செவ்வாய், 21 மார்ச், 2017

மலேயா கணபதி மலாயா வீரசேனன் மலேசியா

aathi tamil aathi1956@gmail.com

27/7/16
பெறுநர்: எனக்கு
இவர்தான் உண்மையான கபாலி – மலேசியாவில் போராடிய தஞ்சை தமிழன் !

எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 – இறப்பு:மே 4, 1949)
என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி
செயல்பாட்டாளர். இவர் மலேசியாவில் இந்திய மக்களுகாக போராடியதை தான்
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் காட்டியுள்ளனர்

எஸ். ஏ. கணபதி யார் ?

எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம்
ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர்
வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது
சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார்.
இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி
சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.
அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக
சுதந்திர அரசாங்கத்தைஇந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army)
நடத்தி வந்தனர்.

அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார்.
மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP)
கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி
புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம்

இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது.

எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்
மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின்
அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி
ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப்
பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க
சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது.

10 காசு சம்பள உயர்வு போராட்டம்

மலாயா ரப்பர் தோட்டங்களில் சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60
காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன.
சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே
பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள
முறையால் இந்தியர்களுக்கு 50 காசு மேல் சம்பளம் தர மறுத்தனர்.(கபாலியில்
இடம் பெற்ற காட்சி) அப்போதே 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர் . இது
நடந்தது 1940ல்

கடுமையான கட்டுபாடுகள்

அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான
கட்டுப்பாடுகளை விதித்தது. நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல்
தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது.
நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும்
அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்;
சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று
போராட்டத்தில் இறங்கினார்.

மரண தண்டனை

எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய
தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே
ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின்
நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில்
இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த
நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் (Waterfall Estate)
இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும்
துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டது.

உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரைக்
காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை
மேற்கொண்டார்.

நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை
மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு
எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

1 கருத்து:

  1. கபாலி திரைப்படத்திற்கும் மலாயா கணபதியின் வரலாறுக்கும் துளியும் தொடர்பில்லை.மலாயாவில் கடந்தக்காலங்களில் நிகழ்ந்த தொழிலாளர் போராட்டத்தை ஒரு மையமாக கொண்டும் இங்கு கல்வியல் நிலையில் வாய்ப்பு மறுக்கப்படுவதை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு கபாலி படம் உருவாக்கப்பட்டுள்ளது.மலாயா கணபதி மேற்கொண்ட போராட்டம்,செயல்பாடு என எதுவும் இப்படத்தில் இல்லை.

    பதிலளிநீக்கு