செவ்வாய், 21 மார்ச், 2017

மைசூர் ஹஸன் ஹசன் துவரை தமிழ் பகுதி வேளிர் வன்னியர் ஹொய்சளர்

aathi tamil aathi1956@gmail.com

26/7/16
பெறுநர்: எனக்கு
Nmurali Naicker
Appended below are the "Dravida Thai" of Thiru. Devaneya Pavanar (Page
- 55 to 57) :
கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது
ஹலெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு.
2000 ஆண்டுகட்கு முன்னர் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது
துவராபதி எனவும் வழங்கும்.
நச்சினார்க்கினியர், "அகத்தியனார்...
.....துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்
பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு
போந்து காடு கெடுத்து நாடாக்கி" எனத் தொல்காப்பியப் பாயிரயுரையிலும்
"மலையமாதவன் நிலங்கடந்த நெருமுடியண்ணலுழ
ை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைச் குடிப்பிறந்த வேளிர்க்கும்" என
அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.
பண்டைச் சேரநாட்டின் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது.
கடைக்கழக காலத்தில் மைசூர்த் துவரை நகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும்
தமிழ்ச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில்
தோன்றிக் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த
வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில்
அவர்க்கு இடையுறு செய்யவந்த ஒரு புலியை அவர் எவற்படி கொன்றமையால்
புலிகடிமால் எனப்பட்டானென்றும் குறப்படுவன் :
"நியே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே
ஆண்ட னுடைமையிற் பாண்கடனாற்றிய
ஒளியற் கண்ணிப் புலிகடி மா அல்"
என்று கபிலர் பாடுதல் காண்க.
பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தில் (Halebid)
நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக் கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே.
பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில்
ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக