|
12/6/16
| |||
Kathir Nilavan .
படிக்காத பெரியாரும்
படிக்காசு புலவரும்
தமிழ்ப் புலவர்கள் என்றாலே எப்போதும் பெரியாருக்கு வேப்பங்காய் தான்.
தமிழ்ப்புலவர் என்றால் பெரியாரின் அகராதியில் பிச்சை எடுப்பவன், சொந்தப்
புத்நி இல்லாதவன், புளுகன் என்றே பொருளாகும்,
ஒரு முறை பெரியாரை அவரின் வீட்டில் நா.கதிரை வேற்பிள்ளை என்ற புலவர்
சந்தித்தார். அவருக்கு பாலைக் கொடுத்து உபசரித்த பெரியாரின் வாய் சும்மா
இருக்க வில்லை. புலவர்களுக்கு பகுத்தறிவு கிடையாது என்றும், அதை
உங்களுடத்திலும் பார்க்கிறேன் என்றும் கூறினாராம். ஒரே இலையில்
சோற்றையும், மலத்தையும் வைத்தால் எவருக்குத் தான் கோபம் வராமல்
இருக்கும்?
அந்த தமிழ்ப் புலவரோ குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்ததோடு
உன்னிடம் வந்ததே தவறு என்று கூறிச் சென்றாராம். தன்மானமுள்ள எந்தத்
தமிழ்ப்புலவரும் அப்படித்தானே செய்வர்.
தமிழ்ப் புலவர்களை எப்போதும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியே
வாழ்ந்து வந்த பெரியாருக்கு திடீரென்று படிக்காசு என்ற புலவர் மீதும்,
அவர் பாடிய ஒரு பாடலின் மீது காதல் பிறக்கிறது.
1967ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிக்கு வந்த போது கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்று
மொழி திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது
கருணாநிதியும் தமிழுக்கு கேடு வந்தால் பதவி விலகுவேன் என்றும் பேசி
வந்தார். பெரியாருக்கோ பொறுக்க முடிய வில்லை. இந்த முறை படிக்காசு புலவரை
துணைக் கழைத்துக் கொண்டார்.
16.3,1967இல் "விடுதலை" ஏட்டில் பெரியார் எழுதியது பின்வருமாறு:
"நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம்,
மக்களிடம் பேச்சு இவைகளை தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை,
இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! சரி! இதற்கு மேலும் சனியனான
தமிழுக்கு என்ன வேண்டும்?
தமிழ் காட்டு மிராண்டிக் காலத்து மொழி. நாகரிக காலத்திற்கு பகுத்தறிவுக்
காலத்திற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற காலத்திற்கு, 'யாயும்
ஞாயும் யாராகியரோ' என்ற காலத்திற்குத் தமிழ் பயன்படுமா? வேஷத் தமிழரை
அல்ல, உண்மைத் தமிழரைக் கேட்கிறேன். சொல்லுங்கள்.
எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்கிற மந்திரி பதவியில் உட்கார்ந்து
கொண்டு, தமிழுக்குக் கேடு வந்தால் பதவியை விட்டு விடுகிறேன் என்ற
மந்திரிக்கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச் சுவராக வேண்டிய கோயில்களை
எல்லாம் கட்டி முடிக்கும் திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் தரத்தில்
என்ன வித்தியாசம்?
ஏன், பாமர மக்களுக்கு வழியில்லா வழியில் பயப்பட வேண்டும்? என்பதற்காகவே
எழுதுகிறேன். தமிழ் பற்றிய இந்தக் கருத்து இன்றையக் கருத்தல்ல. இந்தி
எதிர்ப்புக் காலம் தொட்டு இந்தக் கருத்து தான். இது மந்திரிகளுக்கும்
தமிழுக்காக இன்று பாடுபடுபவருக்கும் தெரியும்.
'அட கெடுவாய் பல தொழிலு மிருக்கக் கல்வி (தமிழ்)
அதிகமென்றே கற்று விட்டோம். அறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக் கூத்தாடச் செப்பிடு வித்தைகளாடத்
தெரிந்தோமில்லைத் தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச் சனியான தமிழை
விட்டுத் தையலார் தம் இடமிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை என்ன சென்ம
மெடுத்து உலகிலிறக்கின்றோமே'
தமிழ் படித்தால் பிச்சைக் கூடக் கிடைக்க வில்லை. தமிழ் படித்தது பிச்சை
எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு
இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன்
ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் கற்ற
அனுபவப் புலவர் மேற் கண்ட பாடல் மூலம் எடுத்துக் காட்டி இருக்கிறார்."
மேற்கண்ட பாடலின் மூலம் கழைக் கூத்தாடி கூத்தாடிப் பிழைப்பதையும்,
செப்பிடு வித்தைக் காரன் பல வித்தைகள் செய்து பிழைப்பதையும், வாழ்வுக்காக
உடலை விற்றுப் பெண்கள் பிழைப்பதையும் கண்டுணர்ந்த படிக்காசு புலவர் தாம்
கற்ற தமிழால் பிழைக்க முடிய வில்லை என்பதை வருத்தம் மேலிட பதிவு
செய்திருக்கிறார் என்பது உண்மை தான்.
எந்தத் தமிழால் தாழ்வு நிலை பெற்றதாக படிக்காசு புலவர் கூறினாரோ அதே
தமிழால் பிற்காலத்தில் வருத்தம் துறந்து உயர்வு நிலை பெற்றதையும்
பெரியார் சொல்லத் தவறிவிட்டார்.
படிக்காசு புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழில் சந்தக் கவி
இயற்றுவதில் வல்லவரும் கூட. தொண்டை மண்டலத்தில் உள்ள பொற்களத்தூர் (தென்
களத்தூர்) எனும் ஊரைச் சேர்ந்த படிக்காசு புலவர் வைத்திய நாத தேசிகரிடம்
தமிழ் கற்றார்.
அவர் மூலம் பெரும் புலவரானவுடன் ஒரு முறை சிதம்பரம் சென்றார். நடராசர்,
சிவகாமி அம்மை ஆகியோரை மனமுருகிப் பாடியதால் அருளும் பொருளும் பெற்றார்.
அங்கிருந்த பஞ்சாக்கரப் படியில் ஐந்து பொற்காசுகளைப் பெற்றது முதல்
அவரின் வாழ்வு பெரும் மாற்றம் காண்டது.
வல்வை காளத்தி பூபதி, அரியலூர் மழவராயர், மோரூர்க் காங்கேயர், கலசை
மசக்காளி, இராம நாதபுர சேதுபதி, நெல்லை மாதைத் திருவேங்கட ஐயர் போன்ற
எண்ணற்றவர் படிக்காசு புலவர் பாடக் கேட்டு பொன்னும் பொருளும் வாரி
வழங்கினர்.
மாவண்டூர் கறுப்பண்ண முதலியார் 'தொண்டை மண்டல சதகம்' பாடியதற்காக
படிக்காசு புலவருக்கு ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
மிகப் பெரிய செல்வம் சேர்ந்த நிலையில் தன்னிடமிருந்த செல்வத்தை
இல்லாருக்கும் வழங்கினார். பின்னர் தருமபுர ஆதினம் திருநாவுக்கரசு
தேசிகரிடம் தம்மை பிணைத்துக் கொண்டு துறவு வாழ்வு நிலை அடைந்தார். அது
முதல் 'படிக்காசு தம்பிரான்' என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ் படித்தால் தமிழர்கள் வாழ்வு தாழாது என்பதற்கு படிக்காசு புலவரின்
வாழ்க்கை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவரைப் பற்றி முழுமையாக
தெரிந்து கொள்ளாமல் எவரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை அப்படியே
அரைகுறையாக எழுதுவது தான் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை போலும்.
"தமிழில் படித்தோர்க்கே வேலை வாய்ப்பு" என்ற கொள்கைக்கு உயிர் கொடுக்க
வேண்டிய பெரியார் தமிழில் படித்தால் பிச்சை கூட கிடைக்காது என்று
கூறுவதன் மூலம் தமிழ் அழிப்புக் கொள்கையை அவர் தமது உயிர் மூச்சாக
கொண்டுள்ளதை தெள்ளத் தெளிவாக உணரலாம்.
(செய்தி உதவி- படம்: தினமணி, தமிழ்மணி 29.5.16, 8.6.16 )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக