|
26/7/16
| |||
Nmurali Naicker
கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன்
"யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி"
என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (Foreign Notices
of South India, K.A. Nilakanta Sastri, University of Madras, Page -
150 & 153). சேரமான் பெருமாளுக்கு முடிச்சூட்டுதல் விழாவில் அப்
பகுதியில் வாழ்ந்த "வேளாண்மை செய்யும் வேளாளர் இன மக்கள்" கலந்து கொண்டதை
பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அதில் மன்னர்
சேரமான் பெருமானை "அக்னி கோத்திரத்தான்" என்று குறிப்பிடுகிறது. அது:-
"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.
எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும்
உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "யது குல மலையமான்கள்"
ஆவர்.
சங்க இலக்கியங்கள் சேரரை "மலையர்" என்று குறிப்பிடுகிறது. சேரர்களின்
கிளை மரபினர்களான "மலையமான்கள்" தங்களை சேதிராயர்கள் என்றும்
மிலாட்டுடையார் என்றும் கோவலராயர் என்றும் கல்வெட்டுகளில்
குறிப்பிட்டுள்ள
னர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள "திருக்கோயிலூரே" மலையமான்களின்
தலைநகராகும். சங்ககாலத்தில் இவ்வூர் "திருக்கோவலூர்" என்று
அழைக்கப்பெற்றது. மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும்
சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்க
ள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள்,
"வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்"
என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ
ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான
திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய
தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும்
"கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய
நாயன்" என்றும் குறிப்பிடுகிறது.
குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட
கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப்
போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய
நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க
காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில்
வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது
"வன்னியத் தலைவன்" என்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக