திங்கள், 27 மார்ச், 2017

பூதவியல் முதல் மதம் மெய்யியல் ஆசீவகம் தோற்றம்

aathi tamil aathi1956@gmail.com

8/2/16
பெறுநர்: எனக்கு
ஈழத்துத் தமிழர் மெய்யியல் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஐம்பூதவியலே தமிழர் மெய்யியல் பள்ளிகளில் மூத்ததென தெளிவுறக்காட்டுகிறது
கீழுள்ள நெடுஞ்செழியனின் வரிகள். ஆசீவகம் மிகவும் பிற்காலத்தில் தான்
தோன்றுகிறது. அதாவது அருகம் தோன்றுவதற்கு ஈராண்டுக்கு முன்னதாக ஆசீவகத்தை
மற்கலி தோற்றுகிறார். கி.மு. ஆறாம் நூறாண்டில் தான் இது தோன்றுகிறது.
அதற்கு முன்னர் ஆசீவகம் இல்லை. அதனால் தான் தொல்காப்பியத்தில் பூதவியல்
பேசப்படுகிறதே ஒழிய ஆசீவகத்தின் ஊழ் பேசப்படவில்லை.
எனில் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட திணை தெய்வங்கள் ஐந்தும் எப்படி ஆசீவக
மரபினராவர்? அப்படி கூறும் ஆசீவகத்தை குத்தகைக்கு எடுத்தது போல் பேசும்
இயக்கங்கள் தன் வரட்டு கௌரவத்தை காப்பாற்ற ஆசீவகம் தான் தமிழர்
மெய்யியலின் மூலம் என புரட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.
மேலும் கீழுள்ள நெடுஞ்செழியனின் அட்டவணை முழுமையானதல்ல. அது ஈழத்துத்
தமிழர் மெய்யியல் நூலில் முழுமைப்படுத்தப்படும்.
https://m.facebook.com/AncientEelamTamilsPhiloshophies/posts/1768654326753329?refid=13&_ft_=top_level_post_id.658073034296353%3Atl_objid.187097431645831%3Athid.100002809860739

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக