செவ்வாய், 21 மார்ச், 2017

குலோத்துங்கன் வன்னியர் பள்ளி சோழர் சாளுக்கியர் தொடர்பு ?

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
Nmurali Naicker
சோழர்கள் காலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார்
கோயில், விளந்தை, உடையார்பாளையம் போன்ற பகுதிகள் "இருங்கோளப்பாடி" என்று
கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. வெள்ளாற்றின் இருபுறங்களிலும் சோழர்கள்
காலத்தில் வேளிர்களான "இருங்கோளர்கள்" ஆட்சிபுரிந்தார்
கள். சங்ககாலத்தில் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது
தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார்கள். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" சோழ
மன்னனான கரிகாலச் சோழன் வென்றிருக்கிறான். இவனது தலைநகரான "பிடவூர்"
என்பது இன்றைய காட்டுமன்னார் கோயில் தாலுக்காவில் உள்ள "புடையூர்" ஆகும்.
இது வெள்ளாற்றின் தெற்கு கரையோரத்தில் உள்ளது. முற்காலச் சோழனான
கோசெங்கண்ணான் விளந்தையில் ஆட்சிபுரிந்த வேளிரான "விளந்தை வேளை" போரில்
வென்றிருக்கிறான். இன்றைய உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள
விளந்தையானது, கி.பி.10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில்
இருங்கோளப்பாடி நாட்டு "விளந்தை கூற்றம்" என்று வழங்கப்பட்டது.
வெள்ளாற்றின் வடக்கு கரையோரத்தில் உள்ள எறும்பூரில் உள்ள முதலாம்
பாராந்தகச் சோழன் (கி.பி.935) கல்வெட்டு "இருங்கோளன் குணவன் அபராஜிதன்"
என்ற வேளிர் மன்னரை பற்றி குறிப்பிடுகிறது.
காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டு (கி.பி.959), "இருங்கோளர்
கோனான நாராயணன் புகளைப்பவர் கண்டன்" என்று குறிப்பிடுகிறது. இவர் சுந்தர
சோழனின் கல்வெட்டில் (கி.பி.962) "இருங்கோளர் கோனான புகழ்விப்பிரகண்டன்
அவனி மல்லன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
கி.பி. 986 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு வேளிர் அரசனான "இருங்கோளன்
நாரணன் பிரித்திவிபதியார்" என்பவரை குறிப்பிடுகிறது. இவர் உத்தமச்
சோழனின் மாமனார் ஆவார். இவரது (இருங்கோளர்) மகள் "வானவன் மாதேவியார்"
உத்தமச் சோழனின் பட்டத்து அரசியாவர்கள்.
கி.பி. 992 ஆம் ஆண்டு விருத்தாசலம் கல்வெட்டு "இருங்கோளன் பிரித்திவிபதி
அமனி மல்லன்" என்ற வேளிர் குல மன்னனை பற்றி குறிப்பிடுகிறது. இம் மன்னன்
முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் இருந்திருக்கிறான். இந்த வேளிர்
அமனி மல்லனின் பட்டத்தரசி, பொத்தப்பிச் சோழன் சத்தியரையர் மகளான
"மலையவ்வை தேவியார்" ஆவார்.
அமனி மல்லனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் "இருங்கோளர் கோனான அமனி மல்லன்
சுந்தர சோழன்" விருத்தாசலம் கல்வெட்டில் (கி.பி.1014)
குறிப்பிடப்படுகிறான். இவ் வேளிர் மன்னனின் பட்டத்தரசி "கன்னரன்
மாதேவடிகள்". இவ்வரசி மிலாட்டுடையார் மகளாவார்.
ராஜாதிராஜ சோழனின் (கி.பி.1050) விருத்தாசலம் கல்வெட்டு, "விசையைபுரக்
கூற்றத்து விசையபுரத்துப் பள்ளி அமனி மல்லன்" என்ற வேளிர் அரசனை பற்றி
குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை "வன்னியர்" என்று குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் பெண்ணாடம், விக்கிரம சோழனின் கல்வெட்டு (கி.பி.1130),
"பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோள ராமன்" என்ற வேளிர் அரசனைப்
பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு இவரை "வன்னியர்" என்று
குறிப்பிடுகிறது.
திட்டக்குடி வட்டம் வசிஷ்டாபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழனின்
கல்வெட்டு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த "தேனூர் துண்டராயன்
திருச்சிற்றம்பலமுடையார்" என்ற குறுநில மன்னனை பற்றிக் குறிப்பிடுகிறது.
இவர் "நாவலூர் இருங்கோளர்" மகளாகிய குலோத்துங்கச் சோழியார் என்பவளை
திருமணம் செய்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்க சோழனின், கோயில்பாளையம்
கல்வெட்டு, இவரை "துண்டராயன் திருவிராடன் குன்றன்" என்றும் இவருடைய அரசி
பெயர் "குலோத்துங்கச் சோழியார்" என்றும் குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக