செவ்வாய், 21 மார்ச், 2017

ஹிந்தியா நீதிமன்றம் அநியாய தீர்ப்பு போபால் விஜய்மல்லையா சஞ்சய்தத் பேரறிவாளன்

aathi tamil aathi1956@gmail.com

12/6/16
பெறுநர்: எனக்கு
Anbarasan .
கொல்லப்பட்டவரே உயிரோடு திரும்பி வந்து 'தான் கொல்லப்பட்டது உண்மைதான்'
எனச் சொல்லவில்லையென விடுவிக்கப்பட்டார் செயேந்திரர்.
சல்மான்கானும் சஞ்சய்தத்தும் சிறைக்கு உல்லாசச் சுற்றுலா சென்று வந்தார்கள்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் மூன்று மாணவிகளையும் உயிரோடு கொளுத்திக்
கொன்றார்களென மூவர் வெளிவந்தார்கள்.
உலக வரலாற்றில் 'குமாரசாமி கணக்கு' என்ற சூத்திரமே உருவானது ஒரு
உலகப்புகழ் தீர்ப்பால்.
போபால் நச்சுவாயு குற்றவாளி ஆன்டர்சனை ராச மரியாதையோடு வழியனுப்பி
வைத்தது இந்திய அரசாங்கம்.
லலித் மோடிகளுக்கும் விசய் மல்லையாக்களுக்கும் அதே மரியாதையைச் செய்யத்
தவறவில்லை இந்திய அரசு.
பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகள், தோண்டத்தோண்டப் பூதமென பரபரப்பை
ஏற்படுத்திய பிஆர்ஜி மீதான கிரானைட் கொள்ளை தொடர்பான நூற்றுக் கணக்கான
வழக்குகளையும் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி! செய்தார் ஒரு
நீதிமான்.
இதுதான் இந்தியா, இதுதான் இந்திய அரசாங்கம், இதுதான் இந்திய நீதி.
இவர்களுக்கு குற்றவாளிகளைத் தண்டிக்கத் தெரியாது, நிரபராதிகளை
விடுவிக்கத் தெரியாது.
உங்கள் மனச்சான்றைத் தொட்டுச் சொல்லுங்கள்- இந்திய அரசால் வழக்குப்
பதியப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு? இந்திய நீதிமன்றத்தால் தண்டனை
அறிவிக்கப்பட்டு தண்டனைக் காலத்தையும் கடந்து அனுபவிக்கிற எவரும் உண்மைக்
குற்றவாளியாக இருக்க முடியுமா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக