செவ்வாய், 21 மார்ச், 2017

சேரர் வன்னியர் தொடர்பு யாதவர் ஆயர் ?

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
Nmurali Naicker
பண்டைய அரசர்களான சேரர்கள் "அக்னி குலத்தவர்" என்று குறிப்பிடப்பட்ட
ுள்ளனர் (செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகும் புகழ் சேரன்). வில்லிபாரதம்,
திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள்
சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. சேரர்கள் சங்ககால
இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றும் குறிப்பிட்டுள்ள
ார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும்
மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். தமிழ்நாடு அரசு
வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள்
க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்"
என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார்
அவர்கள் யதுவம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப்
பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும்
"நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர்
(குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில்,
ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சேர மன்னர் குலசேகர ஆழ்வார், யது குலம் (என்னும்) யாதவ குலத்தில்
அவதரித்த கிருஷ்ண பகவானைக் "எங்கள் குலத்தில் பிறந்தவரே" என்று
குறிப்பிடுகிறார்கள். அதாவது "யது (என்னும்) யாதவ குல கிருஷ்ண பகவானை"
குலசேகர ஆழ்வார் அவர்கள் "தங்களது வம்சத்தை சேர்ந்தவர்" என்று தமிழ்
வேதமான "நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்" மிகத் தெளிவாக
குறிப்பிடுகிறார்கள். மேலும் மன்னர் பெருமான் குலசேகரர் அவர்கள், "ஆ(பசு)
மேய்க்கும் குலத்தில் பிறந்த நந்தகோபர், பகவன் ஸ்ரீ கிருஷ்ணரை வளர்க்கப்
பெற்ற புண்ணியத்தை தங்களது யது (யாதவர்) குலத்தில் பிறந்த வாசுதேவர்
(கிருஷ்ணனின் தந்தை) பெறவில்லையே" என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்க
ள்.

1 கருத்து:

  1. அப்படி என்றால் மொத்த யது வம்சமும் ஆடுமாடு மேய்தவர்களே காலப்போக்கில் அவர்களில் குடி கொண்டிருந்த சத்திரிய குணத்தால் அரசன் ஆனார்கள் நந்தகோபலனும்,வாசுதேவனும் ஒரே குடியினரே அவர்களிடம் இருந்த தொழில் முறையே வேறு அவ்வளவே

    பதிலளிநீக்கு