செவ்வாய், 21 மார்ச், 2017

நவீனா வன்னியர் உண்மை சாதி சுவாதி ஸ்வாதி நாடகக்காதல்

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
"விழுப்புரத்தில் ஒரு சுவாதி": நாடகக் காதலால் மீண்டும் ஒரு படுகொலை -
இதுதான் சாதி ஒழிப்பு புரட்சியா?"
# justice4naveena
--------------------------------------
சாதிஒழிப்பு நாடகக் காதல் கும்பலால் தூண்டப்பட்ட - விழுப்புரம் காலனியை
சேர்ந்த 30 வயதாகும் செந்தில், 17 வயதாகும் வன்னியர் இனப் பெண்ணை
பெட்ரோல் ஊற்றி எரிந்த வாறே கட்டிப்பிடித்துள்ளார். அவர் இறந்துவிட்டார்.
அந்தப்பெண் உயிருக்கு போராடுகிறார்.
"காதல் பிரச்சினையால் தாழ்த்தப்பட்டவரின் கைகால்களை வன்னியர் ஒருவர்
வெட்டினார்" என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி, இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகை, ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கட்சி ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டில்
சாதிவெறி பிரச்சாரம் செய்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான பொய்ச்செய்தியை வைத்து, புதிய தலைமுறை
தொலைக்காட்சி பரபரப்பாக செய்தி வெளியிட்டது . இதற்காக 'நேர்ப்படப் பேசு
நேரலை நிகழ்ச்சியை நடத்தி' - சுப. வீரமாண்டியன், சிவகாமி, உள்ளிட்டோரை
அபாண்டமாக பேச வைத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி.
இதற்காக, வன்னியர்கள்தான் செந்திலை வெட்டினர் என்று போலி சான்றிதழ் பெற
முயற்சித்தது, எஸ்.ஆர்.எம். பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி.
இப்போது அதே சம்பவம் படுகொலையில் முடிந்துள்ளது.
--------------------------------------
செய்தி (30.07.2016): ஒருதலை காதலால் நேர்ந்த விபரீதம்
விழுப்புரம் : ஒருதலை காதலால் நிகழும் விபரீத சம்பவங்கள் அதிகரித்து
வரும் நிலையில், விழுப்புரத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒருதலை காதல் காரணமாக இளைஞர் ஒருவர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி, தீ
வைத்துக் கொண்டதுடன், தீயுடன் தான் காதலித்த பெண்ணையும்
கட்டிப்பிடித்துள்ளார். இதனால் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(30). இவர் வேன்
டிரைவராக இருந்து வருகிறார். இவர் மா.பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீனா
(17) என்ற பெண்ணை கடந்த ஓராண்டாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ப்ளஸ் 2 படிக்கும் மாணவியான
நவீனாவிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி செந்தில் பலமுறை கூறி
உள்ளார். நவீனா அதனை ஏற்க மறுத்து விட்டார். இந்த விவகாரம் தெரிந்த
நவீனாவின் பெற்றோர், அவரது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டிலேயே
வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஒருநாள் செந்தில், போதையில் ரயில்வே டிராக்கில்
விழுந்துள்ளார். இதில் ரயில் மோதியதில் செந்திலின் ஒரு காலும், கையும்
துண்டானது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது செந்திலும் அவரது வீட்டாரும்,
நவீனாவின் உறவினர்கள் தான் செந்திலின் காதல் தெரிந்து அவரது கை, காலை
துண்டித்து விட்டதாக கூறி உள்ளனர். விசாரணையில், ரயில் மோதியதாலேயே
செந்திலுக்கு கை, கால் போனது தெரிய வந்தது. இதனால் பொய் புகார்
அளித்ததற்காக செந்திலை போலீசார் கைது செய்தனர். சிறைக்கு சென்று விட்டு
திரும்பிய செந்தில், பெட்ரோலை வாங்கிக் கொண்டு, ஆட்கள் இல்லாத சமயம்
பார்த்து நவீனாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த நவீனாவிடம் காதலை ஏற்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு நவீனா மறுத்ததுடன், கோபமாக திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
செந்தில், தான் வாங்கிச் சென்ற பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ
வைத்துள்ளார். பின்னர் நவீனாவை கட்டிப்பிடித்துள்ளார். இவர்களின் அலறல்
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் முதலில் நவீனாவையும், பின்
செந்திலையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 80 சதவீதம் காயங்களுடன்
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். இதில் செந்தில் சிகிச்சை பலன்
அளிக்காமல் உயிரிழந்தார்.
http://www.dinamalar.com/news_detail.asp?
id=1574951
------------------------------------------------
விரிவான பின்னணி:
(எனது முகநூல் பதிவு: https://
www.facebook.com/ArulPasumai/posts/
1175852932440460
"புதிய தலைமுறை கும்பலின் படுபயங்கர சதி: வடதமிழ்நாட்டை கலவர
பூமியாக்கும் படுபாதகத் திட்டம் அம்பலம்!"
30 ஜூலை, 09:51 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக