|
27/10/16
![]() | ![]() ![]() | ||
Nakkeeran Balasubramanyam
தீப + ஆவளி என்பது தீபாவளியாயின்,
அதாவது தீபம் எனும் விளக்கு, வரிசையாய் ஒழுங்குபடுத்தி வைத்துக்
கொண்டாடுதல் எனக் கொள்ளலாமென்கின்றனர் சிலர்.
தீபம் + ஒளி என்பது தீபவொளி என்றும் பின்னர் தீபாவளி என்றும் ஆனதாக
ஒருவர் விளக்கமளித்தார். 'ஓஓஓ' என்றேன்.
'தீய்வம்' (தீ > தீய்வு > தீய்வு + அம்) என்பது தீவம் என்றாகிப் பின்னர்
தீபம் என்று திரிந்ததாகப் பாவாணர் கூறுகிறார். நாட்டுப்புரங்களில்
இன்றும் தீபத்தைத் தீவம் என்று கூறுதல் கண்கூடு.
ஆகு + வழி என்பது ஆகுவழி ஆகி, பின்னர் ஆவழி என்றும் பின்னும் ஆவளி
என்றும் திரிந்துள்ளது. ஆவளித்தல் என்பது, ஆகுநெறியில் செலுத்துதல்,
ஒழுங்குபடுத்துதல், வரிசைப்படுத்துதல் எனப் பொருள்பட்டது.
சிறுவயதில் எமது ஆயா (ஐயனைப் பெற்றவள் ஆயா) 'தீவளிக்குத் தீவளி' என்று
அடிக்கடிக் கூறக் கேட்டுள்ளேன். அவர் காலம்வரை தீபாவளியைத் தீவளி
என்றுதான் கூறுவார். சிலர் தீவாளி என்றும் (திரையரங்கங்களில் அன்று
வைத்திருந்த தீ வாளியோ!?) கூறக் கேட்டுள்ளேன்.
எனக்குள் ஒரு கேள்வி.
இங்குள்ள 'கார்த்திகை'த் திருவிழா ஏன் அப்படிக் கூறப்படவில்லை.
உண்மையில், தீபாவளியைவிடக் கார்த்திகையன்றுதானே நாம் விளக்கினை வரிசையாக,
நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்? நான் பார்த்தவரை
தமிழர் எவரும், (எம்முடைய இந்த ஐம்பத்தாறு வருட வாழ்க்கையில்) கார்த்திகை
தவிர்த்துத் தீபாவளியன்று இப்படித் தீபத்தினை வரிசையாய் ஏற்றிவைத்துக்
கொண்டாடியதைக் கண்டதில்லை.
எது எப்படியாகினும், 'தீபம்' என்று தமிழர் (தமிழர் மட்டுமே) கொண்டாடுவது,
தீபத் திருநாளாம் கார்த்திகைத் தீபத்தையே என்றறிகிறோம்.
10 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக