செவ்வாய், 21 மார்ச், 2017

வன்னியர் பள்ளி வேளிர் தொடர்பு ?

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
Nmurali Naicker
செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று
குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ
மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி
சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற
செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்)
"பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட
கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது
"மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும்
பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய
மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம்,
திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம்
நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில்
"மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக
குறிப்பிடுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1016) கீழூர் கல்வெட்டில், மலையமான்களை
"பார்க்கவகோத்தி
ரத்து பிராந்தகன் யாதவ பீமனான உத்தமசோழ மிலாடுடையார்" என்று
தெரிவிக்கிறது. திருக்கோயிலூர் கல்வெட்டு (கி.பி.1059) மலையமான்களை
"பார்க்கவ வம்சத்து மிலாடு உடையார் இரணகேசரி இராமரான நரசிங்கவன்மர்"
என்று தெரிவிக்கிறது. மேற்குறிப்பிட்ட சோழர்கள் காலத்துக் கல்வெட்டின்
மூலம் மலையமான்கள் தங்களை "யாதவ பீமன்" என்றும் "பார்க்கவ கோத்திரம்"
என்றும் "பார்க்கவ வம்சம்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றனர்.
கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் தங்களை மூவர் கோயில் சமஸ்கிரத கல்வெட்டில்
"யது வம்சம்" என்றும் "யாதவர்" என்றும் குறிப்பிடுகின்றனர். அங்கு
அவர்களின் கன்னட மொழி கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவர்கள்
"சோழர்களுக்கு" மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். கொடும்பாளூர்
இருக்குவேளிர்கள் தங்களை "இருக்குவேள்" என்றும் "இளங்கோவேள்" என்றும்
"இருங்கோளன்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.

1 கருத்து:

  1. மலையமான் பார்கவ வம்சம்,
    வன்னியர்கள் பல்லவர் வழி தோன்றிய குடி. வரலாறை வளைப்பது வசதிக்கேற்ப வன்னியர்களுக்கு கைதேர்ந்த கலை

    பதிலளிநீக்கு