை தற்கால சூழலுடன் ஒப்பிட்டுஅடிக்கடி
அசை போடுவார் என் தாத்தா
அந்த மாடுகள் இறந்த பிறகு எங்கள் வீட்டின் எதிரே புதைத்து இன்று வரை
தெய்வமாக வணங்கி வருகிறோம்...
இத்தனைக்கும் என் தாத்தா இறை நம்பிக்கை இல்லாதவர்...
தன் மாடுகளை மட்டுமே போற்றி வருகிறார்
# தமிழர்கள் மனித நேயவாதிகள் அல்ல உயிர் நேயவாதிகள் என்பதற்கு என் தாத்தா
ஒரு உதாரணம்... https://m.facebook.com/story.php?story_fbid=685960898212397&id=100003954780577&refid=28&_ft_=qid.6240632961966082565%3Amf_story_key.205465440093289973&fbt_id=685960898212397&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_381cbbdbee1c545a05d9f7503679befb
உணர்கிறார் பெருமையாக.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு என் தாத்தா "ரெத்ணா" சோடா கம்பெனி என்று
ஒரு சோடா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார்...
அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாட்டு வண்டியை
பயன்படுத்திதான் பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை,
வேதாரண்யம்,திருத்துறைபூண்டி பகுதிகளுக்கு விநியோகம் செய்வாராம்...
இரவில் அந்த மாட்டு வண்டி மாடுகளை ஆலங்காட்டில் இருந்து பூட்டிக்கிளம்பி
இவர் உறங்கிவிடுவாராம்...
அந்த மாடுகள் சரியாக பயணித்து நிதமும் விநியோகிக்கும் கடைகளில் சரியாக
நின்று கழுத்தில் கட்டபட்ட சலங்கைகளை ஆட்டி என் தாத்தாவை எழுப்புமாம்...
அதை விட பெரிய ஆச்சர்யம் துவரங்குறிச்சியில் மிக பிரபலமான அந்த கால
ஜோதிடரிடம் சென்று மாடுகளுக்கு ஜாதக குறிப்பு எழுதி வாங்கி
வந்திருக்கிறார் என் தாத்தா...
இப்படி உதவிய தன் மாடுகளின் நினைவுகளை தற்கால சூழலுடன் ஒப்பிட்டுஅடிக்கடி
அசை போடுவார் என் தாத்தா
அந்த மாடுகள் இறந்த பிறகு எங்கள் வீட்டின் எதிரே புதைத்து இன்று வரை
தெய்வமாக வணங்கி வருகிறோம்...
இத்தனைக்கும் என் தாத்தா இறை நம்பிக்கை இல்லாதவர்...
தன் மாடுகளை மட்டுமே போற்றி வருகிறார்
# தமிழர்கள் மனித நேயவாதிகள் அல்ல உயிர் நேயவாதிகள் என்பதற்கு என் தாத்தா
ஒரு உதாரணம்... https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக