செவ்வாய், 21 மார்ச், 2017

நாயக்கர் ஹொய்சளர் வன்னியர் தொடர்பு சம்புவராயர் மைசூர் உடையார் யாதவர் ?

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
Nmurali Naicker
ஹொய்சால நாடான "மைசூரில்" இன்று இருக்கும் யதுகுல "மைசூர் உடையார்கள்"
ஹொய்சாளர்களின் சமூகத்தவர்களே ஆவார்கள். இவர்கள் தங்களை "யாதவர்கள்"
என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் சின்னமும் "கண்ட பேரண்டமாகும்".
அது இன்று "கர்நாடக அரசின் சின்னமாகும்". மைசூர் உடையார்கள் தங்களை "ஸ்ரீ
கண்டிரவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இப் பெயர் வேளிர் அரசன்
"கண்டீரக் கோப்பெருநள்ளியின்" பெயரை நமக்கு நினைவுப் படுத்துகிறது.
விஜயநகர பேரரசர்களும் (சங்கம,சாளுவ,துளுவ) "யது வம்சத்தவர்கள்" என்றும்
"யாதவர்கள்" என்றும் "க்ஷத்ரியர்கள்" என்றும் "சந்திர வம்சத்தவர்கள்"
என்றும் "தேவகியின் கணவர் வழி வந்தவர்கள்" என்றும் பல கல்வெட்டுகளிலும்
செப்புபட்டையங்களிலும் குறிக்கப்பெற்றனர். விஜயநகர பேரரசர்கள்
ஹொய்சாளர்களின் உறவினர்கள் ஆவர். திருவண்ணாமலை ஆவூர் கல்வெட்டில்
(கி.பி.1379), விஜயநகர அரசன் வீர கம்பண்ண உடையாரை மூன்றாம் ராஜ நாராயண
சம்புவராயர் "மைத்துனனார்" என்று குறிப்பிடுகிறார்கள். இக் கல்வெட்டின்
மூலம் சம்புவராயர்களும் விஜயநகர அரசர்களும் உறவினர்கள் என்பது
தெரியவருகிறது. கி.பி. 1463 ஆம் ஆண்டின் "உஞ்சினி செப்புபட்டயம்" விஜய
நகர சாளுவ மன்னன் மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "சம்பு மாமுனிவன் யாகத்தில்
தோன்றியவர்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்
அய்யன் சூரர் (திரு) புவனம் தெக்ஷனாதிபதிக்கு
விசையர் மகா வீரப்பிறதாபர் வன்னிய வேட கண்டர்
அக்கினிப் புரவி யுள்ளவர் மகா பிறாக்கிறம சாலியறானவர்"
(Avanam - 19, Jul-2008, Page-104), (Mallikarjuna Maharayar, 1463 A.D).
பாண்டிச்சேரி வில்லியனூர் செப்புபட்டயம், மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "ராஜ
வன்னியன்" என்று குறிப்பிடுகிறது. அது :-
"கண்டன்மார் தந்திரிமார் படையாக்ஷியார் என்னும் பல பட்டம் பெற்ற சோம
சூர்ய அக்கினி வம்ச பன்னாடரான உறவின் முறையார் அனைவரும் போய் இராஜ வன்னிய
இராஜஸ்ரீ மல்லிகார்ச்சுன தேவ மகா இராயரைக் கண்டு பேச அப்போது இராயரும்
சிம்மாசனம் விட்டு இறங்கி நமது வம்சத்தாரென்று தெரிந்து தேவாலய
பூஜையிருக்க மடத்து தருமம் நமக்கேனென்று இராயரும் கேட்க" என்று
தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக