செவ்வாய், 21 மார்ச், 2017

பழங்குடி ஆதிவாசி மகளை திருமணம்

aathi tamil aathi1956@gmail.com

5/8/16
பெறுநர்: எனக்கு
Pasumai Shahul , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
மலைக்க வைத்த மலேஷியா...!-பகு
தி-7
*****************************************
********பார்த்தே இன பழங்குடிகள்*******
இந்த பழங்குடிகளில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்யாமல்
துணிகளில் சுற்றி மரத்தில் தொங்க விட்டு விடுவார்கள். கழுகுகளுக்கும்,
மாமிச பட்ஷிகளுக்கும் அந்த உடல் இரையாகி விடும்.
இந்திய பழங்குடிகளில் சில குழுக்களும் இதுபோன்ற முறையை
கடைபிடிக்கிறார்கள். இறந்தவர் உடலை பாறைகளின் மேல் போட்டுவிட்டு வந்து
விடுவார்கள். அந்த உடல் காட்டு விலங்குகளுக்கு உணவாகி விடும்.
இவர்களின் திருமண முறையும் மாறுபட்டது. பிடித்த பெண்ணுடன் ஒருவாரகாலம்
வாழ்ந்துவிட்டு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த முறை நமது நீலகிரியின் தோடர் இன பழங்குடிகளிடமும் புழக்கத்தில்
இருந்து வந்திருக்கிறது.
பொதுவாக சில பழங்குடிகளிடம் உறவுமுறைகள் இருப்பதில்லை.கு
றிப்பாக நான் கேரளத்தின் வள்ளக்கடவு வனத்தில் சந்தித்த மலப்பண்டாரம்
பழங்குடிகள் தமது சொந்த மகளையே திருமணம் செய்து கொள்கிறார்கள். குடும்ப
அமைப்பு அவர்களிடம் இருப்பதில்லை. குழுவாகவே வாழ்கிறார்கள்.
ஆனால் பார்த்தே இனத்தில் ஓரளவு உறவுமுறைகளை கடைபிடிக்கிறார்கள்!
இந்திய பழங்குடிகள் நீளமான மரக்குச்சிகளால் மீன்பிடித்தல், வேட்டையாடுதல்
முதலியவற்றை செய்வார்கள்.
அதுபோலவே பார்த்தே இன மக்களும் நெடுநீண்ட மூங்கில் கழியில் விஷம் தடவிய
ஊசியான சிறு ஊசிக்குச்சியை வைத்து வேட்டை விலங்குகள் மீது குறிபார்த்து
ஊதுகிறார்கள். விஷம் தோய்ந்த அந்த குச்சியால் குத்துப்பட்ட அந்த விலங்கு
சிறிது தூரம் ஓடிச்சென்று விழுந்துவிடும்.
விஷம் பட்ட பகுதியை வெட்டி எறிந்துவிட்டு மற்றவற்றை சமைத்து உண்ணுகிறார்கள்.
இந்த மக்கள் குறைவான வசதிகளோடு வாழ்ந்தாலும், நிறைந்த சந்தோஷத்தோடு
வாழ்ந்து வருகிறார்கள்!
முக்கியமாக இயற்கையோடு இணந்து வாழ்வதால் நோய்கள் இவர்களை விட்டு தள்ளியே நிற்கிறது.
இயற்கையின் பேராற்றலை படிப்பறிவே இல்லாத பழங்குடிகள் புரிந்து
வைத்திருக்கிறார்கள். ஆனால் மெத்தப்படித்த நாம்தான் இயற்கையின் அருமையை
இன்னமும் உணராமல் இருக்கிறோம்.
யானைகளின் வலசை பாதைகளை ஆக்கிரமித்தும், காட்டின் நடுவே பணத்தாசையால்
ரிசார்ட்டுகள் உருவாக்கியும் நம் கோரமுகத்தை காட்டிக்கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் வன விலங்குகளுக்கு நம்மை கண்டால் பிடிப்பதே இல்லை.
ஆனால் காட்டில் வாழும் பழங்குடிகளை இந்த வனவிலங்குகள் எப்போதும் தொல்லை
செய்வதே இல்லை.....!
(முற்றும்.......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக